5 ரூபாய்க்கு இத வாங்குனா போதும் உங்க வீட்டு பூக்காத ரோஜா செடியும் கொத்து கொத்தா இனி பூக்குமே!

meal-maker-rose-plants
- Advertisement -

சில சமயங்களில் புதிதாக ரோஜா செடி வாங்கி வைத்தால் வாங்கும் பொழுது இருக்கும் பூக்கள் மட்டுமே கடைசியாக பூத்த பூவாகவும் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதன் பிறகு ஒரு பூ கூட பூப்பதில்லை என்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? அஞ்சு ரூபாய்க்கு இதை வாங்கி ட்ரை பண்ணி பாருங்க, பூக்காத உங்க ரோஜா செடி இனி கொத்து கொத்தா பூக்க ஆரம்பிக்க போகிறது. ரோஜா செடி பூ பூக்க நாம் எளிதாக செய்ய வேண்டியது என்ன? என்பதைத் தான் இந்த தோட்ட குறிப்பு பகுதியின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக நாம் நர்சரிகளில் ரோஜா செடி வாங்கும் பொழுது அவர்கள் டிஏபி உரம் கொடுத்து அதை வளர்த்து வந்திருப்பார்கள். ஆனால் நம் வீட்டிற்கு கொண்டு வந்ததும் இயற்கையான உரங்களை அதற்கு கொடுத்திருப்போம். இதனால் முதலில் பூத்த பூக்களை தவிர பிறகு பூக்கள் பூக்காமல் போவதற்கு வாய்ப்பு உண்டு.

- Advertisement -

இப்படி ரோஜா செடி வளர்க்கும் பொழுது போதிய ஊட்டச்சத்து கொடுக்காமல் இருந்தால் உங்க செடி வீணாக போய்விடும். இதற்கு ரொம்பவே எளிதான முறையில் ஒரு தீர்வு காணலாம். சோயாவில் இருந்து உருவாகக்கூடிய இந்த மீல் மேக்கர் எனப்படும் சோயா சங்க்ஸ் அஞ்சு ரூபாய்க்கு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மலிவான விலைக்கு நிறைய கிடைக்கும்.

வாங்கி வந்த இந்த மீல் மேக்கரை ஒரு லிட்டர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஊறவிட்டு விடுங்கள். ஒரு மணி நேரம் நன்கு ஊறி இருக்க வேண்டும். மீல்மேக்கர் ஊறிய பிறகு பஞ்சு போல ஆகிவிடும், அதன் பிறகு நீங்கள் அதில் இருக்கும் தண்ணீரை கசக்கி பிழிந்து எடுத்து விட வேண்டும். பிழிந்து எடுத்தவற்றை காய விட்டு விடுங்கள். இப்பொழுது இந்த மீல் மேக்கர் ஊறிய தண்ணீரை தான் நாம் பயன்படுத்த இருக்கிறோம்.

- Advertisement -

மீல் மேக்கர் ஊறிய இந்த தண்ணீருடன் கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பிறகு இதை உங்கள் வீட்டில் வாங்கி வைத்திருக்கும் வளராத பூ செடிகளுக்கு உரமாக சிறிதளவு தெளித்தும், வேர்க்கால்களில் ஊற்றியும் விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்களுடைய பூக்காத செடி புதிய தளிர்களை விட துவங்கும். இதில் ஏராளமான கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நம்முடைய செடியின் வளர்ச்சியை ஊக்குவிக்க கூடியதாக இருக்கிறது. மேலும் புதிதாக தளிர்கள் முளைக்கவும், பூக்கள் பூக்கவும் உந்துகோலாக இருக்கிறது. நீங்கள் காய வைத்துள்ள சக்கைகளை மிக்ஸியில் பவுடர் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
தோட்டம் வைத்திருப்பவர்கள் இதைத் தெரிந்து கொண்டால் செலவே இல்லாமல் அரை மணி நேரத்தில் தேவையான உரத்தை நீங்களே தயார் பண்ணிடலாம். இயற்கை உரத்தை சுலபமாக தயாரிக்கும் எளிய முறை.

அரைத்து எடுத்த பவுடருடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளும், கால் ஸ்பூன் அளவிற்கு பட்டை பொடியும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியையும் நீங்கள் ஒரு ஸ்பூன் வீதம் எல்லா ரோஜா செடிகளின் வேர்க்கால்களிலும் வாரம் ஒரு முறை கொடுத்து மண்ணை சுற்றிலும் கிளறி விட்டு வரலாம். லிக்விட் முறையில் கொடுக்க 5 லிட்டர் தண்ணீரில் 2 ஸ்பூன் அளவுக்கு இந்த பவுடரை சேர்த்து கலந்து தெளிக்கலாம். ரோஜா செடி மட்டும் அல்ல, எல்லா வகையான பூச்சொடிகளுக்கும் இந்த உரத்தை கொடுத்துப் பார்க்கலாம். ரொம்பவே உபயோகம் உள்ள தகவலாக இருந்திருக்கும் பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

- Advertisement -