உங்க மல்லி செடியில் ஒரு பூ கூட பூக்களையேன்னு கவலையாக இருக்கா? அப்படின்னா இந்த அஞ்சு டிப்ஸ் மட்டும் கரைட்டா பாலோ பண்ணுங்க. ஒவ்வொரு கிளையிலும் கிலோ கணக்கில் பூ பூக்கும்.

jasmine plant
- Advertisement -

பொதுவாகவே பூக்களே பிடிக்காது என்பவர்கள் கூட மல்லிகை பூக்களை விரும்பத் தான் செய்வார்கள். இதன் நிறமும் மனமும் நிச்சயம் அனைவரையும் கவர்ந்திருக்கும். அதே போல தான் செடிகளிலும் மல்லி செடியை அனைவருமே வளர்க்க ஆசைப்படுபவர்கள் அப்படி வளர்க்கக் கூடிய இந்த செடி எல்லா காலத்திலும் நன்றாக பூத்து செழித்து வளர ஒரு சில வழிமுறைகளை நாம் சரியாக செய்தாலே போதும். அது என்னவென்று இந்த வீட்டு தோட்டம் குறித்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

முதலாவது மல்லி செடியை பொறுத்த வரையில் முதலில் நல்ல வெயில் படும் இடத்தில் வளர்க்க வேண்டும் இது மிக மிக அவசியம். இந்தச் செடிக்கு சரியான முறையில் வெயில் கிடைக்கவில்லை என்றாலும் அடுத்து அடுத்து அதில் கிளைகள் வைத்து வளராது அதே சமயத்தில் செடி வளராமல் அப்படியே நின்று விடும்.

- Advertisement -

இரண்டாவது இந்த செடியில் பூக்கள் பூத்து முடித்தவுடன் உடனே கவாத்து செய்து விட வேண்டும். அதாவது செடியில் இரண்டு இன்ச் மட்டும் கிளைகளை விட்டு விட்டு மீதம் உள்ள கிளைகளை எல்லாம் நறுக்கி விட வேண்டும். அதன் பிறகு தான் புதிய கிளைகள் வைத்து மொட்டுக்கள் வைக்கும். மல்லி செடியை பொறுத்த வரையில் எப்போதெல்லாம் புதிய கிளைகள் வைக்கிறதோ அப்போது கட்டாயமாக அதில் பூக்கள் பூக்கும்.

மூன்றாவது இந்த மல்லி செடிக்கு வெயில் எப்படி அவசியமோ அதே போல தண்ணீரும் அவசியம் எனவே மல்லி செடிக்கும் எப்போதும் நீரோட்டம் இருப்பது போல பார்த்துக் கொள்ளுங்கள். வெயில் காலங்களில் கண்டிப்பாக இரண்டு முறை தண்ணீர் ஊற்றுவது அவசியம். அதே போல் இந்த மல்லி செடிக்கு மாட்டுச்சாண உரம் மிகவும் அவசியம். இது உங்களது கிடைக்கவில்லை என்றால் உரக்கடையில் அல்லது நர்சரியில் கிடைக்கும் அதை வாங்கி மாதத்திற்கு ஒரு முறையாவது மண்ணில் கலந்து போட்டு விடுங்கள்.

- Advertisement -

நான்காவது மல்லி செடியில் பூச்சிகள் எறும்பு போன்றவை வராமல் இருக்க வேப்பெண்ணெய் 20 ml எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் நன்றாக கலந்து செடிகளில் எல்லா பக்கமும் ஸ்ப்ரே செய்து விடுங்கள். இதன் கசப்புத் தன்மைக்கு எந்த பூச்சிகளும் வராது. இதனால் செடிகளும் எந்த பாதிப்பும் இல்லாமல் செழித்து வளரும்.

ஐந்தாவது இந்த செடிக்கு கொடுக்க வேண்டிய முக்கியமான ஒரு உரம் தேமோர் கரைசல். ஒரு டம்ளர் புளித்த மோருக்கு ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் இரண்டையும் எடுத்து ஒரு பிளாஸ்டிக் பாட்டில் ஊற்றி கலந்து ஏழு நாட்கள் வரை அப்படியே வைத்து விடுங்கள். இதை காலை மாலை இரண்டு முறை குலுக்கி வைத்து அதன் விடுங்கள். அதன் பிறகு ஒரு மூடி இந்த கரைசலுக்கு 10 மூடி தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து செடிகளின் வேர் பகுதிகளுக்கு கொடுத்து வர செடிகள் நன்றாக பூக்கும். இது மிகச் சிறந்த உரமும் கூட. இந்த உரக்கரைசலை 15 நாட்களுக்கு ஒரு முறை செடிகளுக்கு கொடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே: ஒருமுறை செய்து வைத்தால் 6 மாதம் ஆனாலும் வீட்டில் இருக்கும் எந்த செடிகளுக்கும் வேறு உரமே தேவை இருக்காது தெரியுமா?

மல்லி செடியை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் இந்த சின்ன சின்ன குறிப்புகளை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டால் போதும். எப்போதும் செடிகள் நன்றாக செழித்து செடி முழுவதும் பூக்களாக பூத்துக் குலுங்கும். இந்த பதிவில் உள்ள தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் இதையே பின்பற்றி உங்கள் வீட்டு தோட்டத்தில் உள்ள மண் பூச்சியை பூக்களில் அதிகமாக பூக்க வைக்கலாம்.

- Advertisement -