எத்தனை நெய்விளக்கு ஏற்றி வைத்து, வாசம் நிறைந்த சாம்பிராணி தூபம் போட்டு மகாலட்சுமியை கூப்பிட்டாலும் இந்த வீட்டிற்குள் மட்டும் மகாலட்சுமி ஒருபோதும் வர மாட்டாள்.

mahalakshmi-vilakku
- Advertisement -

வீட்டை சுத்தம் செய்து காலை மாலை இரண்டு வேளை விளக்கு ஏற்றி வழிபாடு செய்து, வாசம் நிறைந்த சாம்பிராணி தூபம் போட்டு பூஜை செய்தாலும் இந்த வீட்டிற்குள் மட்டும் மகாலட்சுமி காலடி எடுத்து வைக்க மாட்டாள். அது எந்த வீடு தெரிஞ்சுக்க உங்களுக்கும் ஆவலா இருக்கா. அப்படி என்றால் நீங்களும் பின் சொல்ல கூடிய இந்த தவறுகளை ஒருபோதும் செய்யவே கூடாது.

ஒருவேளை பதிவை படித்து முடிக்கும் போது ‘இப்படி எல்லாம் வாழ்ந்தால் இந்த காலத்தில் வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியாது’ என்று நினைத்தால், இன்றைக்கு நீங்கள் காசு பணத்தோடு வாழ்ந்தாலும், ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் உங்களுடைய வாழ்க்கையில் பெரிய பிரச்சனை உங்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

- Advertisement -

பதிவைப் படித்து திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் திருத்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக நல்லதே நடக்கும். மூன்று வேலையும் வீட்டில் சாமி கும்பிடுகின்றேன். எங்களுடைய வீட்டில் நன்றாக வருமானம் வந்து கொண்டு தான் இருக்கிறது என்னுடைய குடும்பத்தில் பெரிய பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லை. ஆனால் வீட்டில் இருப்பவர்களிடம் உண்மை, நேர்மை, நியாயம், அன்பு என்பது கிடையவே கிடையாது என்றால் அந்த வீட்டிற்குள் மகாலட்சுமி வாசம் செய்ய மாட்டார்கள்.

நீங்கள் தவறாமல் மகாலட்சுமிக்கு வெள்ளி விளக்கு ஏற்றி, தங்க தாம்பூலத்தில் பிரசாதம் படைத்து பூஜை செய்யலாம். உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்கலாம். உங்கள் வீடு பார்ப்பதற்கு கோயிலாகவே இருக்கட்டும். ஆனாலும், அந்த இடத்திற்குள் மகாலட்சுமி நுழைய மாட்டாள். காரணம் உங்களுடைய தீய எண்ணம். அந்த எண்ணத்தை சரி செய்து கொள்ளுங்கள். அழுக்கு படிந்த வீட்டில் மட்டுமல்ல, அழுக்கு படிந்த மனசு இருக்கக்கூடிய இடத்திலும் மகாலட்சுமிக்கு இடம் இருக்காது.

- Advertisement -

சில பேர் வீட்டில் தினமும் விளக்கு ஏற்ற முடியாத சூழ்நிலை இருக்கும். அந்த வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்கள் பிள்ளைகள் என்று எல்லோருமே வேலைக்கு ஓடி ஓடி  சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுவார்கள். தினமும் வீட்டை கூட்ட முடியவில்லை, வீட்டில் வாசம் நிறைந்த சாம்பிராணி தூபம் ஏற்ற முடியவில்லை. மகாலட்சுமிக்கு நெய் விளக்கு ஏற்ற முடியவில்லை. என்பவர்களும் இந்த பூமியில் வாழத்தான் செய்கிறார்கள் ஆனால் இவர்களுடைய உழைப்பில் உண்மை இருக்கும் இவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் நேர்மை இருக்கும். இவர்கள் குறைவாக பணம் சம்பாதித்தாலும் அதில் மகாலட்சுமியின் நிறைவான ஆசீர்வாதம் கிடைத்திருக்கும்.

இப்படி கஷ்டப்படக்கூடிய வீட்டில் விளக்கு ஏற்றி சாம்பிராணி தூபம் போட்டு லட்சுமி தேவியை அழைக்கவில்லை என்றாலும் மகாலட்சுமி தாயார் வருகை தருவாள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. பூஜை புனஸ்காரங்கள் செய்து கோவிலுக்கு லட்ச இலட்சமாக நன்கொடை கொடுத்துவிட்டு, செய்த பாவங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டது என்று மட்டும் நினைக்காதீங்க. செய்த பாவத்தை தீர்ப்பதற்கு கோவிலுக்கு கொடுக்கும் நன்கொடையோ, பூஜை புனஸ்காரங்களோ நிச்சயமாக பரிகாரமாக மாறாது.

நீங்கள் செய்த பாவத்தை நினைத்து அது தவறு என்று உணர்ந்து மீண்டும் அந்த தவறை செய்யாமல் இருப்பது தான், பாவத்திற்கு உண்டான பிராயசித்தம். இன்றைக்கு உங்களிடம் காசு இருக்கிறது என்பதற்காக குறுக்கு வழியே தேர்ந்தெடுக்காதிங்க. நாளைக்கு நேர் வழியில் செல்ல வேண்டும் என்று நினைக்கும் போது ஒரு பைசா இல்லைங்க, உங்க பக்கத்துல யாருமே இருக்க மாட்டாங்க, என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -