இப்படி மசாலா அரைச்சு, தக்காளி குழம்பு வெச்சு தான் பாருங்களேன். இதோட வாசம் பக்கத்து வீட்டு வரைக்கும் வீசும்.

kuzhambu
- Advertisement -

கமகமன்னு ஒரு வாசத்தோடு சமைப்பதே ஒரு கலைதான். நாம சமைக்கும் போது, வரக்கூடிய வாசமே அடுத்தவர்களுடைய பசியை தூண்ட வேண்டும். அதுதான் நிறைவான சமையல் ஆக இருக்க முடியும். என்னதான் மசாலா பொருட்களை சேர்த்து சமைத்தாலும், சமைப்பவர்களுடைய பாசமும் கொஞ்சம் சமையலில் கலந்திருந்தால் அதன் ருசியே தனிதான். சரி, கொஞ்சம் பாசத்துடன், கொஞ்சம் வாசத்துடன், கொஞ்சம் மசாலா பொருட்களுடன், ஒரு சுலபமான தக்காளி குழம்பு ரெசிபியை எப்படி வைப்பது தெரிந்து கொள்வோமா.

kuzhambu1

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அந்த கடாய் சூடானதும் மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து இந்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, இந்த பொருட்களோடு 2 டேபிள்ஸ்பூன் – தேங்காய் துருவல், சேர்த்து தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவேண்டும். தேங்காய் நிறைய சேர்க்க வேண்டாம். மொத்தமாக 2 டேபிள் ஸ்பூன் அளவு தேங்காய் சேர்த்தாலே போதுமானது தான். (இது தக்காளி குருமா போல இருக்கக் கூடாது. குழம்பு பக்குவத்தில் தான் இருக்க வேண்டும்.) இந்த அரவை அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது தக்காளி குழம்பை தாளித்த செல்லலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன் போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். தோல் உரித்த சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது – 20 பல், தோலுரித்த பூண்டு பல் – 10, இந்த இரண்டு பொருட்களை சேர்த்து முதலில் நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். சின்னவெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரவேண்டும். ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு கொள்ள வேண்டும்.

kuzhambu2

அடுத்தபடியாக இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் சேர்த்து வதக்குங்கள். அடுத்து மீடியம் சைஸில் இருக்கும் நான்கு தக்காளி பழங்கள் – 4 மிக பொடியாக வெட்டி கடாயில் சேர்த்து குழம்புக்கு தேவையான அளவு உப்பு தூளை தூவி, அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு தக்காளி பழங்களை ஒரு நிமிடம் வதக்கி விட வேண்டும். தக்காளி பழத்தில் இருந்து தண்ணீர் விட்டு வரும். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு கடையின் மேலே ஒரு தட்டு போட்டு மூடி 5 நிமிடங்கள் தக்காளி பழங்களை நன்றாக வேக வைத்து விடுங்கள். (இடையிடையே மூடியைத் திறந்து தக்காளி பழங்களை வதக்கி விட வேண்டும்.)

- Advertisement -

தக்காளி வதங்கி வெந்து வந்தவுடன் குழம்பு மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், சேர்த்து மீண்டும் தக்காளியை நன்றாக வதக்கி விடுங்கள். தக்காளியின் பச்சை வாடை நீங்கி நாம் சேர்த்திருக்கும் மசாலா பொருட்களின் பச்சை வாடை நீங்கி எண்ணெய் பிரிந்து வர வேண்டும். அந்த அளவிற்கு தக்காளி வதக்கிய பின்பு, குழம்புக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விட்டு, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மசாலா அரவையை குழம்பில் ஊற்றி சரியாக இரண்டு நிமிடங்கள் குழம்பை தளதளவென கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள்.

kuzhambu4

இதன் மேலே கொத்தமல்லி தழையை தூவி சூப்பராக இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு பரிமாறி பாருங்களேன். இந்த குழம்பு அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருக்கா. ஒருவாட்டி உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -