உங்க வீட்ல இருக்க ரோஜா செடியிலும், மற்ற பூச்செடிகளிலும் நிறைய பூச்சிகள் இருக்கா? உங்க கையாலேயே இந்த, இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தை தயாரித்து போடுங்கள்.

rose-plant
- Advertisement -

நம்முடைய வீட்டில் செடிகளை ஆசையாக வாங்கி வைத்து, வளர்த்து, பராமரித்து வந்தால் கூட, அந்தச் செடிகளில் பூச்சிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. செடிகள் என்று இருந்தால் பூச்சிகள் அறிக்கத் தான் செய்யும். குறிப்பாக ஆரம்பகாலத்தில் செடிகளின் இலைகளில், கருப்பு நிற புள்ளிகள் வந்து, அதன் பின்பு பழுப்பு நிற இலைகளாக மாற ஆரம்பிக்கும். அதன் பின்பு இலைகள் எல்லாம் தானாக உதிர்ந்து போகும். உங்க வீட்டு ரோஜா செடிக்கும் இந்த பிரச்சனை இருக்கா! உங்கள் வீட்டு  பூச்செடிகளை எப்படி பத்திரமாக பாதுகாக்கலாம் என்பதைப் பற்றியும், நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, எப்படி பூச்சிக் கொல்லி மருந்தைத் தயாரிக்கலாம் என்பதை பற்றியேம் இந்த பதிவின் மூலம் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

rose

சின்னச்சின்ன செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு ஸ்பிரே பாட்டில் இருக்கும். முதலில் அந்த பாட்டிலை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் வேப்ப எண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும். அதன்பின்பு பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் சோப்(சிறிதளவு) அல்லது பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் லிக்விட்(1 ஸ்பூன்) இதில் 5 ஸ்பூன் அளவு தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக, 1/4 ஸ்பூன் சமையல் மஞ்சள் தூள், 1/4 ஸ்பூன் பெருங்காயப்பொடி, இவைகளோடு 100ml தண்ணீரையும் அந்த பாட்டிலுக்குள் சேர்த்து நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும். எந்த செயற்கையான பொருட்களையும் கலக்காத பூச்சிக்கொல்லி மருந்து தயார். (பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் சோப் செயற்கையானது என்று நினைத்தாலும் கூட, அது நம் சாப்பிடும் பாத்திரங்களை கழுவ பயன்படுத்துகின்றோம். அதைப் பயன்படுத்துவதில் தவறில்லை.)

ஆனால் வேப்பெண்ணெயானது, நேரடியாக செடிகளின் வேர் மீது பட்டாலும், இலைகள் மீது பட்டாலும், செடி பட்டுப் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஸ்பூன்(சாப்பாடு சாப்பிட பயன்படுத்தப்படும் சிறிய அளவு ஸ்பூன்) அளவிற்கு மேல் கட்டாயம் வேப்ப எண்ணையை பயன்படுத்த கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், வேப்பெண்ணையை பயன்படுத்துவதன் மூலமாக தான் செடிகளில் இருக்கும் ஒட்டுண்ணி பூச்சிகள் விரட்டப்படும்.

- Advertisement -

வெள்ளை நிற பூச்சு, பச்சை நிற பூச்சு, சிலந்தி வடிவில் இருக்கும் பூச்சு, இப்படிப்பட்ட எந்த பூச்சும் உங்களது செடியை நெருங்கவே நெருங்காது. இந்த பூச்சி கொல்லி மருந்து ஸ்பிரே பாட்டிலில் வைத்து லேசாக எல்லா செடிகள் மீதும் படும்படி அடித்துவிட வேண்டும்.

rose-plant-spray

முதலில் தண்ணீரை ஊற்றி விட்டு, அதன் பின்பு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க வேண்டும். காலையில் 6 மணிக்கு பூச்சிக்கொல்லி மருந்தினை அடிக்கலாம். இதேபோல் மாலை 6 மணிக்கு முன்பாக பூச்சிக்கொல்லி மருந்தை அடித்து  விடுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை அடிக்கலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தால் செய்தால் போதும்.

- Advertisement -

தொடர்ந்து இப்படி செய்து வர, உங்கள் வீட்டு பூச்செடிகளை பூச்சிகள் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். சில சமயம் நீங்கள் செடிகளை பராமரிக்காமல் விட்டு வைத்தால், பூச்சிகளின் தொல்லை அதிகமாகி விடும். அந்த சமயத்தில் எந்தெந்த கிளைகளில் பூச்சிகள் அதிகமாக இருக்கின்றதோ, அதை வெட்டி விடுவது தான் புத்திசாலித்தனம். செடி வீணாகி விடுமோ என்று அந்தக் கிளைகளை வெட்டாமல் அப்படியே வைத்திருந்தால், உங்களது செடி பட்டுப்போய் விடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

cutting-rose-plant

உங்கள் வீட்டில், நீங்கள் வாங்கி வைத்திருக்கும் அந்த செடிகளுடன், காலையில் 10 நிமிடமும், மாலையில் 10 நிமிடமும், முடிந்தால் பேசிப் பாருங்கள்! கட்டாயம் அந்த செடிகளுக்கு புரியும். ஆசையோடும், ஆர்வத்தோடும் நாம் செய்யும் எந்த ஒரு செயல்பாடும் வீணாகி போகாது. செடிகள் செழிப்பாக வளர நாம் காட்டும் பாசமும் ஒரு காரணம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்களுடைய வாழ்க்கையையே புரட்டிப் போடக்கூடிய தத்துவங்கள்! இந்தப் பிரபலம் அப்படி என்னதான் சொல்லி இருக்கின்றார்? ஒருமுறை நீங்களும் படிச்சு தான் பாருங்களேன்!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Iyarkai poochi kolli marunthu in Tamil. Natural insecticide for plants. Poochi kolli marunthu in Tamil. Roja chedi poochi. Iyarkai poochi viratti in Tamil.

- Advertisement -