பச்சை பயிரில் ஒரு முறை இப்படி கிரேவி செஞ்சு பாருங்க. சூப்பரான சைட் டிஷ்ஷா இருக்கும்.

pachai payaru gravy
- Advertisement -

இந்த இட்லி பூரி சப்பாத்தி வெரைட்டி ரைஸ் என இவை அனைத்திற்கும் பொருந்தக் கூடிய ஒரு சுவையான பச்சைப்பயிறு கிரேவியை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த பச்சை பயிரை பொறுத்த வரையில் பெரும்பாலும் முளைகட்டி வேக வைத்து சாப்பிடுவார்கள். இதில் கிரேவி செய்து சாப்பிடும் போது சுவை அட்டகாசமாக இருப்பதுடன் இது உடலுக்கு நல்லதும் கூட, வாங்க இப்ப இந்த கிரேவி எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம்.

செய்முறை

இந்த கிரேவி செய்ய 150 கிராம் பச்சை பயிரை முதல் நாள் இரவே தண்ணீர் ஊற்றி ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து இந்த கிரேவிக்கு ஒரு மசாலாவை நாம் தயார் செய்ய வேண்டும்.

- Advertisement -

அதற்கு மிக்ஸி ஜாரில் அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் சோம்பு, மூன்று லவங்கம், 1 பட்டை, 1 ஏலக்காய், 2 பழுத்த தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு கைப்பிடி புதினா இலை, ஒரு இன்ச் இஞ்சி, 10 பல் பூண்டு இவை அனைத்தையும் சேர்த்த பிறகு நன்றாக ஃபைன் பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து கிரேவி தாளிக்க அடுப்பில் குக்கர் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் 1 பிரியாணி இலை சேர்த்த பிறகு ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை பொடியாக நறுக்கி இதில் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி விடுங்கள். வெங்காயம் நிறம் மாறி வதங்கிய பிறகு நாம் ஏற்கனவே அரைத்து வைத்த விழுதை இதில் சேர்த்து நன்றாக ஒரு முறை வதக்கி விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இந்த மசாலாவில் 1 ஸ்பூன் மிளகாய்த் தூள், 1 ஸ்பூன் தனியா தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்த பிறகு ஊற வைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்த பச்சைப் பயிரையும் சேர்த்து நன்றாக ஒரு முறை கலந்து விடுங்கள். இந்த நேரத்தில் மசாலாக்களின் பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பத்தே நிமிஷத்தில் உடனடியாக நல்ல மொறு மொறுன்னு ராகி தோசையை இப்படி செஞ்சு சாப்பிடுங்க. ஆரோக்கியமான ஒரு உணவை இதை விட ஈசியா சமைக்கவே முடியாது. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

அதன் பிறகு இதில் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து குக்கர் மூடி போட்டு மூன்று விசில் வந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு மூடி திறந்து ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லியை பொடியாக அரிந்து மேலே தூவி விடுங்கள். நல்ல கமகமவென்று வாசத்துடன் பச்சைப்பயிறு கிரேவி அட்டகாசமாக தயாராகி விட்டது. இந்த கிரேவி ரெசிபியை நீங்களும் ஒரு முறை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -