மந்திரத்தை கோடி முறை ஜபித்த பலன் பெற இதை செய்யுங்கள் போதும்

God Perumal

மந்திரத்தை கொண்டு நாம் இறைவனின் பரிபூரண அருளை நிச்சயம் பெற முடியும். சித்தர்களும் ஞானிகளும் மந்திரம் மூலம் பல அதிசயங்களை நிகழ்த்தி காட்டி இருப்பது நாம் அறிந்ததே. ஒரு மந்திரத்தை எந்த இடத்தில் இருந்து ஜெபிக்கிறோம் என்பதை பொறுத்து அந்த மந்திரத்திற்கான பலன் நம்மை வந்து சேருகிறது. சில இடங்களில் நீங்கள் மந்திரத்தை ஜபித்தால் கோடி முறை ஜபித்த பலனை கூட பெறலாம். அந்த வகையில் எந்த இடத்தில் மந்திரத்தை ஜபித்தால் எவ்வளவு பலனை பெறலாம் என்பது பற்றி பார்ப்போம் வாருங்கள்.

om manthiram

நாம் தங்கி இருக்கும் வீட்டிலே ஒரு மந்திரத்தை ஜபித்தால் அதை பத்து முறை ஜபித்ததற்கான பலனை பெற முடியும். அதற்கு நாம் சிலவற்றை செய்ய வேண்டும். மந்திரம் ஜெபிப்பதற்கு சிறந்த காலம் அதிகாலையே. ஆகையால் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் தீபம் ஏற்றி இறைவனை முறையாக வணங்கி மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால் பத்து முறை ஜபித்ததர்க்கான பலனை நாம் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

மந்திரத்தை 1000 முறை ஜபித்ததற்கான பலனை பெற நாம் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு நமது ஊரில் உள்ள மிக பழமையான சிவன் கோயிலிற்கு சென்று சிவ பூஜையில் கலந்துகொண்டு, பின்பு எந்த மந்திரத்தையும் ஒரு முறை ஜபித்தால் அதை 1000 முறை ஜபித்ததற்கான பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

om manthiram

சித்தர்களும் யோகிகளும் பெரும்பாலும் மலை குகைகளில் தங்கி தியானம் செய்வர் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். அதற்கு அமைதியான நிலை ஒரு காரணம் என்றாலும் மந்திர பலனும் ஒரு காரணம் தான். மலைகளில் இருக்கும் கோவில்களில் இறைவனின் சக்தி வியாபித்திருக்கும். மலை கோவில்களில் அதிகாலையில் ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால் கோடி முறை ஜபித்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

om manthiram

மந்திரத்தை ஜெபிக்கும் சமயத்தில் நாம் உடலளவிலும் மனதளவிலும் மிக மிக சுத்தமாக இருக்க வேண்டும். இறைவனை மட்டுமே மனதில் நிறுத்த வேண்டும். அதற்க்கு தியானம் அவசியமாகிறது. முறையாக தியான பயற்சி எடுத்து இறைவனை மனதில் நிறுத்தி மந்திரத்தை மேற்குறிய படி சொன்னால் அதற்கான பலன் நிச்சயம் உண்டு. மந்திரத்தை சரியாக உச்சரிக்கவில்லை என்றாலோ அல்லது உடலோ மனதோ சுத்தமில்லை என்றாலோ எந்த பலனும் நமக்கு வந்து சேராது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் சுவாமிக்கு ஆரத்தி காட்டுகையில் கூற வேண்டிய மந்திரம்

English Overview:
Mantra benefits depends on the chanting place too. If one chant mantra in home in proper way then he will get 10 times benefits. Like wise one can get crore times benefits with different palace. Above we said about mantra benefits in Tamil.