ரெண்டு எலுமிச்சைப்பழம் இருந்தா போதும் பூக்காத உங்க மல்லி செடியை கூட கொத்துக் கொத்தாக பூக்க வெச்சிடலாம். அப்புறம் பாருங்க பூக்கிற பூக்களை பறித்து மாளாது.

Malli Sedi Lemon
- Advertisement -

மல்லி செடியை நன்றாக பூக்க வைக்க பல்வேறு இயற்கை செயற்கையான உரங்கள் இருந்தாலும் கூட நாம் வீட்டில் பயன்படுத்தக் கூடிய சாதாரணமான பொருட்களை வைத்து எப்படி இயற்கையான உரங்களை தயாரித்து இந்த செடிகளை அதிக அளவில் பூ பூக்க வைக்க முடியும் என்பதை பற்றிய தகவலை தான் இந்த வீட்டுக் தோட்டம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

பூக்காத மல்லி செடியின் கொத்துக்கொத்தாக பூக்க வைக்க:
மல்லி செடியை பொறுத்த வரையில் கொஞ்சம் வெயில் பாங்கான இடத்தில் வைப்பது மிகவும் முக்கியம். இந்த செடி எல்லா நேரத்திலும் பூக்காது அதே போல பூத்து முடித்தவுடன் அந்த இடத்தில் செடியின் கீழே நறுக்கி விட வேண்டும். அப்போது தான் புதிய கிளைகள் வந்து அடுத்த முறை பூக்கும் போது அதிகமான பூக்கள் பூக்கும்.

- Advertisement -

இதற்கு தண்ணீர் ஊற்றும் போதும் முழுவதுமாக மண் காயும் வரை விட்டு விட்டு அதன் பிறகு ஊற்றக் கூடாது கொஞ்சம் ஈரப்பதம் இருக்கும் போது தண்ணீர் ஊற்ற வேண்டும். இதையெல்லாம் செடிகளை பராமரிக்க வேண்டிய சின்ன சின்ன குறிப்புகள். இப்போது இதற்கான உரத்தை எப்படி தயார் செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த உரம் தயாரிக்க இரண்டு எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு புதிதாக வாங்கி எலுமிச்சை பழம் தான் வேண்டும் என்று இல்லை வீட்டில் இருக்கும் காய்ந்த எலுமிச்சை பழங்களை கூட எடுத்துக் கொள்ளலாம். இதற்கு காய்ந்த எலுமிச்சை பழத்தின் தோலை கூட பயன்படுத்திக் கொள்ளலாம். தோலாக பயன்படுத்தும் போது ஒரு ஐந்து பழத்தின் தோலை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது எலுமிச்சை பழம் அல்லது தோல் எதுவாக இருந்தாலும் அதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக குலுக்கி வைத்து விடுங்கள். இந்த பாட்டில் மூன்று நாட்கள் வரை வெயில் படாத இடத்தில் வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த பாட்டிலை குலுக்கி மட்டும் வைத்து விடுங்கள்.

மூன்று நாட்கள் கழித்து இந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு லிட்டர் தண்ணீருடன் இன்னும் ஒரு லிட்டர் தண்ணீரை நன்றாக கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி மல்லி செடியின் இலைகள் மேல் ஸ்பிரே செய்து விடுங்கள். அதே போல் கொஞ்சம் தண்ணீரை வேர்ப்பகுதியில் ஊற்றி விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் இதில் இருக்கும் அமிலத்தன்மை ஆனது செடிகளின் அதிக பூக்களை பூக்க வைக்கும்.

இதையும் படிக்கலாமே: மல்லி செடி கொத்துக் கொத்தாக பூத்து தள்ள வீணாக தூக்கிப் போடும் இந்த பொருள் இருந்தால் போதும். ஒரு முறை இதை தந்தாலே போதும் வருசம் முழுவதும் மல்லி செடி குலுங்கிட்டே இருக்கும்.

அது மட்டுமின்றி இந்த கரைச்சலை ஊற்றுவதன் மூலம் செடியில் எறும்பு தொல்லை அறவே இருக்காது. மற்ற பூச்சிகளின் தொல்லை இருந்தாலும் இதில் இருக்கும் இந்த அமிலத்தன்மை பூச்சிகள் வர விடாமல் தடுத்து செடியை நன்றாக தழைத்து வளர செய்யும். இந்த உரக்கரைசல் தெளித்தால் பூக்காத மல்லி செடியிலும் கூட மொட்டுக்கள் வைத்து நல்ல பெரிதாக பூக்கள் பூக்கள் ஆரம்பிக்கும். இந்த இயற்கை உரக்கரைசல் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் நல்ல செடிக்கு கொடுத்து பலன் அடையலாம்.

- Advertisement -