மாமியார் மருமகளுக்குள் அடிக்கடி சண்டை வருகிறதா? கவலையை விடுங்க உங்க ஹாலில் இதை செஞ்சு பாருங்க இனி ஒற்றுமையாக இருப்பீங்க!

mamiyar-marugal-sandai-astro
- Advertisement -

மாமியார் மருமகளுக்குள் இருக்கும் சண்டைகளை தீர்ப்பது என்ற என்பது சற்று கடினமான காரியமாகவே இருக்கும். இவர்களுக்குள் முட்டிக் கொண்டால் அவ்வளவுதான் குடும்பமே நிம்மதியாக இருக்க முடியாது. அப்படிப்பட்ட மாமியார் மருமகள் சண்டையை கூட தீர்த்து வைக்கும் ஜோதிட சாஸ்திரம் சீனாவில் இருக்கிறதாம்! அது என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை நோக்கி பயணிப்போம் வாருங்கள்..

திருமணமான புதிதில் மருமகள் மாமியாரை தன்னுடைய தாயாகவே பாவிக்கிறாள் அதனால் தான் அத்தை என்று சொல்லாமல் ‘அம்மா’ என்று சிலர் அழைப்பதுண்டு. ஆனால் திருமணமான பின்பு நாட்கள் செல்ல செல்ல தன் தாயைப் போல அவர்கள் நடந்து கொள்ளவில்லை வேற்றுமையாக பார்க்கிறார் என்று மனம் வெறுத்து பொறுத்தது போதும் என்று சண்டையிட துவங்குகிறாள்.

- Advertisement -

எல்லா உறவுகளையும் இழந்து விட்டு புத்தம் புதிய வீட்டில் காலடி எடுத்து வைக்கும் பெண்களுக்கு மனரீதியான பிரச்சனைகள் நிறைய வரும். இதை பெரியவர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்களே இவள் என்ன இப்படி நடந்து கொள்கிறாள்? இவள் வீட்டில் என்ன கற்றுக் கொடுத்தார்கள்? என்று மனம் நோகும்படி பேசி வெறுப்பை வாங்கி சேர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் பக்குவப்படுவதற்குள் அவர்களுக்குள் நஞ்சை விதைப்பது நீங்கள் தான்!

மாமியார் என்பது மிகப் பெரிய பொறுப்பு! அதை சரிவர கடைபிடிக்க தவறினால் குடும்பம் சிதறிப் போகும். எது நடக்க கூடாது என்று நீங்கள் நினைத்தீர்களோ அது நடக்கும். எனவே நீங்களும் மற்ற மாமியார்களை போல் அல்லாமல் பொறுப்பாகவும், தன் மகளைப் போல் பார்க்காவிட்டாலும் வயதில் குறைந்த பெண் அவளுக்கு நாம் தான் எல்லாமே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும் சிந்திக்க வேண்டும்.

- Advertisement -

மாமியார் மருமகளுக்குள் அடிக்கடி சண்டை வருகிறது என்றால் சீனாவில் சீன ஜோதிட சாஸ்திரப்படி தென்மேற்கு திசையில் மாமியார் மருமகள் இருவரும் சேர்ந்த புகைப்படம் அல்லது அவர்கள் இருவருடன் மற்றவர்கள் இருக்கும் ஏதாவது ஒரு புகைப்படத்தை ஹாலில் மாட்டி வைப்பார்களாம். இப்படி செய்தால் மாமியார் மருமகளுக்குள் இருக்கும் சண்டை சச்சரவுகள் படிப்படியாக குறைந்து அவர்களுக்குள் ஒற்றுமை உண்டாகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக அவர்களுக்கு இருந்து வருகிறது.

‘ஃபுங்ஸ்வே’ என்கிற ஜோதிட சாஸ்திரம் ஒன்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. இந்த சாஸ்திர நூலில் குடும்ப பிரச்சனைகளுக்கான எளிய தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மாமியார் மருமகளுக்குள் நடக்கும் சண்டைக்கு இவ்வகையான தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோதிட சாஸ்திரத்தின் படி சீனாவில் மாமியார் மருமகளுக்குள் சண்டை நடந்தால் இதுபோல தென்மேற்கு திசையில் உயரமாக மாமியார் மருமகளின் புகைப்படத்தை மாட்டி வைத்து விடுவார்களாம்.

இதையும் படிக்கலாமே:
நாளை தங்க கணபதி தினம்! அதி அற்புதம் வாய்ந்த இந்த நாளின் சிறப்பு என்ன என்று தெரியுமா உங்களுக்கு? நாளை இதை மட்டும் செய்து விட்டால் உங்கள் வாழ்க்கையில் கடன் தொல்லையே இருக்காது.

அதை பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களுக்குள் இனம் புரியாத மனமாற்றம் ஏற்படும். இதனால் அவர்களுக்குள் சண்டை போடும் எண்ணம் ஏற்படாது என்கிறார்கள். இதனால் குடும்பத்தினரும் நிம்மதியுடனும், மகிழ்வுடன் இருப்பார்கள். குறிப்பாக மணமகன்கள் தாய்க்கும், தாரத்திற்கும் நடக்கும் சண்டையிலிருந்து தப்பி பிழைத்து நிம்மதி பெருமூச்சு விடுகிறார்களாம். இதனால் மாமியார் மருமகள் சண்டை ஒரு வழியாக குறையுமாம். எது எப்படி இருப்பினும் மாமியார் மருமகளையும், மருமகள் மாமியாரையும் அனுசரித்து விட்டுக்கொடுத்து, புரிந்து கொண்டு நடந்து கொண்டால் மட்டுமே உண்மையான தீர்வு காண முடியும்.

- Advertisement -