வேலை கிடைக்க மந்திரம்

Amman-Manthiram

இன்றைய சூழலில் வேலை என்பது ஒருவரின் கௌரவத்தை தீர்மானிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. பலருக்கு படிப்பிற்கேற்ற வேலை கிடைப்பதில்லை. கிடைத்த வேலையிலும் பல சிக்கல்கள் இருப்பதுண்டு. சிலருக்கு வேலை கிடைப்பதாலேயே பல சிக்கல்கள் இருப்பதுண்டு. அரசு வேலையே எதிர் பார்த்து சிலர் காத்திருப்பதுண்டு. சுய தொழில் செய்தாலும் தடைகள் ஏற்படுவதுண்டு. இப்படி வேலை சம்மந்தமான அனைத்து தடைகளையும் நீக்க உதவும் மந்திரம் இதோ.

om manthiram

வேலை கிடைக்க மந்திரம்:

ஸ்ரீதேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா
விஷ்ணுபத்நீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ
ஹரிப்ரியா தேவதேவீ மஹாலக்ஷ்மீச சுந்தரீ

தினமும் விளக்கேற்றி இந்த மந்திரத்தை 108 முறை கூறி வர, தொழிலில் உள்ள பிரச்சனைகள் விலகி பண வரவு அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும். அரசு வேலைக்காக காத்திருப்போர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். தினமும் இந்த மந்திரத்தை கூற முடியாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் மாலை வேலையில் 108 முறை ஜபிக்கலாம்.

இதையும் படிக்கலாமே:
நீங்காத துன்பங்கள் அனைத்தும் விலகிட உதவும் பிள்ளையார் சுலோகம்

“சோம்பேறியான மனமும் உடலும் சாத்தானின் கூடாரம்” என்றோரு மேலை நாட்டு பழமொழி உண்டு. மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் தன் வாழ்வை உயர்த்திக்கொள்ளவும், அவன் சார்ந்த சமுதாயம் மற்றும் நாட்டை உயர்த்தவும் உழைக்க வேண்டும் என்பதே முக்கியம் தவிர அவர்கள் செய்யும் தொழிலில் ஏற்றத் தாழ்வுகளை காண்பதென்பது கூடாது. இன்றைய காலத்தில் உலகம் முழுவதும் உள்ள பல கோடிக்கணக்கான மக்கள் பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு வேலையை செய்து உழைத்து பொருளீட்டுகின்றனர்.

Amman

அதே நேரத்தில் உலகெங்கிலும் உள்ள சில சதவிகித மக்கள் சரியான வேலை வாய்ப்பின்றி வாழ்வில் துயரங்களை அனுபவிக்கின்றனர். அதுவும் உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்திலுள்ள நம் நாட்டின் இளைஞர்கள் மிகப்பெரும் படிப்பை படித்து விட்டு வேலை கிடைக்காமலும், ஒரு சிலர் தங்கள் தகுதிக்கு குறைவான ஊதியம் கொண்ட வேலைக்கு செல்கின்றனர். எனவே அனைவருக்கும் கருணை புரியும் அன்னை ஆன அந்த லட்சுமி தேவியை உளமார நினைத்து இம்மந்திரத்தை கூறி பிராத்தித்தால், வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்க அந்த லட்சுமி தேவி அருள் புரிவாள்.

English Overview:
Here we have the Mantra to get job in Tamil. In Tamil language, it is called as Velai Kidaika Manthiram. By chanting this mantra 108 on daily basis one can get some job for sure.