உருளைக்கிழங்கு இருந்தா சப்பாத்தியை எப்பவும் போல செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமா இப்படி செஞ்சு கொடுங்க. கணக்கே இல்லாம சாப்பிட்டு காலி பண்ணிடுவாங்க.

alu paratha
- Advertisement -

பொதுவாக சப்பாத்தி என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவு தான். அது மட்டும் இன்றி இது ஒரு ஆரோக்கியமான உணவும் கூட. இந்த சப்பாத்தியை கொஞ்சம் வித்தியாசமாக எல்லோரும் பிடித்தது போல கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுக்கும் பொழுது ஆசையாக சாப்பிடுவார்கள். அப்படி ஒரு சுவையான சப்பாத்தி ரெசிபியை பற்றி தான் இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

இந்த ரெசிபி செய்வதற்கு முதலில் ஒரு பவுலில் இரண்டு கப் கோதுமை மாவு அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து இந்த மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ளுங்கள. கடைசியாக இந்த மாவின் மீது கொஞ்சமாக எண்ணெய் தடவி மாவை மிருதுவாக பிசைந்து தட்டு போட்டு மூடி பத்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

- Advertisement -

இதற்குள்ளாக இந்த சப்பாத்தி உள்ளே வைக்க உருளைக்கிழங்கு மசாலாவை தயார் செய்து கொள்வோம். அதற்கு மூன்று மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ளுங்கள் ஒரு சின்ன வெங்காயம் இரண்டு பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிந்த உடன் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கி வைத்த பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து லேசாக வதங்கிய பிறகு, நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு மசித்து வைத்து உருளைக்கிழங்கு சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா, அரை ஸ்பூன் உப்பு அனைத்தையும் சேர்த்து அடுப்பை மீடியம் பிளேமில் வைத்து எந்த மசாலாக்கள் உருளைக்கிழங்குடன் நன்றாக கலக்கும் வரை ஐந்து நிமிடம் வரை கைவிடாமல் கலந்து விடுங்கள். இதை கடைசியாக இருக்கும் போது கொஞ்சம் கொத்தமல்லியை பொடியாக மேலே தூவி இறக்கி விடுங்கள்.

இந்த மசாலா சூடு ஆறிய பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஏற்கனவே தயார் செய்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி திரட்ட வேண்டும். முதலில் வட்ட வடிவமாக சப்பாத்தியை திரட்டிய பிறகு உருட்டி வைத்த மசாலா உருண்டையை உள்ளே வைத்து இந்த மாவை ஓரங்கள் எல்லாம் மடித்து மீண்டும் உருண்டையாக தட்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு கொஞ்சம் கோதுமை மாவில் தொட்டு எடுத்து லேசாக மேலே வைத்து தேய்த்தால் போதும் அருமையான ஸ்டப்பிங் தயாராகி விடும்.

இதையும் படிக்கலாமே: உருளைக்கிழங்கு இருந்தா போதும் 10 நிமிடத்தில் சூப்பரான டிக்கி இப்படி செஞ்சு பாருங்க வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க!

இப்பொழுது அடுப்பில் தவா வைத்து சூடானவுடன் அதை மீடியம் ஃபிலிமுக்கு மாற்றி தயார் செய்து வைத்த இந்த ஆலு சப்பாத்தியை அதில் சேர்த்து கொஞ்சமாக எண்ணெய் விட்டு இரண்டு புறமும் சிவந்து வரும் வரை திருப்பி போட்டு எடுத்து விடுங்கள். அருமையான ஆலு சப்பாத்தி தயார். இந்த ஆளு சப்பாத்தியை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் நீங்களும் ஒரு முறை இதை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -