நீங்க எப்படி அரைத்து வைத்தாலும் மருதாணி சிவக்கவில்லையா? இப்படி அரைச்சு வைச்சு பாருங்க ஒரு மாதம் ஆனா கூட நிறம் மாறாது.

- Advertisement -

மருதாணி இட்டுக் கொள்வது என்பது வெறும் அழகிற்காக மட்டும் செய்வது அல்ல. மருதாணி போடுவதே ஒரு தனி கலைதான். மருதாணி நம் உடம்பில் உள்ள சூட்டை தணிந்து நம் உடலை குளுமை படுத்த ஒரு நல்ல மருந்து. அதே போல் மருதாணியை அரைத்து தீக்காயம் பட்ட இடங்களில் கூட தேய்த்து விடலாம். தலைமுடி பிரச்சனைக்கும் ஒரு நல்ல தீர்வு கொடுக்கும் சக்தி இந்த மருதாணிக்கு உண்டு. அனைத்திலும் விட பெண்கள் இந்த மருதாணியை வைப்பதன் மூலம் அவர்களின் மன அழுத்தம் பெருமளவு குறையும்.

மருதாணி வைப்பதை ஒரு விசேஷமாகவே கொண்டாடும் அளவிற்கு இந்த மருதாணி நம் பாரம்பரியத்தில் ஒன்றாக திகழ்கிறது. முன்பெல்லாம் நம் வீடுகளில் ஏதாவது விசேஷம் என்றால் முதலில் பெண்களுக்கு தோன்றுவது மருதாணி. மருதாணி இலையை பறித்து அதை அரைத்து கைகளில் வைப்பது தான் நம் பாரம்பரிய வழக்கம். இப்படி அரைத்து வைக்கும் இந்த மருதாணி எல்லோருக்கும் ஒரே மாதிரியாக நிறத்தை கொடுப்பதில்லை. சிலருக்கு நல்ல கருஞ்சவப்பாகவும், சிலருக்கு இளஞ்சிவப்பாகவும் ஏன் ஒரு சிலருக்கு கரும் பச்சை நிறத்தில் கூட மாறிவிடும். மருதாணி என்பது வைத்தவுடன் கை சிவந்து இருந்தால் மட்டுமே அதைப் பார்க்க அழகாக இருக்கும் அதற்காக சில வழிமுறைகளை தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

முதலில் மருதாணியை எப்படி அரைக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
முதலில் மருதாணி அரைக்க நல்ல கொழுந்து இலைகளாக பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நிறம் நன்றாக இருக்கும் முற்றிய இலைகள் அத்தனை நிறத்தை கொடுக்காது. அதே போல் அரைக்கும் முன்பு அதில் உள்ள காம்பு போன்றவை அனைத்தையும் சுத்தமாக எடுத்த பிறகு தான் அரைக்க வேண்டும். இல்லை எனில் மருதாணியில் திப்பி திப்பியாக தங்கி கையில் வைக்கும் போது ஆங்காங்கே இந்த திப்பி உள்ள இடங்களில் மருதாணி பிடிக்காமல் பார்க்க நன்றாக இருக்காது. அதே போல மருதாணி இலைகளை கொஞ்சமாக போட்டு சிறிது நேரம் அரைத்த பிறகு மீதி இலைகளை போட்டு அரைத்தால் இலைகள் அனைத்தும் நன்றாக அரைப்பட்டு வைக்க சுலபமாக இருக்கும்.

இப்போது நன்றாக சிவக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். மருதாணி அரைக்கும் போது அதில் கொஞ்சம் புளி சேர்த்து அரைக்கலாம். பாக்கு சேர்த்தும் அரைக்கலாம். (கொட்டை பாக்கு இருந்தால் இன்னும் நல்லது). மருதாணி அரைக்கும் போது சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்தும் அரைக்கலாம். அது மட்டும் இல்லாமல் இத்துடன் கிராம்பு சேர்த்தும் அரைக்கலாம். இவைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் சேர்த்து அரைத்தால் போதும். அனைத்தையும் சேர்த்து அரைக்க கூடாது.

- Advertisement -

மருதாணி அரைத்து பிறகு அதை எப்படி வைக்க வேண்டும் என்று பார்ப்போம். மருதாணி வைக்கும் முன்பு நம் கை விரல் மற்றும் நகங்களின் மேலும் எலுமிச்சை சாறு தடவி ஒரு இரண்டு நிமிடம் அப்படியே ஆறவிட்டு அதற்கு மேல் இந்த மருதாணியை வைத்துப் பாருங்கள். இந்த மருதாணி எப்படி இவ்வளவு அழகாக சிவந்து இருக்கிறது என்று உங்களிடம் கேட்பார்கள் அந்த அளவிற்கு இதன் நிறம் அருமையாக பற்றிக்கொள்ளும்.

இதையும் படிக்கலாமே: 2 மடங்கு முடி வளர்ச்சியை வேகமாக தூண்ட இந்த 2 பொருள் போதும். இரண்டு கைகளுக்கும் அடங்காத அளவுக்கு முடி அடர்த்தியாகும்.

இவையெல்லாம் செய்து அரைத்து வைத்த பிறகு, மருதாணி காய்ந்த உடன் அப்படியே நாம் கையை தண்ணீர் கொண்டு அலசுவோம். அப்படி செய்ய கூடாது. மருதாணி எடுத்தவுடன் சிறிது தேங்காய் எண்ணெயை கையில் தேய்த்து விட்டு பிறகு அலசினால் மருதாணி நிறம் இன்னும் நல்ல சிவப்பாக பிடிக்கும். அழகாக வைக்க படும் இந்த மருதாணியை மேலும் அழகாக்க இந்த முறையில் வைத்து தான் பாருங்களேன், உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.

- Advertisement -