தோட்டம் வைத்திருப்பவர்கள் இதைத் தெரிந்து கொண்டால் செலவே இல்லாமல் அரை மணி நேரத்தில் தேவையான உரத்தை நீங்களே தயார் பண்ணிடலாம். இயற்கை உரத்தை சுலபமாக தயாரிக்கும் எளிய முறை.

- Advertisement -

வீட்டில் தோட்டம் வைத்து வளர்ப்பவர்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையே அதற்கு தேவையான உரத்தை வாங்குவது தான். செடிகளுக்கு எந்த உரத்தை கொடுப்பது எப்படி கொடுப்பது என்பதை காட்டிலும், உரம் வாங்க அதிக செலவு செய்வது என்பதும் ஒரு பெரிய கஷ்டம் தான. இந்த முறையில் நீங்கள் உரத்தை தயார் செய்து வைத்துக் கொண்டால் செடிகளுக்கு தனியாக உரம் வாங்க வேண்டிய செலவே இருக்காது. வாங்க அந்த எளிமையான உரத்தை எப்படி தயார் செய்வது என்று இந்த வீட்டு தோட்டம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் பொருள்களை எல்லாம் அளந்து போட ஒரு பிளாஸ்டிக் கப் எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு பெரிய பிளாஸ்டிக் கோணிப்பை தரையில் விரித்துக் கொள்ளுங்கள். அப்போது தான் இந்த உரக்கலவையை தயார் செய்ய சுலபமாக இருக்கும் வாங்க இப்போ உரத்தை தயார் செய்து விடலாம்.

- Advertisement -

இயற்கையான இந்த உரத்தை தயாரிக்க முதலில் நமக்கு தேவையானது மாட்டுச் சாணம். நன்றாக காய்ந்த மாட்டுச் சாணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் எடுத்து வைத்திருக்கும் கப்பில் ஏழு கப் அளவிற்கு மாட்டுச்சாண உரத்தை விரித்து வைத்திருக்கும் கோணிப் பையில் கொட்டி பரப்பி விடுங்கள்.

அடுத்ததாக மண் கலவை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் தோட்டமண், செம்மண், மணல் அல்லது கரையான் மண் போன்ற எதுவாக இருந்தாலும் அதில் மூன்று கப் மண் எடுத்து இந்த மாட்டு சாண உரத்தில் கலந்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக வீட்டில் டீ போட்ட பிறகு மீதமாகும் இந்த டீத் தூள் சக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். தினமும் டீ போட்ட பிறகு இந்த சக்கைகளை ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதில் இரண்டு கப் எடுத்து அந்த மண் கலவையில் சேர்த்து அதையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இத்துடன் கால் கப் அளவிற்கு முட்டை ஓடு தூள். முட்டையையும் உடைத்து பயன்படுத்திய பிறகு தோலை வீணாக்காமல் காய வைத்து அதை மிக்ஸியில் அரைத்து பவுடராக வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து நீங்கள் எடுத்து இருக்கும் கப்பில் கால் கப் அளவு எடுத்து இந்த மண் கலவையில் சேர்த்து விடுங்கள். ஒருவேளை உங்களிடம் முட்டை தோல் இல்லை என்றால் ரெண்டு ஸ்பூன் சுண்ணாம்புத் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். சுண்ணாம்பு தூள் அதிகம் சேர்த்து விடக் கூடாது. இத்துடன் வாழை பழ தோலையும் காய வைத்து சின்ன சின்னதாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இவற்றுடன் கடைசியாக இரண்டு கப் சாம்பலை இதில் சேர்த்து அதையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இவை அனைத்தையும்  கலந்த பிறகு ஒரு பெரிய பிளாஸ்டிக் பை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் கொஞ்சம் இந்த கலவையை சேர்த்த பிறகு மேலே தண்ணீர் தெளித்து விடுங்கள். அதன் பிறகு மணல் சேர்த்து திரும்பவும் தண்ணீர் தெளித்து விடுங்கள்.

இதே போல் இருக்கும் மண் கலவை அனைத்தையும் கொஞ்சமாக போட்டுப் போட்டு தண்ணீர் தெளித்து இரண்டு நாட்கள் அப்படியே நல்ல வெயிலில் வைத்து விடுங்கள். இந்த இரண்டு நாளில் இதில் இருக்கும் தண்ணீர் எல்லாம் மண் கலவையுடன் கலந்து நன்றாக காய்ந்து மக்கி உரமாகி இருக்கும். நீங்கள் எந்தச் செடி வைக்கும் போதும் இந்த உரக் கலவை அதில் சேர்த்த பிறகு செடி வைத்தீர்கள் என்றால் நல்ல முறையில் செடிகள் செழித்து வளரும்.

அதன் பிறகு செடிகளுக்கு எப்போதும் போல் நாம் வீட்டில் பயன்படுத்தும் கிச்சன் கழிவுகள், அரிசி கழுவிய தண்ணீர் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தினால் போதும் செடி நன்றாக வளரும்.

இதையும் படிக்கலாமே: ரோஜா செடி நிறைய பூ பூக்க பெஸ்ட் டிப்ஸ் என்ன? பூச்சித்தொல்லை, எறும்பு தொல்லை, பூஞ்சை தொல்லை நீங்க 1/2 லிட்டர் இந்த தண்ணீர் தெளித்தால் போதும்!

வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்கள் இந்த முறையில் உரக் கலவையே தயார் செய்து செடிகளுக்கு கொடுத்து வரும் பொழுது, நம்முடைய செலவுகள் முழுவதுமாக குறைவதுடன் நல்ல இயற்கையான கெமிக்கல் கலக்காத காய்கறிகள் பூக்களை நம்மால் உருவாக்க முடியும்.
.

- Advertisement -