வாரத்தில் ஒரே 1 நாள் இந்த சின்ன விளக்கை ஏற்றி வைத்தால் போதும். வீடு முழுவதும் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்து சந்தோஷம் பொங்கும்.

vilakku-deepam
- Advertisement -

நம்முடைய வீட்டில் சந்தோஷம் நிறைவாக நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் தினந்தோறும் தீபவழிபாடு மிக மிக நல்லது. ஆனால், இதில் இருக்கும் உண்மை நம்மில் நிறையப் பேருக்குத் தெரிவதே கிடையாது. விளக்கு ஏற்றுவதற்கு காலை மாலை இரண்டு நேரத்தில் வெறும் 5 நிமிடத்தை ஒதுக்கி வையுங்கள். விளக்கை ஏற்றி வைத்து விட்டால் தானாக அதுபாட்டுக்கு எரிந்து கொண்டிருக்கும். தீபச்சுடரில் இருந்து வெளி வரும் ஒளியானது உங்கள் வீட்டில் இருக்கும் கண்ணுக்கு தெரிந்த கண்ணுக்கு தெரியாத இருளை விலக்கும். இது நிதர்சனமான உண்மை.

தினமும் பூஜை அறையில் தீபம் ஏற்றி இறைவனை வணங்க வேண்டும். இது அல்லாமல் வாரத்தில் ஒரே ஒருநாள் ஏதாவது ஒரு கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்குமோ அந்த கிழமையில் ஒரு சிறிய மண் அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் கொஞ்சம், பசுநெய் கொஞ்சம், இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலந்து ஊற்றி விடுங்கள். அதில் மூன்று மருதாணி விதைகளை போட்டு, திரி போட்டுத் தீபம் ஏற்றி பூஜை அறையில் வையுங்கள்.

- Advertisement -

இதேபோல மூன்றிலிருந்து நான்கு விளக்குகள் தயார் செய்து கொள்ளுங்கள். (மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய், நெய், மருதாணி விதை, திரி போட்டு தீபம்) உங்களுடைய வீட்டு வரவேற்பறை, சமையலறை படுக்கையறை இன்னும் எங்கெல்லாம் அறைகள் இருக்கின்றதோ, பாத்ரூமை தவிர்த்து விட்டு மற்ற இடங்களில் எல்லாம் இந்த விளக்கை ஏற்றி வையுங்கள். எத்தனை விளக்கு வேண்டும் என்றாலும் இப்படி தயார் செய்து கொள்ளலாம் தவறு கிடையாது.

சிறிய மண் அகல்விளக்கு போதும். அந்த தீபம் எரிந்து முடியும் வரை அப்படியே இருக்கட்டும். அவ்வளவு தான் இதுதான் பரிகாரம். இந்த தீபச்சுடரில் இருந்து வெளிவரக்கூடிய அந்த வாசம் அந்த புகை தீபச் சுடரின் ஒளி உங்களுடைய வீட்டில் இருளை அகற்றி விடும்.

- Advertisement -

கண்ணுக்குத் தெரியாத வாஸ்து தோஷத்தை நீக்கி விடும். மூலைமுடுக்குகளில் ஒளிந்துகொண்டிருக்கும் எதிர்மறை ஆற்றலை அழித்துவிடும். வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதற்கு தேவையான அத்தனை ஆற்றலைக் கொடுக்கக்கூடிய தன்மை கொண்ட விளக்குதான் இது. நல்லெண்ணெயும் நெய்யும் சேரும் போது இதோடு மருதாணி விதையும் சேரும்போது அபரிதமான ஆற்றல் வெளியாகும்.

இந்த தீபத்தை தினமும் ஏற்ற போவது கிடையாது. வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை கூட ஏற்றுக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். ஆனால் வீட்டிற்கு உள்ளே சமையல் அறை படுக்கை அறையில் ஏற்றும்போது கொஞ்சம் ஜாக்கிரதையா ஏற்றங்கள். துணிமணி இருக்கக்கூடிய இடத்திற்கு அருகில் நெருப்பை கொண்டுபோய் வைத்து விடாதீர்கள். கவனம் தேவை.

காலை அல்லது மாலை நேரம் எந்த நேரம் உங்களுக்கு சவுகரியமாக இருக்கும். அந்த நேரத்தில் ஏற்றி வையுங்கள். ஒரு மணி நேரம் போல எறிந்தால் கூட போதும். இந்த தீப ஒளிச்சுடர் உங்கள் வீட்டிற்கு நிச்சயமாக எல்லா நன்மைகளையும் கொண்டு வந்து சேர்க்கும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். வாரம் வாரம் உள்ளே இருக்கக்கூடிய விதையை புதியதாக தான் போடவேண்டும்.

- Advertisement -