மாங்கல்ய தோஷம் விலக பரிகாரம்

mangalya dosham pariharam in tamil
- Advertisement -

ஜோதிடத்தில் பல வகையான தோஷங்கள் இருக்கின்றன. இதில் மாங்கல்ய தோஷம் என்பது பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு ஜாதக தோஷமாக இருக்கிறது. “மாங்கல்யம்” என்றால் “தாலி” என்பது பொருள் அதாவது ஒரு பெண்ணின் பிறந்த ஜாதகத்தில் பிறந்த லக்னத்திலிருந்து எண்ணினால் வருகின்ற 8 ஆம் இடம் மாங்கல்யம் எனப்படும் திருமணத்தை பற்றி குறிக்கும் இடமாக இருக்கின்றது.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இந்த எட்டாம் சூரியன், செவ்வாய், வீட்டில் ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருக்கும் பட்சத்தில் அந்த பெண்ணுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாக கருதப்படுகிறது. இந்த மாங்கல்ய தோஷம் ஏற்பட்ட பெண்களுக்கு திருமண வாழ்க்கை அமைவதில் மிகவும் தாமதம் ஏற்படும். எனவே பெண்களுக்கு ஏற்படுகின்ற மாங்கல்ய தோஷம் நீங்க செய்ய வேண்டிய மாங்கல்ய தோஷ பரிகாரம் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மாங்கல்ய தோஷம் பரிகாரம்

ஜாதகத்தில் மங்கல்ய தோஷம் இருக்கும் பெண்கள் செவ்வாய்க்கிழமைகள் தோரும் முருகப்பெருமானுக்கு விரதம் மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து ஒன்பது வாரங்களுக்கு முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து ஒ9 ஆவது வாரத்தின் இறுதியில் முருகன் கோவிலுக்கு சென்று முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரு சஷ்டி தினங்களில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவதாலும் மாங்கல்ய தோஷம் நீங்கி திருமண யோகம் கூடி வரும்.

மாங்கல்ய தோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்ற பெண்கள் தங்களின் தோஷம் நீங்கி, மிக விரைவில் திருமண வாழ்க்கை அமைய தங்கள் வீட்டில் ஹோமங்கள் செய்வதில் அனுபவம் பெற்ற வேதியர்களை கொண்டு “மிருத்யுஞ்ஜெய ஹோமம்” செய்து வழிபாடு செய்வதால் அக்குடும்பத்தில் இருக்கின்ற பெண்ணிற்கு ஏற்பட்டிருக்கின்ற மாங்கல்ய தோஷம் நீங்கி விரைவிலேயே மங்களமான திருமண வாழ்க்கை அமையும்.

- Advertisement -

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர தினங்களில் ஏதேனும் ஒரு நாளில் வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கின்ற விநாயகர் கோயில் அல்லது விநாயகர் சந்நிதிக்கு சென்று பிறகு 9 கன்னிப் பெண்களுக்கு புதிய ஆடைகளை தானம் செய்வதால் மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை ஏற்பட்ட பெண்களுக்கு அந்த தோஷம் நீங்கி திருமணம் நல்ல முறையில் நடைபெறும். அதேபோன்று தங்கம் வாங்க வசதி இல்லாத ஒரு ஏழை பெண்ணின் திருமண சடங்கிற்கு, மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் தங்கள் செலவில் தங்க தாலி வாங்கி கொடுப்பதாலும் மாங்கல்ய தோஷம் நீங்கி மணவாழ்க்கை உண்டாகும்.

மாங்கல்ய தோஷத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தினந்தோறும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்ட பிறகு பூஜை அறைக்கு சென்று அங்கு விநாயகர் படம் அல்லது சிறிய அளவிலான விநாயகர் சிலைக்கு நெய் தீபம் ஏற்றி, “ஓம் கம் கணபதியே நம” எனும் மந்திரத்தை 108 முறை துதித்து வழிபாடு செய்வதால் ஜாதகத்தில் இருக்கின்ற மாங்கல்ய தோஷத்தின் தாக்கம் குறைந்து சீக்கிரத்திலேயே திருமண வாழ்க்கை உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: கேது பரிகாரம்

செவ்வாய்க்கிழமைகளில் அருகில் உள்ள அனுமன் கோயில் அல்லது சன்னதிக்கு சென்று அனுமனுக்கு செந்தூரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். மேலும் கோயிலில் இருக்கின்ற பக்தர்களுக்கு காவி நிறத்தில் இருக்கின்ற லட்டு பிரசாதம் உண்ணக் கொடுக்க வேண்டும். இந்த பரிகாரத்தை பக்தியுடன் செய்து வரும் பெண்களுக்கு மாங்கல்ய தோஷத்தின் தாக்கம் குறைந்து திருமண வாழ்க்கை அமையும்.

- Advertisement -