ரசமே பிடிக்காது என்பவர்கள் கூட, இந்த ரசத்தின் வாசத்துக்கே வந்து ஒரு பிடித்து விடுவார்கள். மழைக்காலத்திற்கு ஏற்ற கொஞ்சம் காட்டமான மிளகு, சீரகம் இடித்த ரசம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாமா?

- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற குழம்பு வகைகளில் இந்த ரசத்திற்கு எப்போதுமே முதலிடம் தான். இதில் நாம் சேர்க்கும் மிளகு, சீரகம், பூண்டு, போன்றவை ஜீரண சக்தி தரும். அது மட்டுமின்றி, உடல்நிலை சரியில்லாத நேரத்தில் இந்த ரசம் சேர்த்து சாப்பிடும் போது உடல் சோர்வை கூட நீக்கி சுறுசுறுப்பை தரும். இந்த ரசத்தை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையில் கொஞ்சம் மிளகு தூக்கலாக இந்த மழைக்காலத்திற்கு ஏற்றார் போல எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள்: புளி – எலுமிச்சை பழ அளவு, தக்காளி -2, சீரகம் – 1 1/2 டீஸ்பூன், மிளகு -1 1/2 டீஸ்பூன், காஷ்மீர் மிளகாய் -2, பூண்டு தோல் உரிக்காதது – 10 பல், பச்சை மிளகாய் – 3, நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், வெந்தயம் – 1/4 டீஸ்பூன், பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், உப்பு – 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், கருவேப்பிலை, கொத்தமல்லி – 1 கைப்பிடி.

- Advertisement -

இந்த ரசம் வைப்பதற்கு முதலில் ஒரு பவுலில் புளியை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். அடுத்து தக்காளியை எடுத்து ஒரு பவுலில் நன்றாக கையால் கரைத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள். மிக்ஸி இதை அரைக்க வேண்டாம் கைகளில் கரைக்கும் போது இருக்கும் சுவை மிக்ஸியில் அரைக்கும் போது கிடைக்காது.

இப்போது ஒரு இடி உரலில் மிளகு, சீரகம், காஷ்மீர் சில்லி மூன்னறயும் எடுத்து நன்றாக இடித்து எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொரகொரப்பாக இருந்தாலும் பரவாயில்லை, உங்களால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு பொடித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே இடி உரலில் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றும் பாதியுமாக இடித்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ரசத்திற்கு தேவையான பொருட்களை எல்லாம் தயார் செய்து விட்டோம்.

- Advertisement -

இந்த ரசம் தாளிக்க அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து சூடான உடன் நல்லெண்ணையை அதில் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்தவுடன் அதில் வெந்தயம், சீரகம் ,போட்டு பொரிந்த உடன் கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் இடித்து வைத்த மிளகு, சீரகம் காய்ந்த மிளகாய் பொடி ,பூண்டு, பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து கருகி விடாமல் வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு கரைத்து வைத்த தக்காளி கரைசலை இதில் ஊற்றி அதையும் வதக்கிய பிறகு இதில் மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைச்சலை அனைத்தும் சேர்த்த பிறகு பெருங்காயம் சேர்த்து ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு விடுங்கள். கடைசியாக ரசம் கொதி நிலைக்கு வந்தவுடன் மூடியை திறந்து கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வடித்த சாதம் இருந்தால் அடுத்த 10 நிமிடத்தில் நாக்கில் எச்சில் ஊறும் ‘எக் தவா புலாவ்’ தயார். வெரைட்டி ரைஸ் பிரியர்கள் இந்த ரெசிபியை மிஸ் பண்ணாதீங்க.

ரசம் அதிகம் கொதிக்க கூடாது லேசாக ஆங்காங்கே நுரை பொங்குவது போல் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். இது தான் ரசத்தின் சுவைக்கு மிக மிக முக்கியம். ரசம் கொதித்தால் அதன் சுவை மாறிவிடும். அவ்வளவு தான் கல்யாண வீட்டு ரசம் கொஞ்சம் மிளகு காட்டத்துடன் அருமையாக ரெடி. சுட சுட சாதம் வைத்து அதில் இந்த ரசம் ஊற்றி சாப்பிடும் போது சைடிஸ்யே இல்லாமல் ஒரு தட்டு சாதம் சைலன்டாக உள்ளே சென்று விடும். நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

- Advertisement -