இன்றிலிருந்து ஆரம்பமாகும் மஹாளய பட்சம்! அடுத்து வரும் 15 நாட்களுக்கு செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன?

mahalaya-amavasai
- Advertisement -

பட்சம் என்றால் 15 நாட்களை கொண்டுள்ள கால அளவை குறிக்கும் ஒரு சொல்லாகும். ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு பிறகு வரக்கூடிய தேய்பிறை நாட்களாக இருக்கும் அந்த பதினைந்து நாட்களை மஹாளய பட்சம் என்று இந்து மக்களால் பெருமளவு போற்றப்பட்டு வருகிறது. இவ்வருடம் இன்று செப்டம்பர் 21 லிருந்து வருகின்ற அக்டோபர் 5-ஆம் தேதி வரை இருக்கின்ற காலகட்டத்தை மஹாளய பட்சம் என்றும் அக்டோபர் 6ஆம் தேதி வருகின்ற அமாவாசையை மகாளய அமாவாசை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாட்களில் நாம் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன? என்கிற குறிப்புகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

amavasai

மகாளய பட்சம் பித்ருக்களுக்கு உகந்த நாட்களாக இருக்கின்றது. இந்த நாட்களில் பித்ருக்கள் உடைய ஆசிர்வாதம் பெறவும், இறை அருள் அடையவும் நாம் இறை சிந்தனையுடன் இருப்பது அவசியமாகும். மஹாளய பட்சத்தில் அரச மரத்தடி பிள்ளையாருக்கு அதீத சக்தி உண்டாகும். இந்நாட்களில் புனிதமான அந்த தெய்வீக சக்தி நிரம்பியுள்ள அரச மரத்தை வலம் வந்து வணங்குபவர்களுக்கு உடலில் இருக்கும் நோய்கள் நீங்கி நல்லதொரு சக்தி உண்டாகும். எனவே அரச மரத்தடியில் இருக்கும் பிள்ளையாரை சுற்றி தினமும் வலம் வருவது நோய் நொடியின்றி நீண்ட நாள் வாழ வழிவகுக்கும்.

- Advertisement -

மஹாளய அமாவாசையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்கள் பித்ரு சாபம் நீங்கி அவர்களுடைய ஆசீர்வாதத்தை பரிபூரணமாகப் பெறுவார்கள். அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், தவற விட்டவர்கள் இந்த மகாளய அமாவாசை அன்றைய நாளில் தர்ப்பணம் கொடுத்தால் பித்ரு சாபம் ஏற்படாமல் இருக்கும். முன்னோர்களின் ஆசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு வாழ்வில் எத்தகைய துன்பங்களும் அண்டுவதில்லை.

food

எனவே மகாளய அமாவாசையில் இறைவனுடைய அருளை பெற தானம், தர்மம் போன்றவற்றை செய்வது மிகவும் சிறப்பு. அந்தணர்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு வழி அனுப்பினால் அவர்களுடைய ஆசிர்வாதம் நமக்கு கிடைத்து புண்ணியம் பெருகும். மேலும் பசு, காகம், நாய், பூனை, எறும்பு போன்ற ஜீவராசிகளுக்கு உணவளித்து அவற்றின் பசியை ஆற்றினால் நமக்கு முன் ஜென்ம பாவ வினைகள் கூட அகலும்.

- Advertisement -

மஹாளய அமாவாசை திதியில் நம் முன்னோர்களுடைய ஆசிர்வாதம் பெற அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து முடித்த பின்பு ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது சிறப்பு. தண்ணீர் பந்தல் அமைப்பது, நீர் மோர் தானம் செய்வது கூடுதல் பலன்களை கொடுக்கும். மேலும் இந்நாளில் கருப்பு உளுந்து, கருப்பு எள், வஸ்திர தானம், வெல்லம், உப்பு, பார்லி போன்ற பொருட்களை தானம் செய்வது புண்ணியத்தை சேர்க்கும். அமாவாசையில் இந்த குறிப்பிட்ட பொருட்களை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்தால் இன்னும் உங்களுடைய சந்ததியினருக்கும் உங்கள் புண்ணியத்தில் பங்கு கிடைக்கும்.

tharpanam

மகாளய அமாவாசை பித்ருக்களுக்கு உகந்த தினம் என்பதால் பித்ருலோகம் இருக்கும் தெற்கு திசையை பார்த்து ஒரு தீபத்தை ஏற்றி அவர்களை நினைத்து உங்களுடைய துன்பங்கள் நீங்க மனதார பிரார்த்தித்தால் எவ்விதமான கஷ்டங்களும் உங்களை விட்டு நீங்கி மனதில் நிம்மதியும், தெம்பும் உண்டாகும்.

sani-bagavan

எளியவர்களின் உருவில் சனி பகவான் இருப்பதால் வறுமையின் பிடியில் இருக்கும் எளிமையான ஏழை, எளியவர்களுக்கு நீங்கள் செய்யும் எந்த ஒரு தானமும் புண்ணியத்தை பன்மடங்கு பெருக்கும். அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து, உதவிகள் செய்து வாருங்கள், சனி தோஷம் நீங்கி சனி பகவானுடைய அருளை பெறுவீர்கள். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த புண்ணிய மகாளய அமாவாசை மற்றும் மஹாளய பட்ச நாட்களை தவறவிடாமல் பயன்படுத்தி அனைவரும் பலன் பெறலாமே!

- Advertisement -