10 நிமிடத்தில் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி சுவையான மசாலா முட்டை சாதம் இப்படி செஞ்சு பாருங்க அருமையாக இருக்குமே!

- Advertisement -

சமையல் தெரியாதவர்கள் கூட ரொம்ப ரொம்ப சுலபமாக செய்து அசத்தக்கூடிய இந்த முட்டை சாதம் அருமையான சுவையில் இருக்கப் போகிறது. 10 நிமிடத்தில் லஞ்ச் பாக்ஸில் கட்டி கொடுத்து விடக்கூடிய இந்த மசாலா முட்டை சாதம் செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. பேச்சுலர்ஸ் கூட டக்குனு செய்து அசத்தக்கூடிய இந்த மசாலா முட்டை சாதம் அருமையான சுவையில் வீட்டில் எப்படி தயார் செய்யப் போகிறோம்? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் இனி அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், பெருஞ்சீரகம் – அரை ஸ்பூன், பூண்டு – 5 பல், பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2 கருவேப்பிலை – ஒரு கொத்து, மிளகாய்த்தூள் -ஒரு ஸ்பூன், தனியா தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தக்காளி பழம் – இரண்டு, முட்டை – நான்கு, மிளகு தூள் – ஒன்றரை டீஸ்பூன், உதிரியாக வடித்த சாதம் – 2 கப், நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

செய்முறை விளக்கம்

முட்டை சாதம் செய்வதற்கு முதலில் ஒரு அடி கனமான வாணலி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் சோம்பு போட்டு பொரிய விடுங்கள். பூண்டு பற்களை சேர்த்து பொன் நிறமாக சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். ரெண்டு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் பாதி அளவிற்கு நன்கு வதங்கி வரும் பொழுது பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்குங்கள். இவை நன்கு வதங்கியதும் மிளகாய்த் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலாத் தூள், மஞ்சள் தூள் ஆகிய மசாலா வகைகளை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து விட வேண்டும்.

- Advertisement -

பச்சை வாசம் போக நன்கு கலந்து விட்ட பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி பழங்களை சேர்த்து வதக்குங்கள். அனைத்தும் மசிய வதங்கியதும் வாணலியில் மசாலாவை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறுங்கள். முட்டை ஓரளவுக்கு நன்கு வெந்து வந்த பின்பு மசாலாவுடன் சேர்த்து கலந்து விடுங்கள். ஒரு ரெண்டு நிமிடம் நன்கு கலந்து விட்ட பின்பு ஒன்றரை டீஸ்பூன் அளவிற்கு மிளகு தூளை சேர்த்து வதக்குங்கள்.

இதையும் படிக்கலாமே:
உருளைக்கிழங்கு இருந்தா சப்பாத்தியை எப்பவும் போல செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமா இப்படி செஞ்சு கொடுங்க. கணக்கே இல்லாம சாப்பிட்டு காலி பண்ணிடுவாங்க.

பிறகு நன்கு உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி ஒரு முறை நன்கு பிரட்டி விடுங்கள். சாதத்தில் எல்லா மசாலாவும் நன்கு இறங்கி இருக்க வேண்டும். அந்த அளவிற்கு கலந்துவிட்ட பின்பு சாதத்தை அழுத்தி சமம் செய்து விடுங்கள். அவ்வளவுதான், ஒரு பத்து நிமிடத்திற்கு பிறகு சூடாக பரிமாறி பாருங்கள் அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -