ராகி மாவு வாங்கினா 10 நிமிஷத்தில் மொறு மொறுன்னு இப்படி கூட ஹெல்த்தி தோசை சுடலாமே! எதுக்கு இனி அடிக்கடி இட்லி மாவு அரைக்கணும்?

ragi-dosai_tamil
- Advertisement -

ராகி மாவு, கம்பு மாவு போன்ற ஆரோக்கியமான தானியங்களால் தயாரிக்கப்பட்ட இந்த மாவை கொண்டு இட்லி, தோசை வார்க்கும் பொழுது எதற்கு அடிக்கடி இட்லிக்கு அரிசியை ஊற போடுறீங்க? அட்டகாசமான சுவையில் பத்தே நிமிடத்தில் எப்படி ஆரோக்கியமான மொறுமொறு ராகி தோசை சுடுவது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி அறிந்து கொள்ள போகிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தேவையான பொருட்கள்

ராகி மாவு – ஒரு கப், பெரிய வெங்காயம் – ஒன்று, கருவேப்பிலை – இரண்டு கொத்து, மல்லித்தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, பச்சை மிளகாய் – இரண்டு, தண்ணீர் – ரெண்டு கப்.

- Advertisement -

செய்முறை

ராகி தோசை தயாரிக்க முதலில் ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கப் அளவிற்கு ராகி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப மாவை நீங்கள் கூட்டி குறைத்துக் கொள்ளலாம். பின்னர் இதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் தோலை உரித்து விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி சேருங்கள். எவ்வளவு பொடியாக நறுக்க முடியுமோ அவ்வளவு பொடியாக நறுக்குங்கள்.

வெங்காயம் சேர்த்த பிறகு இரண்டு பச்சை மிளகாயை காரத்திற்கு காம்பு நீக்கி விட்டு கழுவி பொடி பொடியாக நறுக்கி சேருங்கள். பின்பு பிளேவருக்காக ரெண்டு கொத்து கருவேப்பிலை பிரஷ் ஆக உருவி கழுவி பொடி பொடியாக நறுக்கி சேர்க்கவும். இதே போல மல்லி தழையையும் நறுக்கிக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் சேர்த்த பின்பு தேவையான அளவிற்கு உப்பு போட்டு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு கப் ராகி மாவிற்கு ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

அனைத்தையும் நன்கு கலந்து கொண்டு மீண்டும் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து ரவை தோசைக்கு வார்ப்பது போல கெட்டியாக இல்லாமல் நீர்க்க கரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு மூடி போட்டு பத்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.

பத்திலிருந்து 30 நிமிடம் வரை இதனை ஊற விட்டு விட்டால் நன்கு புளித்து விடும். அதன் பிறகு நீங்கள் தோசை வார்த்தால் சூப்பராக மொறு மொறுன்னு கிரிஸ்ப்பியாக வரும். பத்து நிமிடத்திற்கு பிறகு ஒரு முறை நன்கு கலந்து விட்டுக் கொள்ளுங்கள். மாவு அடியில் தங்கிவிடும். நன்கு கலந்து விட்ட பின்பு தோசை கல்லை சூடாக்கி கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
1 கப் இட்லி மாவு இருந்தா போதும். கண்ணை மூடிகிட்டு இந்த வடையை சுட்டு எடுக்கலாமே! உளுந்து வடையை விட இந்த வடையின் டேஸ்ட் சும்மா சூப்பரா மொறுமொறுன்னு இருக்கும்.

தோசைக்கல் சூடானதும் அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்துக் கொண்டு ரவை தோசைக்கு மாவை சுற்றிலும் ஊற்றுவது போல ஊற்றி நடுப்புற பரப்ப வேண்டும். நடுவில் ஊற்றி அதன் பிறகு பரப்பக் கூடாது, தோசை வராது. இப்போது சுற்றிலும் எண்ணெய் விட்டு ஒரு புறம் நன்கு வெள்ளையாக காய்ந்து வந்ததும் அதுவே ஓரங்களில் மேலே தூக்க ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் திருப்பி போட்டு ரெண்டு நிமிடம் நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க, சூப்பரான மொறு மொறு ராகி தோசை ஆரோக்கியமான முறையில் தயார்!

- Advertisement -