மகரம் ராசியினருக்கு அதிர்ஷ்டங்கள் உண்டாக இவற்றை செய்தால் போதும்

makaram

நவக்கிரகங்களில் மிகவும் வலிமையான கிரகமாக சனி கிரகம் இருக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி செவ்வாய் கிரகமும், சனி கிரகமும் பகை கிரகங்கள் ஆகும். ஆனால் அந்த சனி பகவானுக்குரிய ராசியில் செவ்வாய் கிரகம் உச்சம் அடையும் ஒரு அதிசய ராசியாக மகரம் ராசி இருக்கிறது. இந்த மகர ராசியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் மிகுந்த செல்வமும், அதிர்ஷ்டமும் யோகங்களையும் பெறுவாதற்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

makaram

ஜாதகத்தில் இருக்கும் 12 ராசிகளில் பத்தாவது ராசியாக மகரம் ராசி வருகிறது. இந்த மகரம் ராசிக்கு அதிபதி சனி பகவான் ஆவார். சனி மற்றும் செவ்வாய் கிரகத்தின் தாக்கம் மகர ராசியில் அதிகமிருப்பதால் உறுதியான உடலும், மனம் கொண்டவர்களாக இவர்கள் இருக்கின்றனர். எப்போதும் உழைப்பதற்கு ஆர்வமாக இருக்கும் ராசிகளில் மகரம் ராசியும் ஒன்று. மகர ராசியினர் கீழ்க்கண்ட பரிகாரங்களை திட நம்பிக்கையுடன் செய்து வருவதால் வாழ்க்கையில் விரும்பிய பலன்களை பெற முடியும்.

மகர ராசியினர் தங்கள் வாழ்வில் மிகுதியான அதிர்ஷ்டத்தையும், யோகங்களையும் பெறுவதற்கு வருடத்திற்கு ஒருமுறையாவது திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வெங்கடாசலபதியை வழிபாடு செய்ய வேண்டும். அதே போன்று ஒரு மாதத்திற்கொரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். உங்கள் வீட்டிற்கருகில் இருக்கும் கோயிலுக்கு சனிக்கிழமை தோறும் தீபமேற்றும் எண்ணையை தானமாக கொடுத்து வருவதால், உங்களின் கிரக தோஷங்கள் நீங்கி வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.

Perumal

செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று, அனுமனுக்கு தீபமேற்றி வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். நவக்கிரக சன்னிதியில் சனிபகவானுக்கு சங்கு பூக்களை சமர்ப்பித்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனி காயத்ரி மந்திரங்கள் துதித்து சனீஸ்வர பகவானை வழிபட வேண்டும். வசதி குறைந்த மக்களுக்கு இரும்பினால் செய்யப்பட்ட பாத்திரங்கள் அல்லது இன்ன பிற இரும்பு பொருட்களையும் வழங்குவது நல்லது. உடல் ஊனமுற்றவர்களுக்கு சனிக்கிழமை தினத்தில் புத்தாடை தானம் செய்வது உங்களுக்கு சனி பகவானின் அருட்கடாட்சத்தை முழுமையாக பெற்றுத் தரும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
உங்களின் பணக்கஷ்டங்களை போக்கி நன்மைகள் அருளும் ஆன்மீக பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Makaram rasi tips in Tamil. It is also called as Makaram rasi pariharam in Tamil or Jothida rasi pariharam in Tamil or Rasi pariharam in Tamil or Makaram rasi in Tamil.