ஒருமுறை செய்து வைத்தால் 6 மாதம் ஆனாலும் வீட்டில் இருக்கும் எந்த செடிகளுக்கும் வேறு உரமே தேவை இருக்காது தெரியுமா?

plants-tamil
- Advertisement -

பூச்செடி மட்டும் அல்லாமல் எல்லா வகையான காய்கறி மற்றும் பழ செடி வகைகள் கூட நன்கு செழித்து வளர்வதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிறைந்த இந்த ஒரு பவுடரை வீட்டிலேயே எளிமையான முறையில் நாம் சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து தயாரித்து விட்டால் 6 மாதம் வரை அதற்கு பெரிதாக எந்த உரமும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியான ஒரு பவுடர் டைப் உரத்தை தான் இந்த தோட்டக் குறிப்பு பகுதியின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

இந்த பவுடர் எல்லா வகையான செடிகளுக்கும் வாரம் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஸ்பூன் அளவிற்கு கொடுத்து வந்தாலே போதும், செடிகள் அனைத்தும் நோய் தாக்குதல் இன்றி நன்கு ஊட்டச்சத்துடன் செழிப்பாக பெரிய பெரிய பூக்களையும், நிறைய கொத்து கொத்தாக காய்கறிகளையும், கனி வகைகளையும் கொடுக்கும். எளிமையான பொருட்களில் இவ்வளவு சத்துக்கள் இருப்பதால் ஏன் இனிமேல் தூக்கி எறிய வேண்டும்?

- Advertisement -

வீட்டிலேயே நீங்கள் வேண்டாம் என்று தூக்கி எறியக்கூடிய இந்த பொருட்களை சிறுக சிறுக சேகரித்துக் கொண்டே வாருங்கள். அதை நன்கு வெயிலில் உலர்த்தி காய வைக்க வேண்டும். இது தான் இந்த பவுடர் தயாரிப்பிற்கு முதல் படி ஆகும். தினமும் காய்கறி வெட்டும் பொழுது கிடைக்கக்கூடிய வெங்காயத்தோல் மற்றும் பூண்டு தோல், சின்ன வெங்காய தோல் ஆகியவற்றை தூக்கி எறியாமல் ஒரு கூடையில் சேகரித்துக் கொண்டே வாருங்கள். இரண்டு கைப்பிடி நிறைய சேர்ந்ததும் வெயிலில் நன்கு உலர்த்தி விடுங்கள்.

எல்லா பொருட்களையும் சம அளவில் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். முருங்கை மரம் இருந்தால் முருங்கை இலைகளை இரண்டு கைப்பிடி அளவிற்கு பறித்து நன்கு வெயிலில் உலர்த்திக் கொள்ளுங்கள். முருங்கைக் கீரை வாங்கும் பொழுது மீதமாக கூடிய கீரையையும் நீங்கள் இது போல செய்யலாம். காய்ந்த கருவேப்பிலை இலைகள், முட்டை ஓடுகள், வேர்க்கடலை தோல், வாழைப்பழ தோல் மற்றும் கருவேப்பிலை இலைகள் ஆகியவற்றை இதே போல கிடைக்கும் பொழுதெல்லாம் சேகரித்த பின்னர் இரண்டு கைப்பிடி அளவிற்கு வந்ததும் வெயில் நன்கு உலர்த்தி காய வைக்க வேண்டும்.

- Advertisement -

மாட்டு சாணம், ஆட்டுப்புழுக்கை, எரு என்று எது கிடைத்தாலும் அதையும் சேகரித்து நான்கு வெயிலில் காய வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் சாம்பல் கொஞ்சம் தேவை. மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய எதையும் எரித்து கிடைக்கும் சாம்பல் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். மற்றொரு பொருட்களை விட இதன் அளவு பாதியாக இருந்தால் போதும். பின்னர் கற்றாழையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்கு ஏழெட்டு நாட்கள் காய விடுங்கள். மொற மொறவென்று காய்ந்து சருகானதும் அதையும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த எல்லா பொருட்களையும் நன்கு வெயிலில் உலர்த்தி மொர மொறவென்று காய்ந்ததும் மிக்சர் ஜாரில் தனித்தனியாக அரைத்து பின்னர் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
பூக்காத செம்பருத்தி செடியில் கூட தாறுமாற பூ பூக்க நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் இந்த ஒரு பொருள் போதும். அப்புறம் பாருங்க நீங்களே பறிக்க முடியாம போதும் சொல்ற அளவுக்கு பூத்து தள்ளும்.

அவ்வளவுதான், இந்த ஒரு பவுடரை நீங்கள் சின்ன செடியாக இருந்தால் ஒரு டீஸ்பூன் அளவிற்கு கொடுத்தால் போதும். கொஞ்சம் பெரிய வளர்ந்த செடியாக இருந்தால் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு கொடுத்து வாருங்கள். வேர்களை சுற்றிலும் போட்டு தண்ணீர் ஊற்றி விட வேண்டும். அவ்வளவுதான், இதில் இருக்கக்கூடிய எல்லா சத்துக்களும் செடிகளுக்கு தேவையான முக்கியமான சத்துக்கள் ஆகும். இதனால் செடிகள் நன்கு செழித்து நல்ல மகசூலை கொடுக்கும். மேலும் பூச்சிகள், நோய்க்கு தாக்குதல்கள் இன்றி வேர் அழுகல் பிரச்சனைகள் இல்லாமல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

- Advertisement -