உன்னை மறக்காத என் இதயம் – காதல் கவிதை

Love kavithai

நம் பிரிவின் இறுதியாய்
என் அலைபேசியில் இருந்து
உன் எண்ணை அழித்துவிட்டேன்..
ஆனால் என் இதயம் ஏனோ
அதை மறக்க மறுக்கிறது..
அதற்கு எப்படி புரியவைப்பேன்
நீ இனி இனொருவனுக்கு சொந்தம் என்று..

Kadhal kavithai Image
Kadhal kavithai

இதையும் படிக்கலாமே:
காதல் வலை வீசிய கள்ளி – காதல் கவிதை

இன்றைய காதல் ஜோடிகள் கொஞ்சி குலாவுவதும், சண்டை இட்டு முட்டிக்கொள்வதும் கை பேசி வாயிலாக தான். கை பேசி இல்லை என்றால் காதலே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது என்றால் அது மிகையாகாது. காதலிக்கும் ஒருவர் தன் வாழ்நாளில் எந்த கைபேசி எண்ணிற்கு அதிக நேரம் பேசி இருப்பர் என்றால் அது தன் காதல் ஜோடியின் கை பேசி எண்ணாக தான் இருக்கும்.

உண்மை இபப்டி இருக்கையில், ஏதோ ஒருநாள் அவர்கள் பிரியும் சூழல் வருகிறது. அந்த சமயத்தில் அவர்கள் தன் காதல் ஜோடியோடு மீண்டும் பேச கூடாது என்பதற்காக தன்னுடைய கைபேசியில் இருக்கும் தன் காதலியின் எண்ணையோ காதலனின் எண்ணையோ அழித்துவிடுவது வழக்கம். ஆனால் பாவம், அவர்களது மூலையில் அந்த எண் எப்போதும் படிந்தே தான் இருக்கும். இறக்கும் தருவாயில் கூட அந்த ஒரு தொலை பேசி என் மட்டும் அவர்களுக்கு நினைவில் இருக்கும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை..

Love kavithai Image
Love kavithai

நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், அம்மா கவிதை, அப்பா கவிதை என பல கவிதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.