இந்த மார்கழியை தவற விட்டால் இதை செய்ய இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டும். மறக்காமல் இதை மட்டும் செய்து உங்க தலைமுறையே வறுமை இல்லாமல் வாழ வழி செய்து விடுங்கள்.

- Advertisement -

மார்கழி மாதம் என்றாலே நல்ல மாதம் இல்லை, இதில் நல்ல விஷயங்கள் ஏதும் செய்யக் கூடாது என்று பலரும் நினைக்கிறார்கள். அப்படி கிடையாது வருடத்தில் சில மாதங்களை நாம் முன்னோர்கள் வழிபாட்டிற்கென ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இந்த காலங்களில் நாம் செய்யும் வழிபாடுகள் ஆனது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த காலம், இந்த நேரத்தில் நாமும் எழுந்து இறைவனை வழிபாடு செய்தால் முப்பது முக்கோடி தேவர்களின் ஆசிர்வாதமும் நமக்கு முழுமையாக கிடைக்கும் என்பதால் தான் இந்த மாதத்தை நாம் வழிபாட்டிற்கு உகந்த சிறப்பு மிக்க மாதமாக கருதி வருகிறோம். இந்த மாதத்தில் நாம் செய்ய வேண்டியவை செய்ய கூடாத ஆன்மீக தகவல் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை | Margazhi Mathathil Seiya Vendiyavai
மார்கழி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய முதல் விஷயம் அதிகாலையில் எழுவது. பெண்கள் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு வாசல் தெளித்து அரிசி மாவில் கோலம் போட்டு (இரவில் கோலம் போடுவதை தவிர்க்க வேண்டும்) வாசலில் தினமும் அகல் விளக்கு ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இதன் பிறகு வீட்டின் பூஜை அறையிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும். இந்த நேரத்தில் வீட்டில் லட்சுமி சஹஸ்ரநாமம், திருப்பாவை, திருவெண்பாவை இப்படி இறைவன் நாமங்களையும், பாராயணங்களையும் கேட்பது இன்னும் விசேஷம். ஆண்கள் பஜனைப் போன்றவற்றில் கலந்து கொள்ளலாம். இந்த மாதத்தில் சூரிய உதயத்திற்கு பின் தூங்க கூடாது இது வீட்டிற்கு அவ்வளவு நல்லதல்ல.

இப்படி வீட்டில் பூஜை செய்வதோடு மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு ஆலயத்திற்கு சென்று இறைவனை வழிபடுவதால் இந்த மாதத்தில் இறைவனின் பரிபூரண பார்வை நமக்கு கிடைக்கும். இந்த மார்கழி மாத வழிப்பாட்டை நாம் செய்து விட்டோம் என்றால், வருடம் முழுவதும் வழிபட்டதற்கான பலன் கிடைக்கும்.

- Advertisement -

ஆகையால் தான் இந்த மாதத்தை வழிபாட்டிற்குரிய மாதமாகவும், இந்த மாதத்தில் விடியற்காலையில் எழுந்து கோலம் போட்டு பூஜை செய்து, பஜனை பாடி இறைவனை வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருந்தார்கள். அதுமட்டும் இன்றி இது வீட்டிற்கு லஷ்மி கடாட்சத்தை கொடுக்கும்.

இவற்றுடன் நாம் கட்டாயமாக செய்ய வேண்டியது தனுர் பூஜை. மார்கழி மாதத்திற்கு தனுர் என்கிற பெயரும் உண்டு.  இந்த மாதத்தில் அனைத்து கோவில்களிலும் பிரம்ம முகூர்த்தத்தில்  தனுர் பூஜை நடைபெறும். இந்த பூஜையில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும். ஒரு மாதம் முழுவதும் நடைபெறும் இந்த பூஜையை நாமும் ஒரு நாள் செய்யலாம், முடியாதவர்கள் மற்றவர் செய்யும் பூஜையில் கலந்து கொண்டு பால், சுண்டல், சக்கரை பொங்கல் போன்ற ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை இறைவனுக்கு படைத்த பிறகு கோவிலுக்கு வருபவர்களுக்கு கொடுத்தால், அந்த வருடம் முழுவதும் அன்னதானம் செய்ததற்கான பலன் கிடைக்கும். இதனால் நம் தலைமுறையே வறுமை இல்லாமல் வாழ்வார்கள்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் எந்த இடங்களில் எல்லாம் பல்லி இருந்தால் அதிர்ஷ்டம் வரும் என்று உங்களுக்கு தெரியுமா? வீட்டில் பல்லி இருக்கும் இடத்தின் அதிர்ஷ்ட பலன்கள்!

இந்த மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவைகள் தெரிந்து கொண்டு அதை கடைபிடித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம்.

- Advertisement -