பணக்கஷ்டம் தீர பௌர்ணமி அம்மன் வழிபாடு

amman9
- Advertisement -

இன்று மாசி மகம், முழு பௌர்ணமி நாள், சனிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. இந்த நாளை நாம் தவற விடலாமா. வாழ்க்கையில் உங்களுக்கு இருக்கும் தீராத பணக்கஷ்டம் மனக்கஷ்டம் தீர, சுப காரிய தடைகள் விலக, இன்று மாலை செய்ய வேண்டிய அம்பாள் வழிபாட்டை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த வழிபாட்டை செய்வது குடும்பத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. இன்று மாலை அம்பாள் கோவிலுக்கு சென்று வழிபாட்டை எப்படி மேற்கொள்வது, எந்த பொருளை மறக்காமல் அம்மன் கோவிலுக்கு எடுத்துட்டு போனால் உங்கள் பணகஷ்டம் தீரும் என்பதை பற்றிய தகவலை பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

பௌர்ணமி அம்மன் வழிபாடு

பௌர்ணமி அன்று வீட்டில் இருக்கும் பெண்கள் அம்பாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் இந்த மாத பௌர்ணமி சனிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. வீட்டில் யாருக்கேனும் சனி தோஷத்தால் பிரச்சனை, ஏழரை சனி நடக்கிறது, இதனால் குடும்பத்தில் துன்பம் அதிகமாக இருக்கிறது என்பவர்களும் இன்று அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளலாம். சனி பகவானின் தாக்கம் குறையும்.

இன்று மாலை 6 மணிக்கு மேல் வீட்டு பக்கத்தில் இருக்கும் எல்லா அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடக்கும் பௌர்ணமியை முன்னிட்டு. அந்த பூஜையில் வீட்டில் இருக்கும் பெண்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். உங்கள் கைகளால் சிவப்பு நிற பூக்களை அம்பாளுக்கு எடுத்துச் செல்லுங்கள். செவ்வரளி, செம்பருத்தி, பன்னீர் ரோஜாக்கள் இப்படி ஏதாவது பூவை எடுத்துச் செல்லலாம்.

- Advertisement -

ஏதாவது பிரசாதம் செய்ய முடியும் என்றால் சக்கரை பொங்கல், வெண்பொங்கல், சுண்டல் இப்படி பிரசாதங்கள் செய்து அம்பாளுக்கு நெய்வேதியமாக கோவிலில் கொண்டு போய் கொடுக்கலாம். இதோடு சேர்த்து வீட்டில் இருக்கும் பெண்கள் இன்று அம்மன் கோவிலுக்கு செல்லும்போது உங்களுடைய முந்தானையில் 7 ஏலக்காய் வைத்து சுருட்டி முடிச்சு போட்டு எடுத்துச் செல்ல வேண்டும்.

கோவிலுக்குள் சென்று அம்மனை வழிபாடு செய்யும் போது அந்த ஏலக்காயில் முடிச்சு போட்ட, முந்தானையை எடுத்து உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். முடிச்சை அவிழ்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அப்படியே அம்பாளிடம் வேண்டுதல் வையுங்கள். பௌர்ணமி நிலவு மேலே உதிக்கும் போது சரியாக அம்பாள் கோவிலில் ஆரத்தி காண்பிக்கப்படும்.

- Advertisement -

அந்த சமயத்தில் உங்கள் வேண்டுதலை அம்பாளிடம் வையுங்கள். பணக்கஷ்டம் தீர வேண்டும் கடன் சுமை குறைய வேண்டும் வீட்டில் இருப்பவர்களுக்கு நவகிரகங்களால் எந்த பிரச்சனையும் வரக்கூடாது, என்று மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். வழிபாட்டை முடித்துக் கொண்டு வீடு திரும்பியதும் உங்க வீட்டு பூஜை அறைக்கு வந்துடுங்க.

உங்கள் முந்தானையில் முடிந்து வைத்திருக்கும் அந்த ஏலக்காய்களை அப்படியே ஒரு மஞ்சள் துணியில் வைத்து கட்டி பூஜை அறையில் வைத்து விடுங்கள். பரிகாரம் அவ்வளவு தான். அடுத்த பௌர்ணமி வரை அந்த ஏலக்காய் பூஜை அறையில் இருக்கட்டும். அடுத்த பௌர்ணமி அன்று பூஜை அறையில் இருக்கும் ஏலக்காயை எடுத்து ஏதாவது பிரசாதம் செய்து வீட்டிலேயே அம்பாளுக்கு நெய்வேதியம் வைத்து, வழிபாடு செய்து, அந்த பிரசாதத்தை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சாப்பிட்டு விடுங்கள்.

ஏதாவது ஒரு இனிப்பு பலகாரத்தில் இந்த ஏலக்காயை போடணும் அவ்வளவுதான். இந்த வழிபாடு நிச்சயமாக உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டத்தை தீர்த்து வைக்கும். ரொம்ப ரொம்ப எளிமையான வழிபாடுதான். எல்லா பெண்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். நீங்க புடவை அணிந்து கொண்டு செல்ல மாட்டீர்கள்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற வாராகி வழிபாடு

சுடிதார் போடுவீங்க அப்படின்னா, உங்க துப்பட்டாவின் முனையில் இந்த ஏலக்காய்களை வைத்து முடிச்சு போட்டுக் கொள்ளலாம். தவறொன்றும் கிடையாது. குடும்ப கஷ்டம் தீர இந்த பரிகாரம் எல்லா பெண்களுக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -