பார்லருக்கு போனால் கூட ஒரே நாளில் இவ்வளவு வெள்ளையாக மாற முடியாது. 2 ஸ்பூன் பால் பவுடர் இருந்தால் அந்தப் பாலை விட வெள்ளையா மாறிடுவீங்க.

face2
- Advertisement -

சில பேர் வெள்ளையாக வேண்டும். குளோவாக வேண்டும் என்றால், உடனடியாக பார்லருக்கு சென்று ஃபேசியல் செய்து கொள்வார்கள். ஆனால் கையில் காசு இல்லை என்றால், எந்த பார்லருக்கு போவது. மிக மிக எளிமையான இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள். பார்லருக்கு சென்றால் கிடைக்கக்கூடிய முகப்பொலிவு இந்த பேக்கை போட்டாலும் கிடைக்கும். உடனடியாக பார்ட்டிக்கு போக வேண்டுமா. உடனடியாக விசேஷங்களுக்கு உங்களை அலங்காரம் படுத்திக் கொள்ள வேண்டுமா. உடனடியாக இந்த குறிப்பு கை கொடுக்கும்.

இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருட்கள் என்னென்ன. ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா பொருட்களையும் அதில் போட்டுக் கொள்ளலாம். கஸ்தூரி மஞ்சள் – 1/4 ஸ்பூன், முல்தானி மெட்டி – 1 ஸ்பூன், பால் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன், உருளைக்கிழங்கு சாறு – 4 டேபிள் ஸ்பூன், இந்த எல்லா பொருட்களையும் தேவையான அளவு பால் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு சாறு மட்டும் பத்தாது அல்லவா. அதனால் தான் காய்ச்சிய அல்லது காய்ச்சாத பாலை ஊற்றி கலந்து கொள்ளலாம். (ஐந்து ரூபாய்க்கு கூட பால் பவுடர் பாக்கெட் கிடைக்கிறது. அதை வாங்கி கூட குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.)

- Advertisement -

மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை கழுவி தோல் சீவி துருவி, தண்ணீர் எதுவும் ஊற்றாமல் உங்கள் கையைக் கொண்டு சாறு பிழிந்து எடுத்தாலே வெறும் உருளைக்கிழங்கு சாறு கிடைத்து விடும். அந்த சாறை இந்த பேக்கோடு ஊற்றிக் கொள்ளுங்கள். தேவையான அளவு பாலை ஊற்றி கலக்கும்போது ஒரு பேக் நமக்கு கிடைத்துவிடும் அவ்வளவுதான்.

இந்த பேக்கை முகம் கழுத்துப் பகுதிகளில் நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள். 15 நிமிடங்கள் கழித்து காய்ந்த பேக் மேல் தண்ணீரை தெளித்து நனைத்து, வட்ட வடிவில் மசாஜ் செய்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி பாருங்கள். உங்களுடைய முகம் இருக்கும் நிறத்தை விட ஒரு படி வெள்ளையாக நிச்சயம் மாறி இருக்கும். இந்த பேக்கை முகம் கழுத்து கை கால்கள் எங்கு வேண்டுமென்றாலும் போட்டுக் கொள்ளலாம். வெள்ளையாக உங்களுக்கு எந்த இடம் எல்லாம் மாற வேண்டுமோ, அந்த இடத்துக்கு எல்லாம் இந்த பேக்கை அப்ளை செய்து கொள்ளுங்கள். வாரத்தில் மூன்று நாட்கள் இந்த பேக்கை போட்டாலும் தவறு கிடையாது.

- Advertisement -

பேக்கை தொடர்ந்து மூன்று மாதம், வாரத்தில் இரண்டு நாட்கள் என்று போட்டு வர உங்களுடைய சருமத்தின் நிறம் நிரந்தரமாக வெள்ளையாக மாறத் தொடங்கி விடும். கரும்புள்ளிகள் கருந்திட்டுக்கள் எல்லாம் கூட கொஞ்சம் கொஞ்சமாக குறைவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. ஆனால் மேலே சொன்ன பொருட்களில் எந்த ஒரு பொருளையும் தவற விட்டு விடாதீர்கள்.

முல்தானிமெட்டி சருமத்தை டிரை ஆக்கும் என்று சொல்லுவார்கள். அதற்காகத்தான் நாம் இதில் பால் சேர்த்து இருக்கின்றோம். பால் சேர்த்து முல்தானி மெட்டியை முகத்தில் போடும்போது முகம் அவ்வளவு எளிதில் ட்ரை ஆகாது. பேக்கை போட்டு எடுத்துவிட்டு உங்களுக்கு பிடித்த மாய்ஸ்ரைசரை முகத்தில் அப்ளை செய்து கொள்ளலாம். பிறகு பாருங்க ஃபங்ஷன்ல நீங்கதான் ஜொலி ஜொலின்னு ஜொலிப்பீங்க.

- Advertisement -