மங்கள் தோஷ பரிகாரம்

mangal dosha pariharam in tamilmangal dosha pariharam in tamil
- Advertisement -

மங்கள் தோஷம் என சிலர் சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம். சமஸ்கிருத மொழியில் “மங்கள்” என்றால் “‘செவ்வாய்” என பொருள். எனவே மங்கள தோஷம் என்பது செவ்வாய் தோஷத்தை தான் குறிக்கின்றது. என்பதை அனைவரும் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். ஜாதகத்தில் இந்த மங்கள தோஷம் அல்லது செவ்வாய் தோஷம் ஏற்பட்டு, அதனால் சங்கடங்களை சந்திப்பவர்கள் செய்ய வேண்டிய மங்கள் தோஷ பரிகாரங்கள் என்னென்ன என்பது குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மங்கள் தோஷம் நீங்க பரிகாரம்

ஜாதகத்தில் மங்கள் தோஷம் எனப்படும் செவ்வாய் தோஷம் ஏற்பட்டவர்கள் வழிபடுவதற்குரிய தெய்வமாக இருப்பவர் விநாயகப் பெருமான். எனவே தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், உங்கள் வீட்டு பூஜையறையில் இருக்கின்ற விநாயகர் பெருமான் படத்திற்கு சிகப்பு நில மலர்களை சமர்ப்பித்து, சிறிதளவு வெல்லம் நைவேத்தியமாக வைத்து, தீப தூப ஆராதனைகள் காட்டி வழிபாடு செய்து வந்தால் மங்கள் தோஷம் எனப்படும் செவ்வாய் தோஷத்தின் வீரியம் குறைந்து நற்பலன்கள் ஏற்படும்.

- Advertisement -

முருகப்பெருமான் செவ்வாய் பகவானின் அம்சம் கொண்டவர் ஆவார். எனவே உங்களுக்கு மங்கள் தோஷம் உண்டாகி, அதனால் அவதிப்படுபவர்கள், விநாயகர் பெருமானை வழிபடுவது போலவே ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்களை சாற்றி, துவரம் பருப்பு கொண்டு செய்யப்பட்ட இனிப்பு நைவேத்தியம் வைத்து கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற தோத்திரங்களை துதித்துபவர்களுக்கு மங்கள தோஷம் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

உடலில் இருக்கின்ற ரத்தத்திற்கு அதிபதி ஆனவர் செவ்வாய் பகவான். தற்காலத்தில் ரத்த தானம் செய்வது என்பது ஒரு உயிரை காப்பதற்கு உதவியாக இருக்கின்ற ஒரு உயரிய தானமாக உள்ளது. எனவே செவ்வாய்க்கிழமைகளில் ரத்ததானம் செய்வதால் செவ்வாய் பகவானின் அருள் நமக்கு கிடைத்து, ஜாதகத்தில் இருக்கின்ற மங்கள் தோஷம் காரணமாக கெடுபலன்கள் ஏற்படாமல் நம்மை காக்கும்.

- Advertisement -

ஜாதகத்தில் இருக்கின்ற மங்கள தோஷம் காரணமாக வாழ்வில் நற்பலன்கள் ஏற்படாமல் கவலைப்படுபவர்கள். ஒரு தேய்பிறை செவ்வாய் கிழமை தொடங்கி 27 செவ்வாய்க்கிழமைகள் தோறும் உணவு ஏதும் உண்ணாமல் செவ்வாய் விரதம் மேற்கொள்ள வேண்டும். உண்ணாவிரதம் மேற்கொள்ள இயலாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு செவ்வாய்க்கிழமை விரதம் மேற்கொள்ளலாம். மங்கள் தோஷம் இருப்பவர்கள் இந்த பரிகாரம் தொடர்ந்து செய்வதால் விரைவிலேயே நற்பலன்களை பெறுவார்கள்.

செவ்வாய் பகவானுக்குரிய செப்பு யந்த்ரம் ஆன்மீக பொருட்கள் விற்கின்ற கடைகளில் கிடைக்கும். இந்த செவ்வாய் பகவான் யந்திரத்தை வாங்கி வந்து, சுத்தமான நீரால் அந்த எந்திரத்தை கழுவி, அதற்கு சந்தனம் மஞ்சள், குங்கும பொட்டிட்டு பூஜையறையில் வைத்து, அதற்கு சிவப்பு நிற மலர்கள் சாற்றி செவ்வாழைப்பழங்கள் நைவேத்தியம் வைத்து, செவ்வாய் பகவானுக்குரிய பீஜ மந்திரங்கள் துதித்து, வழிபாடு செய்து வருவதால் ஜாதகத்தில் இருக்கின்ற மங்கள் தோஷத்தின் பாதிப்புகள் வெகுவாக குறையும்

இதையும் படிக்கலாமே: கொடுமுடி திருமண பரிகாரம்

செவ்வாய்க்கிழமைகளில் அருகில் இருக்கின்ற துர்க்கை அம்மன் கோவிலுக்கோ அல்லது சன்னதிக்கோ சென்று, துர்க்கை அம்மன் முன்பாக அமர்ந்து, மங்கள சண்டிகா ஸ்தோத்திர பாராயணம் செய்து வருவதாலும் ஜாதகத்தில் இருக்கின்ற மங்கள் தோஷத்தால் (Mangal dosha pariharam in Tamil) ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

- Advertisement -