தக்காளி சேர்க்காமல் இப்படி சுவையான குழம்பு செய்து பாருங்கள். சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்

onion
- Advertisement -

திடீரென ஒவ்வொரு நாளும் தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு நாள் 70 ரூபாய், மற்றொரு நாள் 80 ரூபாய் என நாளுக்கு நாள் தக்காளியின் விலை ஏறிக்கொண்டு தான் போகிறது. கடைக்குச் சென்று தக்காளி வாங்க நினைப்பவர்கள் கூட விலையை கேட்டவுடன் திரும்பி வருகிறார்கள். அந்த அளவிற்கு கடுமையான விலை ஏற்றம் உள்ளது. இப்படி சென்றுகொண்டிருந்தால் மக்கள் தக்காளி சேர்க்காமல் தான் உணவு சமைக்க வேண்டும். அப்படி தக்காளி சேர்க்காமல் செய்யும் உணவில் எப்படி ருசி இருக்கும் என்று பலருக்கும் தோன்றும். ஆனால் தக்காளி சேர்க்காமல் செய்யும் இந்த குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு சூப்பராக இருக்கும். வாயில் வைத்தவுடனே நாவில் எச்சில் ஊறும் சுவையில் இருக்கும். வாருங்கள் தக்காளி சேர்க்காத இந்த குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 20, பூண்டு – 15 பல், புளி – எலுமிச்சம்பழ அளவு, மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் 5 ஸ்பூன் கடுகு அரை ஸ்பூன் வெந்தயம் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, மிளகு – ஒரு ஸ்பூன், துவரம் பருப்பு – ஒரு ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், தனியா – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்து சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பிறகு இவற்றை இரண்டாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் எலுமிச்சை பழ அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து, அதனை நன்றாக கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த புளிக்கரைசலில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் ஒரு ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றை ஆற வைத்து, மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு கருவேப்பிலை, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து லேசாக வதக்கி விட வேண்டும்.

பின்னர் இதனுடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் இவற்றுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கிளறி விடவேண்டும். பிறகு தட்டு போட்டு மூடி குழம்பு மிளகாய் தூள் வாசனை போகும் வரை கொதிக்க வேண்டும். பின்னர் இறுதியாக அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை இரண்டு ஸ்பூன் அளவு சேர்த்து கலந்து விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -