மாசி அமாவாசை குலதெய்வ வழிபாடு

amman
- Advertisement -

மாசி மாதம் என்றாலே அது லாபகரமான மாதம். இந்த மாதத்தில் எந்த வேலையை தொடங்கினாலும் அது உங்களுக்கு லாபகரமாக அமையும் என்பது ஜோதிடர்கள் சொல்லக்கூடிய கருத்து. அதுமட்டுமில்லாமல் இந்த மாசி மாதத்தில் நீங்கள் செய்யக்கூடிய குலதெய்வ வழிபாடு உங்களுக்கு வெற்றியையும் தேடித் தரும்.

மாசி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பண காரியங்களை எல்லாம் முடித்துவிட்டு, கூடவே சேர்த்து குலதெய்வத்தையும் வழிபாடு செய்து பிரார்த்தனை வைத்தால், குடும்ப கஷ்டங்கள் தீரும். திருமணம் ஆகி ரொம்ப நாள் ஆகியும் குழந்தை வரம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க, திருமண வயதை கடந்தும் இன்னும் திருமணம் நடக்காதவர்களுக்கு திருமணம் நடக்க, சுபகாரிய தடைகள் உடைய வீட்டில் இருக்கும் தீராத கஷ்டங்கள் தீர நாளைய தினம் செய்ய வேண்டிய குலதெய்வ வழிபாட்டு பற்றிய சிறப்பான தகவலைத்தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

மாசி அமாவாசை குலதெய்வ வழிபாடு

மாசி மாத அமாவாசை நாளைய தினம் வரவிருக்கின்றது. 10.3.2024 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் மாசி மாத அமாவாசை. இந்த அமாவாசை தினத்தில் உக்கிர தெய்வங்களின் வழிபாடு ரொம்ப ரொம்ப சிறப்பு. மாசி அமாவாசையில் மசான கொள்ளை என்ற வழிபாடு அங்காள பரமேஸ்வரி கோவில்களில் பிரசித்தியாக நடைபெறும். தீய சக்திகளை எல்லாம் அழித்து, நல்ல சக்தியை இந்த பூமியில் நிலை நாட்டுவதற்காக அம்பாள் அவதரித்த ஒரு சொரூபம் தான் அந்த அங்காள பரமேஸ்வரி ஸ்வரூபம்.

உங்களுடைய குலதெய்வம் இப்படி உக்கிர அம்மனாக இருந்தால் அந்த அம்பாளுக்கு செய்யக்கூடிய வழிபாட்டு முறைகளை நாளைய தினம் நீங்கள் செய்யத் தவறவே கூடாது. உங்க குலதெய்வ கோவிலுக்கு சென்று அங்கு நடக்கும் விசேஷ பூஜைகளில் நீங்கள் கலந்து கொண்டு உங்களுடைய பிரார்த்தனையை வையுங்கள்.

- Advertisement -

பரம்பரை பரம்பரையாக உங்களுடைய முன்னோர்கள் உங்கள் குலதெய்வத்தை எப்படி வழிபாடு செய்தார்களோ, அதே போல நாளைய தினம் உங்கள் குல தெய்வத்திற்கு நீங்கள் வழிபாடு செய்து வேண்டுதல் வைத்தால் நிச்சயமாக உங்களுடைய வேண்டுதல். அடுத்த மாசி அமாவாசைக்குள் பலிக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த மாசி அமாவாசையில் நீங்கள் குலதெய்வத்திடம் என்ன வரம் கேட்டாலும் அது உங்களுக்கு அப்படியே கிடைக்கும்.

உங்களுடைய குலதெய்வம் உக்கிரமான அம்பாளாக இருந்தால் மேல் சொன்ன வழிபாட்டை நீங்க தவற விடாதீங்க. சரி, எங்களுடைய குலதெய்வம் அம்பாள் இல்லை. உக்கிரமான தெய்வங்களின் வழிபாடும் எங்களுடைய குடும்பத்தில் இல்லை என்பவர்கள் என்ன செய்வது. நாளைய தினம் உங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று உங்க வழக்கப்படி உங்களுடைய வழிபாட்டினை மேற்கொள்ளலாம் தவறு கிடையாது.

- Advertisement -

அப்படி இல்லை என்றால் பொதுவாக நாளைய தினம் எல்லோருமே கடல் சார்ந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது உங்களுடைய கர்ம வினைகளை குறைக்கும். இது பொதுவான வழிபாடு‌. எல்லோரும் கடல் சார்ந்த கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் இறைவனை வழிபாடு செய்யலாம். கஷ்டங்களை தீர்க்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு போகலாம்.

ராமேஸ்வரத்திற்கு போகலாம். இப்படி கடலுக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று கடலில் நீராடி பிறகு அந்த இறைவனை வழிபாடு செய்து விட்டு வந்தால் உங்கள் கஷ்டங்கள் தீரும், வேண்டுதல் பலிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

மேல் சொன்ன எந்த வழிபாட்டிற்குமே எங்களுக்கு வாய்ப்பு இல்லை. வீட்டில் இருந்து நாளைய தினம் வெளியிடங்களுக்கு செல்லவே முடியாது என்பவர்கள், நாளை மாலை வீட்டில் இருந்தபடியே விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குல தெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்த ஒரு சக்கரை பொங்கலை செய்து வைத்துவிட்டு, குடும்பத்தோடு எல்லோரும் பூஜை அறையில் அமர்ந்து, குலதெய்வத்தை நாளைய தினம் வழிபாடு செய்தாலும் உங்கள் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர அமாவாசை செய்ய வேண்டிய பரிகாரம்

உங்க வீட்டு பக்கத்தில் இருக்கக்கூடிய ஏதாவது அம்பாள் கோவிலுக்கு நாளைய மாலை நேரத்தில் சென்று, அந்த அம்மனை வழிபாடு செய்யுங்கள். இரண்டு மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வீட்டு வழிபாட்டை மேற்கொள்ளலாம் தவறு கிடையாது. மேல் சொன்ன வழிபாட்டு குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -