உங்கள் மனதில் இருக்கும் குழப்பத்திற்கு யார் காரணம் தெரியுமா? மனக்குழப்பம் தீர இந்த நட்சத்திரங்களில் இவரை வழிபடுங்கள்!

chandran-sad-men
- Advertisement -

மனம் சாந்தமாக இல்லை என்றாலும், குழப்பமான மன நிலையில் இருந்தாலும் அதற்கு ஜோதிட ரீதியாக மிக முக்கிய காரணம் சந்திர பகவானாவார். சந்திர பகவான் தான் மனதிற்கு அதிபதியாக இருக்கின்றார். மனம் சார்ந்த எல்லா குழப்பங்களுக்கும் தீர்வு காண, சந்திர பகவானை வழிபடுவது மிகவும் நல்ல பலன்களை நமக்கு கொடுக்கும். அவரை எப்படி வழிபடலாம்? நம் குழப்பங்கள் தீர, மன அமைதி பெற என்ன செய்ய வேண்டும்? என்கிற தெளிவைப் பெற தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

crying-sad

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும். ஒருவருக்கு இருக்கும் பிரச்சனை இன்னொருவருக்கு இருப்பது இல்லை. அவரவரின் பிரச்சினை அவர் அவர்களுக்கு மிகவும் பெரிதாக தெரியும். அதை மற்றவர்களிடம் சொல்லும் பொழுது, ‘உன் பிரச்சனை என்ன அவ்வளவு பெரிதா? என்னுடைய பிரச்சனை எல்லாம் கேட்டால் நீ அவ்வளவு தான் கண்ணீர் விடுவாய்!’ என்றெல்லாம் வசனம் பேசுவார்கள்.

- Advertisement -

தத்தம் பிரச்சனைக்கான முடிவுகள் மற்றவர்களிடம் இல்லை என்பதை முதலில் உணர வேண்டும். எல்லோரிடமும் சதா புலம்பி கொண்டிருப்பதன் மூலம் எந்த தீர்வு கண்டுவிட முடியாது. உங்களுடைய துக்கங்களில் இன்பம் காண்பவர்கள் உங்களுக்கு தெரியாமல் உங்களை சுற்றி இருக்கத்தான் செய்வார்கள். எனவே புலம்புவதை விட்டுவிட்டு மனதிற்கு காரக அதிபதியாக இருக்கும் சந்திரனை வழிபடுங்கள்.

stars

ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் சந்திர பகவானை தரிசனம் செய்வதும், நவகிரக கோவில்களுக்கு சென்று சந்திரனுக்கு உரிய வெண்ணிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது நல்ல பலனைக் கொடுக்கும். மேலும் சந்திர தரிசனம் செய்யக் கூடிய நாட்களில் அதாவது அமாவாசை முடிந்து மூன்றாம் பிறையில் சந்திர பகவானை வழிபட்டு வந்தால் மனதிலிருக்கும் பாரங்கள் குறையும்.

- Advertisement -

ஒவ்வொரு வாரமும் வரும் திங்கட்கிழமை அன்று நவகிரக சந்நிதியில் இருக்கும் சந்திர பகவானுக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வரலாம். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர இந்த பரிகாரத்தை செய்யலாம். வழக்குகள, வம்புகள் போன்றவற்றில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்கள், தங்களுக்கு பிரியமானவர்களை இழந்தவர்கள், தோல்வியை கண்டு துவண்டு போய் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

pournami

வாழ்க்கையில் எதுவுமே நிரந்திரம் இல்லை. எல்லோருமே ஒரு கட்டத்தில் பிரிய தான் செய்வார்கள். அதற்காக மனம் வருந்திக் கொண்டே இருக்காமல் உங்களுக்காக வாழ்பவர்களையும் எண்ணிப் பார்க்க வேண்டும். மனதில் இருக்கும் உளைச்சல்கள், இறுக்கங்களை நீக்க திங்கட்கிழமை தோறும் சந்திர தரிசனம் செய்யுங்கள். நிலவொளியில் தியானம் செய்யுங்கள். வலது நாசியில் 4 வினாடிகளுக்கு காற்றை உள்ளே இழுத்து, இடது நாசியில் 8 வினாடிகளுக்கு காற்றை வெளியே மெதுவாக விட வேண்டும். இது போல 10 நிமிடங்கள் செய்யுங்கள். மனம் அமைதி அடையும். பௌர்ணமி நாட்களில் மொட்டை மாடியில் சென்று நிலாச்சோறு சாப்பிடுங்கள். சந்திரனுடைய முழு ஆதிக்கம் பெற்ற பவுர்ணமி தினத்தில் நிலாச்சோறு சாப்பிட்டால் மனதில் இருக்கும் குழப்பங்கள், அழுத்தங்கள் நீங்கும், மேலும் முக அழகு பொலிவாகிவிடும் என்கிறது ஜோதிடம்.

chandra-graganam-2

சந்திர பகவானை வழிபடும் பொழுது வெண்ணிற மலர்களை சாற்றி வழிபடுவது, வெண்மை நிறத்திலான நைவேத்யங்கள் படைத்து தானம் செய்வது, சந்திர பகவான் மந்திரங்களை உச்சரிப்பது போன்றவை செய்தால் நல்ல பலன்களை கொடுக்கும். திங்கட்கிழமைகளில் வெள்ளை நிற உடை உடுத்திக் கொண்டு சந்திரனை வழிபட்டால் இன்னும் நிறைய நன்மைகள் நடக்கும். சந்திரன் ஜாதகத்தில் நீசம் அடைந்தவர்களுக்கு மனதில் நிம்மதி என்பதே இருக்காது. ஒரு பிரச்சினை போனால் அடுத்த பிரச்சினை தயாராக நிற்கும். வாழ்க்கையில் விரக்தி, சோகம், வெறுப்பு ஆகியவை உண்டாகும். அதிலிருந்து விடுபட சந்திர பகவான் வழிபாடு ஒன்றே போதும்.

- Advertisement -