மகாலட்சுமியின் அருள் உங்களுடைய வீட்டில் முழுமையாக இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் இதுதான்.

mahalashmi5

நிறைய பேருக்கு மகாலட்சுமியின் அருள் நமக்கும், நம்முடைய வீட்டிற்கு முழுமையாக இருக்கின்றதா என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இந்த உலகத்தில் மனிதராகப் பிறந்த அனைவருக்குமே அந்த மகாலட்சுமியின் பரிபூரண ஆசிர்வாதம் நிச்சயமாக இருக்கும். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. கடவுளின் படைப்பில் அனைவருமே சரிசமம் தான். கடவுள் பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு பார்த்து ஆசிர்வாதத்தை என்றுமே வழங்குவது கிடையாது. இருப்பினும் நீங்கள் கேட்கலாம்? ‘பிறகு எதற்காக இந்த ஏழை பணக்காரர் வித்தியாசம் என்று!’ இதற்கான ஒரு தெளிவான விடையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mahalakshmi2

மகாலட்சுமியின் அருள் முழுமையாக இருப்பது என்றால் என்ன அர்த்தம்? பணம் காசை கொண்டு வந்து நம்முடைய வீட்டில், மகாலட்சுமி கையாலேயே கொட்ட வேண்டுமா என்ன? நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு, நாம் என்ன செய்ய வேண்டுமோ அதற்கான வழியை காட்டுவதுதான் அந்த ஆண்டவனின் வேலை. தவிர, பணம் காசை கொண்டு வந்து மனிதர்களது கையில் கொடுப்பது அந்த ஆண்டவனுக்கான வேலை அல்ல.

ஆண்டவன் நமக்கு காட்டக்கூடிய, அந்த வேலையை நாம் மனப்பூர்வமாக விருப்பத்தோடு, ஆர்வத்தோடு செய்யவே மாட்டோம். ‘இந்த வேலை எனக்கு தகுதியானது அல்ல, இந்த வேலை செய்தால் நான் எதிர்பார்த்த சம்பளம் எனக்கு கிடைக்காது.’ என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டே வருவோம்.

இதுவே புத்திசாலியாக இருந்தால், திறமைசாலியாக இருந்தால் கிடைத்த வேலையை செய்து அதில் வரக்கூடிய வருமானத்தை வைத்து மேலும் மேலும் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்வதற்கான வழியைத் தேடிக் கொள்வான். அவன் மகாலட்சுமியின் அருளை முழுமையாகப் பெற்றவன். சோம்பேறித்தனத்தனத்துடன், எந்த வேலை கிடைத்தாலும் அதற்கு ஒரு சாக்கை சொல்லி அதை தட்டிக் கழிப்பவன் மூதேவிக்கு சொந்தக்காரன் ஆகிவிடுகிறான்.

- Advertisement -

இன்று, நம்மில் பல பேர் கிடைத்த வேலையை செய்து கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் நமக்கு எதற்காக இந்த கஷ்டங்கள்?  காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு சந்தோஷத்தோடு, செய்யும் வேலையை தெய்வமாக மதித்து, எத்தனைபேர் அவரவருக்கான வேலையை செய்கிறீர்கள்! பத்தில் நான்கு பேர் கூட தான் செய்யக்கூடிய வேலையை இஷ்டப்பட்டு செய்வதே கிடையாது. கடமைக்காக! வேலை செய்தால் சம்பளம் கிடைக்கும், என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் தான் வேலை செய்கின்றோமோ தவிர, ஆத்மார்த்தமாக நம்மில் நிறைய பேர் பேர் வேலை பார்ப்பது கிடையாது.

mahalakshmi

ஆத்மார்த்தமாக வேலை செய்து, நீங்கள் செய்யும் வேலையை கடவுளாக மதித்து, விருப்பத்தோடு பணத்தை சம்பாதித்தால் மட்டுமே அது நம்முடைய கையில் நிரந்தரமாக தங்கும். மனதிற்கு இஷ்டமே இல்லாமல் வேலையை செய்து, வாங்கிய சம்பளம் நம் கைக்கு வந்தால் கூட, நிச்சயமாக சேமிப்பில் தங்காது. வீண்விரயம் ஆகத்தான் செய்யும்.

cash

உங்களுடைய கையில் பணம் காசு நிறைய இல்லை. ஆனால் உங்களுடைய வீட்டில் சந்தோஷம் நிறைந்து இருக்கின்றது. உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான வேலை வாய்ப்புகள், சொந்தத் தொழில் செய்வதற்கான வாய்ப்புகள், இப்படியாக பல வாய்ப்புகள் உங்கள் வீட்டு கதவை தட்டிக் கொண்டே இருக்கின்றது என்றாலும், உங்களுடைய வீட்டில் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்திருக்கிறது என்பது தான் அர்த்தம்.

வரக் கூடிய வாய்ப்புகளை நீங்கள் நிராகரிப்பது உங்களுடைய தவறு. அதை திருத்திக் கொள்ளுங்கள். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒருநாள் இல்லை என்றாலும் ஒரு நாள், நீங்கள் வாழ்க்கையில் கோடீஸ்வரராக ஆவது உறுதி என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.