ஆயுதபூஜை கொண்டாடி, உங்க எல்லார் வீட்டிலேயும் கட்டாயம் இப்ப பொரி இருக்கும். இந்த பொரிய வெச்சு, ‘சூப்பர் மசாலா பொரி’ எப்படி போடுவது? ஒரு சின்ன டிப்ஸ் இருக்கு.

masal-pori

ஆயுத பூஜையை கொண்டாடி முடித்து, எல்லோரது வீட்டிலும் பொரியை கட்டாயம் வைத்திருப்பீர்கள். அந்தப் பொறியில் மசாலாப் பொரியும், சில பேருக்கு போட தெரிந்திருக்கும். சரி, உங்களுக்கு மசாலா பொரி செய்ய தெரிந்திருந்தாலும், செய்யத் தெறியாட்டியும், இந்த ஒரே ஒரு சின்ன டிப்ஸ் ஃபாலோ பண்ணி ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க! நிச்சயமா டேஸ்ட்ல வித்தியாசம் இருக்கும். அதாவது கடையில போடற மசாலா பொரி மாதிரி கிடைக்கும். அந்த சின்ன டிப்ஸ் என்ன பார்க்கலாமா. இந்த மசாலா பொரி குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

pori

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் 2 கப் அளவு பொரியை போட்டு கொள்ளுங்கள். இதில் வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்,  பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1, (தக்காளி பழத்தின் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி விட்டு, மேலே உள்ள தோலை மட்டும் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். தக்காளி பழத்தோட ஜூசை சேர்க்கக்கூடாது.)

கேரட் துருவல் 1/2 கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு, மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், உப்பு இரண்டு சிட்டிகை போதும். இறுதியாக நம்மில் நிறைய பேர் மசாலா பொரியல் நல்லெண்ணெய் ஊற்றுவோம். நல்லெண்ணெய் ஊற்றி செய்தால் தவறு கிடையாது. 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். நல்லெண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து மசாலா பொரி செய்தால் இதன் சுவை மேலும் அதிகரிக்கும். இதுதாங்க அந்த டிப்ஸ்.

masal-pori1

இந்த பொருட்களை எல்லாம் ஒரு கரண்டியை கொண்டு நன்றாக கலந்து விட்டு, இறுதியாக எலுமிச்சை பழச்சாறை மேலே பிழிந்து, ஒருவாட்டி கலந்துவிட்டு உடனடியாக பரிமாறி விடுங்கள். அவ்வளவுதாங்க! இறுதியாக உங்களுடைய வீட்டில் மிக்சர் ஓமப்பொடி இருந்தால் இதன்மேல் தூவிக் கொள்ளலாம். மசாலா பொரி சூப்பரா இருக்கும். இந்தப்பக்கம் சூடா ஒரு கப் டீ, இந்தப்பக்கம் ஒரு பவுலில் மசாலா பொரி. ரொம்ப சுலபமா செஞ்சிடலாம்.

- Advertisement -

அடுத்ததா, சூப்பர் கார பொரி ரெசிபி உங்களுக்காக!
ஒரு அகலமான கடாயில் 2 டேபிள்ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி, சூடு பண்ணிக் கொள்ள வேண்டும். அதில் பூண்டு பல் – 6 (தோலுரித்து பொடியாக நசுக்கியது), வரமிளகாய் – 3 (இரண்டாக கிள்ளியது), வேர்க்கடலை – 1/4 கப், பொட்டுக்கடலை – 1/4 கப், கறிவேப்பிலை – 1 கொத்து, 2 சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், எல்லாவற்றையும் அந்த எண்ணெயில் போட்டு இரண்டு நிமிடங்கள் வறுத்து, 1/2 படி பொரியை கொட்டி, ஒரு நிமிடம் கிளறினால் போதும்.

karapori

சூப்பரான காரப்பொரி தயார். கொஞ்சம் நமத்த பொரி இருந்தால் கூட, இந்தக் காரப்பொரி மசாலாவை செய்யலாம். கடாயில் போட்டு வறுக்கும்போது மொறுமொறுவென மாறிவிடும். ட்ரை பண்ணி பாருங்க. உங்க வீட்ல இருக்க இந்த ஆயுத பூஜைக்கு வாங்கிய ஒரு பொறி கூட வீணாவே போகாது. ஒரு நாளைக்கு காரப்பொரி, ஒரு நாளைக்கு மசாலா பொடி செஞ்சு சாப்பிட்டு எல்லாத்தையும் காலி பண்ணிடுங்க.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டு செடிகளுக்கு தண்ணீர் ஸ்ப்ரே செய்வீங்களா? இந்த சூப்பரான ரகசியத்த முதல்ல தெரிஞ்சுகிட்டு அப்புறமா பண்ணுங்க!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.