மல்லி செடி கொத்துக் கொத்தாக பூத்து தள்ள வீணாக தூக்கிப் போடும் இந்த பொருள் இருந்தால் போதும். ஒரு முறை இதை தந்தாலே போதும் வருசம் முழுவதும் மல்லி செடி குலுங்கிட்டே இருக்கும்.

jasmine plant
- Advertisement -

வீட்டில் தோட்டம் வைத்து வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அங்கு நிச்சயம் மல்லிச் செடியும் இடம் பிடித்து விடும். இந்த மல்லிச்செடியை பொறுத்த வரையில் வாங்கி வைத்த உடனே பூத்து குலுங்கி விடாது. அது வேர்ப் பிடித்து தழைத்து வளர காலம் எடுக்கும். இந்த உரத்தை கொடுக்கும் பொழுது மல்லி செடி ஒரு மாதத்திற்குள்ளாகவே நன்றாக வேர்க் பிடித்து பூத்துக் குலுங்கும். அது என்ன என்பதை வீட்டு தோட்டம் குறித்த இந்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இப்போது அந்த இயற்கை உரத்தை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த உரத்தை தயாரிக்க முதலில் வெங்காயத் தோல் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் எலுமிச்சை பழத்தோல் பாதி அளவு மட்டும் எடுத்துக் கொண்டால் போதும். இதற்கு காய்ந்து பிறகு தூக்கி வீணாக போடும் பழத்தின் தோல் இருந்தால் கூட போதும். புதிதாக தான் வாங்கி சேர்க்க வேண்டும் என்று அவசியம் கிடையாது இத்துடன் ஒரே ஒரு ஸ்பூன் சாண் எரு இருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது கலந்த இந்த மூன்றையும் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் சேர்த்து ஒரே ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு இரண்டு நாள் வரை வெயில் படாத இடத்தில் வைத்து விடுங்கள். இரண்டு நாட்கள் கழித்து இந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு தொட்டியில் இருக்கும் செடிக்கு அரை டம்ளர் இந்த உரக்கரைசலுக்கு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து ஊற்றினால் சரியாக இருக்கும். ஒரு வேளை உங்கள் செடி பெரிதாக இருந்தால் அதற்கு ஏற்றார் போல் உரத்தின் அளவை கூட்டிக் கொள்ளுங்கள்.

இந்த உரத்தை மாதம் ஒரு முறை மட்டும் செடிகளுக்கு கொடுத்தாலே போதும். செடிகள் நன்றாக வேர்ப் பிடித்து மொட்டுக்கள் அதிகமாக வைத்து நன்றாக பூக்க ஆரம்பிக்கும். மல்லி செடியை பொறுத்த வரையில் பூக்கள் பூத்த உடன் பறித்து விட வேண்டும். பறித்த இடத்தில் சின்னதாக குரோனிங் செய்து விட வேண்டும். மல்லி செடிக்கு எப்போதும் குரோனிங் செய்வது மிக மிக முக்கியம். இதை தவறாமல் செய்தாலே அடுத்தடுத்த கிளைகள் வைத்து அதிக மொட்டுக்கள் வைக்கும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்தச் செடிக்கு வெயில் படுவது மிகவும் அவசியம் குறைந்தது 4 அல்லது 5 மணி நேரமாவது வெயில் பட வேண்டும். அதுத்துடன் மல்லி செடியை சுற்றி எப்பொழுதும் ஈரப்பதம் இருக்கும் படியும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஈரப்பதம் இல்லை என்றாலும் செடிகள் வாடி விடும். தண்ணீர் ஊற்றும் போது முழுவதுமாக மண் காய்ந்த பிறகு உற்றக் கூடாது. இதனால் வேர்கள் அழுகிவிடக் கூடிய வாய்ப்பு அதிகம். இதையெல்லாம் சரியாக செய்து இந்த உரத்தையும் கொடுத்தால் செடிகள் நன்றாக பூத்துக் குலுங்கும்.

இதையும் படிக்கலாமே: இனி வீட்டில் செடி வைக்க இடம் இல்லை, நேரம் இல்லை என்ற கவலையே வேண்டாம். இதோ இருக்கும் இடத்திலே அதிக பாராமரிப்பு இல்லாமல் எளிமையாக வளரக் கூடிய இந்த செடிகளை வளர்க்க முயற்சி செய்யலாமே.

இதே உரத்தை நித்திய மல்லி செடிக்கும் கொடுக்கலாம். அதுவும் நன்றாக பூக்கள் வைக்கும். இந்த இயற்கை உரசல் முறை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு இதே போல கொடுத்து பூக்களை அதிக அளவு பூக்க வைத்து பலன் அடையலாம்.

- Advertisement -