நாளை மீனாட்சி திருக்கல்யாண வைபவம்! நாளை கத்திரியும் தொடங்குகிறது. பெண்கள் திருமாங்கல்ய கயிறு மாற்றலாமா? கூடாதா?

Amman

சித்திரை மாதம், மீனாட்சியின் திருக்கல்யாணம் மதுரையில் கோலாகலமாக நடைபெறும் ஒரு திருவிழா. இந்த வருடம் சூழ்நிலை காரணமாக அந்த திருவிழா விமர்சியாக நடைபெறாமல், சுலபமான முறையில் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் நேரில் சென்று மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலை. இருப்பினும் இந்த திருநாளை வீட்டிலிருந்தே எப்படி சுலபமான முறையில் கொண்டாடலாம் என்பதைப் பற்றியும், மீனாட்சி திருக்கல்யாண வரலாற்றை பற்றிய சிறு குறிப்பையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

meenakshi

மதுரையை ஆண்டு கொண்டிருந்த மலையத்துவச பாண்டிய மன்னருக்கும், அவருடைய மனைவி காஞ்சனாமாலைக்கும் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. குழந்தை வரம் வேண்டி இவர்கள் நடத்திய புத்திர காமேஷ்டி யாகத்தின் மூலம் மூன்று வயது பெண்ணாக, இந்த பூமியில் அவதரித்தவள் மீனாட்சி அம்மன். மீனாட்சி அம்மனுக்கு பச்சை தேவி, கற்பகவள்ளி, தடாதகை என்று பல பெயர்கள் இருந்தாலும், இந்த தேவியின் கண்கள் மீனைப் போன்று அழகான வடிவம் கொண்டதால் மீனாட்சி என்ற பெயர் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மீனாட்சி சகல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தவர். சகலகலா வல்லமை பொருந்திய மீனாட்சிக்கு, தன் தந்தையான மலையப்ப பாண்டிய மன்னர் தன்னுடைய ஆட்சியை தன் மகளிடம் ஒப்படைத்து விட்டார். சிறப்பாக ஆட்சி நடத்திய மீனாட்சி பல நாடுகளுக்கு சென்று, போர் செய்து, வெற்றி வாகை சூடி தன்னுடைய ஆட்சியை விரிவுபடுத்தினார். எவ்வளவு நாட்டை பிடிக்த்தும் தன்னுடைய வெற்றி ஆசை குறையாத காரணத்தினால், கைலாயத்தையே தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில், கைலாயத்திற்கு செல்லப் புறப்பட்டார் மீனாட்சி தேவி.

meenakshi-temple

கைலாயத்தை அடைந்த மீனாட்சி தேவியை, சிவபெருமான்  காண்பதற்காக செல்ல, சிவபெருமான் மீனாட்சியின் கண்களை நேருக்கு நேராகப் பார்க்க, அந்த தருணத்தில் சொக்கி விடுகிறார். இதனால் சிவபெருமானுக்கு உண்டான பெயர்தான் சொக்கநாதர். மீனாட்சிக்கும் எம்பெருமானை கண்டவுடன், திருமண ஆசை ஏற்பட்டு விட்டது.  அந்த நேரத்தில் மீனாட்சியிடம் ஒரு வாக்கினை அளிக்கிறார் எம்பெருமான்.

- Advertisement -

மதுரை மீனாட்சியிடம் சிவபெருமான் கூறியதாவது: ‘வருகின்ற சோமவார தினத்தில் உன் கரத்தினை நான் பிடிப்பேன்’ என்றவாறு கூறினார். அதேபோல் ஒரு சோமவார தினத்தன்று கைலாயத்தில் இருந்து மதுரை வந்த சிவபெருமான், மீனாட்சியை திருக்கல்யாணம் முடித்தார். தேவாதி தேவர்கள் முன்னிலையில் நடந்த இந்த திருக்கல்யாண வைபவம் தான், ஆண்டுதோறும் சித்திரை மாதம் மதுரையில் கோலாகலமாக ‘மீனாட்சி திருக்கல்யாண வைபவமாக’ இதுநாள் வரை நடந்து வருகிறது. குறிப்பாக சிவபெருமான் மீனாட்சியின் திருக்கரங்களை பிடித்த சோமவார தினத்தன்று, இந்த வருடம் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவதால் இந்த தினத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.

madurai meenatchi amman

இதில் எல்லா சுமங்கலிப் பெண்களுக்கும் இருக்கக்கூடிய ஒரு சந்தேகம் என்னவென்றால், கத்திரி தொடங்கிவிட்டது! இந்நிலையில் மாங்கல்யகயிற்றை மாற்றிக் கொள்ளும் வழக்கம் உள்ள பெண்கள், இந்த வருடம் திருமாங்கல்ய கயிறை மாற்றிக் கொள்ளலாமா? மீனாட்சி திருக்கல்யாண வைபவம் நடக்கும் இந்த தினத்தில், திருமாங்கல்ய கயிறு மாற்றிக் கொள்ளும் பழக்கம் இருக்கும் பெண்கள், அனைவருமே இந்த வருடமும் தாராளமாக மாங்கல்ய கயிறை மாற்றிக்கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. காலை 9.30  மணியிலிருந்து 10.30 மணிக்குள் நல்ல நேரம் உள்ளது. இந்த நேரத்தில் திருமாங்கல்யக் கயிறு மாற்றிக்கொண்டு, அவரவர் கணவனின் கைகளால் குங்குமத்தை மாங்கல்யத்தில் இட்டுக்கொள்ளுங்கள்.

மாத விலக்காக இருக்கும் பெண்களும், கர்ப்பிணிப் பெண்களும் தங்களுடைய திருமாங்கல்யத்தை மாற்றக்கூடாது என்று சொல்கிறது சாஸ்திரம். நாளையதினம் திருமாங்கல்ய கயிறு மாற்ற முடியாத பெண்கள் வருகின்ற, 7ஆம் தேதி சித்ரா பவுர்ணமி அன்று உங்களுடைய திருமாங்கல்யத்தை மாற்றிக்கொள்ளலாம். அன்றும் மிகச்சிறப்பான தினம் தான்.

moon

மீனாட்சி திருக்கல்யாணமானது செவ்வாய்க்கிழமை வந்தாலும், வெள்ளிக்கிழமை வந்தாலும் திருமாங்கல்யத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று சொல்கிறது ஐதீகம். ஏனென்றால் மீனாட்சி திருக்கல்யாணத்தில் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, கத்திரி இப்படிப்பட்ட தோஷங்கள் எதுவும் பார்க்கப்படுவதில்லை. அம்மனுக்கு புது தாலி கட்டும் பட்சத்தில், சுமங்கலிப்பெண்களான நாமும் நம்முடைய திருமாங்கல்ய கயிறை மாற்றிக் கொள்ளலாம் என்பது நம் முன்னோர்களின் கூற்றாக உள்ளது.

poojai arai

நாளை முடிந்தவரை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, சுத்தமாக குளித்து முடித்து விட்டு உங்கள் வீட்டில் மீனாட்சியின் திருவுருவப்படம் இருந்தால் அதற்கு புதியதாக பொட்டு வைத்து, பூ வைத்து அலங்காரம் செய்த பின்பு, உங்களால் முடிந்த இனிப்பு நைய்வேதியல்தை மீனாட்சி அம்மனுக்கு செய்து வைத்து, தீபம் ஏற்றி வைத்து காலை நேர பூஜையை சிறப்பாக முடித்து விடுங்கள். மீனாட்சியின் திருவுருவப்படம் இல்லாதவர்கள், உங்கள் வீட்டில் வேறு அம்மன்படம் இருந்தாலும் அதை மீனாட்சி அம்மனாக நினைத்து வழிபடுவது தவறு இல்லை.

Pooja room

அதன்பின்பு, நீங்கள் பட்டுப்புடவை உடுத்திக்கொண்டு, ஒரு பாயின் மீது அல்லது மரப் பலகையின் மீதோ அமர்ந்து உங்களது திருமாங்கல்ய கயிற்றை மாற்றிக்கொள்ள வேண்டும். வீட்டிலிருந்தே மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை சிறப்பாக கொண்டாடி, இந்த வருடத்தில் அந்த அம்மனின் ஆசியை முழுமையாக பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பார்த்து, பேசி, புரிந்து திருமணம் செய்தாலும் நல்ல துணை அமையவில்லை என்று புலம்புபவர்களை பார்த்திருக்கிறீர்களா? உங்களுக்கும் அந்த நிலை வராமல் இருக்க என்ன செய்யலாம்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have meenakshi thirukalyanam. meenakshi thirukalyanam 2020. meenakshi thirukalyanam 2020 in tamil. meenakshi thirukalyanam timing