இனிமே ரேஷன் கோதுமைய சலிச்சு, மீதமான தவிடை கூட வீணாக்காதீங்க, அத வைச்சு பூக்காத மல்லி செடியை முழம், முழம்மா பூக்க வைக்கலாம் தெரியும்மா?

- Advertisement -

மல்லி செடிகளில் நிறைய வகைகள் உண்டு. பெரும் பாலும் வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்கள் மல்லி செடி இல்லாமல் இருக்காது.இந்த மல்லிச் செடிகள் எப்போதும் பூத்துக் கொண்டிருக்கும் என்று சொல்ல முடியாது. சில வகை செடிகள் சீசனில் மட்டுமே பூக்கும் மற்ற நேரங்களில் பூக்காது அதிலும் ஒரு சில வகைகள் சீசன் நேரங்களில் அதிகம் பூக்கும் மற்ற நேரங்களில் ஒன்று இரண்டு பூக்கள் வைத்துக் கொண்டே இருக்கும். இப்போது இந்த பதிவில் பூக்கள் அதிகம் மொட்டு வைத்தும் பூக்காமல் இலை பூக்கள் எல்லாம் கருகி போனால் அதற்கு என்ன உரம் கொடுப்பது என்பதை பற்றி தான் இந்த வீட்டுத் தோட்டம் குறித்த பதிவு தெரிந்து கொள்ள போகிறோம்.

மல்லி செடியை பொருத்த வரையில் நல்ல வெயில் படும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும். இதற்கு தண்ணீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் உற்றினால் கூட போதும். வெயில் அதிகம் தேவைப் படும் செடி தான் இது. அதே போல் உரம் அதிகம் கொடுத்து விட்டாலும் செடிகளின் இலைகள் கருகி பூக்கள் பூக்காமல் உதிர்ந்து விடும். உரங்களையும் அளவான முறையில் தான் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

பூச்செடிகளை பொருத்த வரையில் பூக்கள் பூத்த பிறகு அடுத்த சீசன் பூக்கும் முன்பு செடிகளை செடியை நறுக்கி விட வேண்டும். அப்போது தான் புதிய இலைகள் வந்து அதில் அதிகமாக மொட்டுக்கள் வைத்து நிறைய பூக்களை கொடுக்கும். இப்படி அனைத்தும் சேர்ந்த பிறகும் செடிகள் பூக்காது பட்சத்தில் இந்த உரத்தை கொடுத்து பாருங்கள் நிச்சயம் அதிக பூக்களை கொடுக்கும்.

இதற்கு தேவையானது ரேஷன் கோதுமை. ரேஷன் கோதுமை என்றவுடன் மற்ற கோதுமை ஏன் போடக்கூடாது என்றெல்லாம் தோன்றும். இதற்கு தேவை ரேஷன் கோதுமை இல்லை அதல் இருக்கும் தவிடு தான் தேவை. கடைகளில் வாங்கும் கோதுமைகளில் அவ்வளவு தவிடு கிடைக்காது. பெரும்பாலும் இந்த ரேஷன் கோதுமைகளை யாரும் பயன்படுத்துவதில்லை எனவே வாங்கி கோதுமைகளை எடுத்து தனியாக வைத்து விட்டு அதன் தவிடை மட்டும் உரமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

கோதுமை நன்றாக புடைத்து சுத்தப்படுத்தினால் இதில் தவிடுகள் நிறைய கிடைக்கும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து விடுங்கள். ஒரு வாரம் வரையில் இதை வைத்து விட்டால் நன்றாக புளித்து விடும். இத்துடன் ஒரு லிட்டர் தண்ணிக்கு 10 லிட்டர் அளவு தண்ணீர் சேர்த்து செடிகளுக்கு உரமாக ஊற்றினால் செடிகள் நன்றாக கிளைகள் மொட்டுக்கள் வைத்து அதிக பூக்களை கொடுக்கும். மொட்டு வைத்து மலராமல் கருகி உதிரும் பிரச்சனையும் சரி செய்து விடும் இலைகளை கூட நல்ல பசுமையாக வைத்திருக்கும்.

இதையும் படிக்கலாமே: நீங்கள் வளர்க்கும் எந்த செடியாக இருந்தாலும், அதற்கு இந்த ஒரு இலையை அரைத்து ஒரு முறை உரமாக கொடுத்து விடுங்கள். செடி கொடிகள் எல்லாம் காடு போல வளர்ந்து நிற்கும்.

இத்துடன் சேர்த்து மாட்டு தொழு உரத்தையும், நாட்டு சர்க்கரையும் கலந்து அந்தத் தண்ணீரையும் புளிக்க வைத்து அதையும் இது போல ஒரு லிட்டர் தண்ணீர் இருக்கு 10 லிட்டர் அளவு தண்ணீர் சேர்த்து கொடுத்தால் இந்த செடிகளும் நன்றாக பூக்கும். இந்த இரண்டு உரங்களை உங்கள் பூச்செடிகளுக்கு கொடுத்துப் பாருங்கள் பூக்காத செடிகள் கூட அதிக மொட்டுக்கள் வைத்து நிறைய பூக்களை கொடுக்கும்.

- Advertisement -