உங்க வீட்டு பூச்செடிகள் நல்ல அடர்த்தியான நிறத்தில் பூ பூக்க என்ன செய்யணும்? இது தெரிஞ்சா இனி சமையல் கட்டில் இதை குப்பைன்னு நினைக்கவே மாட்டீங்க!

rose-plant-carrot
- Advertisement -

நாம் சமையல் கட்டில் பயன்படுத்தும் பல பொருட்கள் நம்முடைய பூச்செடிகளுக்கு நல்ல ஒரு உரமாக அமையும் தெரியுமா? வேண்டாம் என்று தூக்கி எறியும் இந்த ஒரு சில பொருட்களில் கூட ஏராளமான சத்துக்கள் ஒளிந்து கொண்டிருக்கும். இதை வீணடிக்காமல் பூச்செடிகள், மற்ற காய், கனி செடிகளுக்கு உரமாக பயன்படுத்துவதன் மூலம் செழிப்பான தோட்டத்தை நீங்கள் காணலாம். உங்க வீட்டு தோட்டத்தில் இருக்கும் பூக்கள் நல்ல ஒரு அடர்த்தியான நிறத்தில், கலராக பூ பூக்க என்ன செய்யணும்? என்பதைத்தான் இந்த தோட்ட குறிப்பு பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.

பூச்செடிகள் பொதுவாக நல்ல ஒரு அடர்த்தியான நிறத்தில் பெரிது பெரிதாக பூக்கும் பொழுது பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். எல்லாவிதமான பூச்செடிகளுக்கும் தேவையான உரம் நம் வீட்டுக் கிச்சனிலேயே ஒளிந்து கொண்டிருக்கிறது. அதுவும் வேண்டாம் என்று தூக்கி எறியும் பொருட்களில் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக வெட்டிய காய்கறிகளில் உள்ள சத்துக்கள் பூச்செடிகளின் நிறத்திற்கு நல்ல ஒரு ஊட்டச்சத்தை கொடுக்கும்.

- Advertisement -

அப்படி ஒரு காய்கறி வகைகளில் கேரட்டும் ஒன்று! கேரட், பீட்ரூட், முட்டை கோஸ், உருளைக்கிழங்கு போன்ற எந்த காய்கறிகளையும் நீங்கள் முழுமையாக துருவி பயன்படுத்துவது கிடையாது. அது கடைசியாக சிறிதளவு வீணாகத்தான் போகிறது. அடிபட்ட பகுதிகளை கூட நாம் குப்பையில் எரிந்து விடுவோம். இதுபோன்ற வீணடிக்கும் பொருட்களை கூட நாம் பயன்படுத்தி செடிகளை பிரைட் ஆக பூக்க செய்யலாம்.

சமையல் கட்டில் பொரியலுக்கு கேரட்டை துருவுகிறோம் என்றால், அதை முழுமையாக யாரும் துருவுவது கிடையாது. கொஞ்சம் பாகம் வீணாகத்தான் செல்லும். இந்த வீணாகிய கேரட்டை கூட நீங்கள் துருவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த துருவிய கேரட் ஒரு கைப்பிடி அளவிற்கு இருந்தால், அதில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி ரெண்டு அல்லது மூன்று நாட்கள் வரை நன்கு புளிக்க விட்டு விடுங்கள். புளிக்கும் பொழுது தான் நுண்ணுயிரிகளும், ஊட்டச்சத்துக்களும் அதிகரிக்கின்றன.

- Advertisement -

புளித்த பின்பு அதனுடன் மூன்று மடங்கு தண்ணீரை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இதை நன்கு வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வடிகட்டிய தண்ணீரிலிருந்து அரை மக்கு வீதம் ஒவ்வொரு ரோஜா மற்றும் மற்ற பூச்செடிகளுக்கும் வேர் கால்களில் ஊற்றி வாருங்கள். இது போல வாரத்திற்கு இரண்டு முறை நீங்கள் தாராளமாக செய்து வரலாம். இந்த தண்ணீர் மீதம் இருந்தாலும் அதை வீணடிக்காமல் இரண்டு நாட்கள் வரை வைத்திருந்து அதில் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து வைத்து பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே:
பூக்காத மல்லி செடியும் கொத்துக் கொத்தாக பூக்க, மாதம் ஒரு முறை இந்த உரத்தை கொடுத்தால் போதும். ஒரே செடியில் இவ்வளவு பூ பூக்கும்ன்னு தெரிஞ்சா உங்க தோட்டம் முழுவதும் இனி மல்லி செடியை தான் வளர்ப்பீங்க.

இது போல எந்தவிதமான காய்கறியையும் நீங்கள் துருவி புளிக்க விட்டு பயன்படுத்துவதன் மூலம் அதில் இருக்கும் சத்துக்கள் முழுமையாக செடிகளுக்கு சென்றடையும். கேரட்டில் ஏராளமான மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் நீர்சத்துக்கு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை செடிகளுக்கு கொடுக்கும் பொழுது ரோஜா பூக்கள் நல்ல ஒரு நிறத்தை கொடுக்கும். அதன் நிறமே நமக்கு கண்களை பறிக்கும் அளவிற்கு அடர்த்தியாகவும் இருக்கும் எனவே பூக்கள் பெரிது பெரிதாகவும், நல்ல ஒரு நிறத்துடனும் பூக்க இப்படிப்பட்ட உரங்களை இயற்கையான முறையில் 10 பைசா செலவில்லாமல் பயன்படுத்துங்கள்.

- Advertisement -