30 நிமிடத்தில் மாதுளை பழம் போல உங்களுடைய கையின் நிறம் மாறும். ஹென்னா பொடியில் இந்த தண்ணீரை ஊற்றி கலந்து உங்களுடைய கையில் இட்டுப் பாருங்கள்.

hand2
- Advertisement -

யாருக்குத்தான் மருதாணி பிடிக்காது. கையில் மருதாணி வைத்துக் கொண்டு யாருடைய கையில் அதிகமாக கலர் பிடித்திருக்கிறது என்று பார்க்கும் அழகே தனிதான். இதனுடைய சுகம் வேறு எதிலும் வராது. நிறையபேர் மருதாணியை இலையாக பறித்து அரைத்து கையில் வைத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. நிறைய பேருக்கு மருதாணி பொடி அதாவது ஹென்னா பொடியை வாங்கி அதை கலந்து கையில் இட்டுக் கொள்ளும் பழக்கமும் இருக்கிறது. நீங்கள் மருதாணியை அரைப்பதாக இருந்தாலும் இந்த தண்ணீரை ஊற்றி அரைக்கலாம். ஹென்னா பொடி கலந்து மருதாணி இட வேண்டும் என்றாலும் இந்த தண்ணீரை ஊற்றி கலந்து கையில் இட்டுக் கொள்ளலாம்.

எப்படி செய்தாலும் உங்களுடைய கையில் 30 நிமிடத்தில் வண்ணம் பிடிக்கும். 1 மணி நேரம் கையில் மருதாணியை வைத்துக் கொண்டிருந்தால் உங்களுடைய கை அப்படியே மாதுளம்பழம் கலரில், பீட்ரூட் கலரில் செக்கச்செவேலென்று சிவந்து இருக்கும். ஒரு முறை இப்படி மருதாணி வைத்து பாருங்கள். சரி நேரத்தைக் கடத்தாமல் அந்த குறிப்பை பார்த்து விடலாம்.

- Advertisement -

ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் டீ தூள் – 1 ஸ்பூன், காபி தூள் – 1 ஸ்பூன், சர்க்கரை – 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன், கிராம்பு – 6, இந்த பொருட்களை எல்லாம் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் மிதமான தீயில் இந்த தண்ணீரை கொதிக்க வையுங்கள். அதன் பின்பு இந்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளுங்கள். இது கொஞ்சம் ஆறிய பின்பு இந்த தண்ணீரை ஊற்றி ஹென்னா பொடியை சரியான பக்குவத்தில் கலந்து, இறுதியாக அதில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு விட்டு கலந்து ஒரு மூடி போட்டு 2 மணி நேரம் நன்றாக ஊற வைத்து விடுங்கள்.

அதன் பின்பு இந்த ஹென்னாவை எப்போதும் போல உங்களுடைய கையில் இட்டுக் கொள்ள வேண்டும். கோனில் போட்டு உங்களுடைய சௌகரியத்துக்கு டிசைன் போட்டாலும் சரி தான். அப்படி இல்லை என்றால் அழகாக அந்த காலத்தில் வட்டம் வட்டமாக இட்டுக் கொள்வார்கள் அல்லவா. அப்படி இட்டுக் கொண்டாலும் சரிதான். உங்களுடைய கையில் எப்படி வண்ணம் பிடித்திருக்கிறது என்பதை நீங்களே டெஸ்ட் பண்ணி பார்த்துக்கோங்க. 30 நிமிடம் போதுமானது. இருப்பினும் இன்னும் கொஞ்சம் கூடுதல் நேரம், அதாவது 1 மணி நேரம் கையில் வைத்தால் இன்னும் கூடுதல் வண்ணம் கிடைக்கும்.

- Advertisement -

இதுவே நீங்கள் மருதாணி இலையை அரைத்து கையில் இட்டுக் கொள்ள போகிறீர்கள் என்றால் மருதாணி இலையை கழுவி சுத்தம் செய்து அதில் வெறும் தண்ணீரை ஊற்றி அரைப்பதற்கு பதிலாக இந்த தண்ணீரை ஊற்றி அரைத்து கையில் வைத்துக் கொண்டாலும் அதனுடைய வண்ணம் இன்னும் இன்னும் அடர்த்தியாக நம்முடைய கையில் பிடித்துக்கொள்ளும். ஒருமுறை இப்படி வச்சு தான் பாருங்களேன்.

மருதாணி என்பது வெறும் அழகிற்காக மட்டும் பெண்கள் கையில் வைத்துக் கொள்வது கிடையாது. நகக்கணுக்களில் இந்த மருதாணி வைத்தால் பெண்களுக்கு இருக்கக்கூடிய உடல் சூடு குறையும். நகம் சொத்தை விழுகாமல் பாதுகாப்பாகவும் இருக்கும். மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த மருதாணியை மாதத்தில் ஒருமுறையாவது பெண்கள் கையில் இட்டுக் கொள்வது அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. குறிப்பாக மாதவிடாய் வருவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு இந்த மருதாணியை கையில் இட்டுக் கொள்வது நல்லது.

- Advertisement -