குப்பையில் தூக்கிப்போடும் பால் பாக்கெடில் வீட்டு குறிப்பு

avin
- Advertisement -

அட குப்பையில் தூக்கி போடும் பால் பாக்கெட் பின்னாடி இத்தனை அருமையான வீட்டுக்குறிப்பா, என்று ஆச்சரியப்படும் அளவுக்கு புத்தம் புதிய குறிப்புகளை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இல்லத்தரசிகள் அனைவரும் இந்த குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தினம் தினம் தேவைப்படக்கூடிய பயனுள்ள வீட்டு குறிப்பு. இது தெரியாம இத்தனை நாளா பால் பாக்கெடை தூக்கி குப்பையில் போட்டு விட்டோமே என்று உங்களை வருத்தப்பட வைக்கும் குறிப்புகள் தான் இவை.

குறிப்பு 1

நம்ம எல்லார் வீட்டிலும் சப்பாத்திக்கு மாவு பிசைவோம். எப்படியாவது அந்த மாவில் கொஞ்சம் மிச்சம் ஆகிடும். அதை எடுத்து டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால், அடுத்த நாளே கருப்பாக மாறிவிடும். உங்க வீட்ல பால் பாக்கெட் இருக்கா. அந்த பாக்கெட்டை லேசா தண்ணீர் ஊற்றி கழுவி கீழே கொட்டிடுங்க. பால் பாக்கெட்டை கத்திரிக்கோல் வச்சி கட் பண்ணிக்கோங்க. அது உள்ள மீதமான மாவை நன்றாக உருட்டி வைக்கவும். பாக்கெட்டை நன்றாக சுருட்டி இதை அப்படியே ஒரு சில்வர் டப்பாவில் போட்டு மூடி பிரிட்ஜில் வைத்தால், மாவு எத்தனை நாள் ஆனாலும் கருப்பா மாறவே மாறாது.

- Advertisement -

குறிப்பு 2

தினமும் பயன்படுத்துற தோசை கல்லை கழுவி விட்டு அதன் மேலே நல்லெண்ணெய் தேய்த்து வைப்போம். ஆனாலும் அந்த தோசை கல் லேசாக துருப்பிடிக்கும். கழுவிய தோசை கல்லை நன்றாக காய வைத்து விடுங்கள். பால் பாக்கெட்டை உள்பக்கமாக திருப்பி, தோசை கல்லின் மேல் வைத்து தோசைக்கல் முழுவதும் தேய்த்துக் கொடுத்தால், தோசை கல் பளபளப்பாக மின்னும் சீக்கிரம் துருப்பிடிக்காது. ஆறின தோசை கல்லில் மட்டும் இந்த குறிப்பை ஃபாலோ பண்ணுங்க.

குறிப்பு 3

இதே போலத்தான் உங்கள் வீட்டில் இரும்பில் தேங்காய் துருவல் இருந்தாலும், அருவாமனை இருந்தாலும், கத்தி இருந்தாலும், அதை துருப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ள பால் கவருக்கு உள்பக்கத்தை எடுத்து அந்த பொருளின் மீது நன்றாக தேய்த்துக் கொடுத்தால் இரும்பு பாத்திரம் எப்போதும் பளபளப்பாக மின்னும்.

- Advertisement -

குறிப்பு 4

நம்ம வீட்டில் கேஸ் ஸ்டவ் பற்ற வைக்க பயன்படுத்தும் லைட்டர், எண்ணெய் பிசுக்கோடு எப்போதும் அழுக்காகத்தான் இருக்கும். அதை கழுவினாலும் ஈரத்துணி போட்டு துடைத்து எடுத்தாலும், திரும்பவும் பயன்படுத்தினால் சரியாக நெருப்பு வராது. இந்த பால் கவரை உள்பகமாக திருப்பி வைத்து, அந்த லைட்டரை நன்றாக துடைத்து, எடுத்து பாருங்கள். லைட்டர் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கி சூப்பராக மாறிடும்.

குறிப்பு 5

பிரிட்ஜுக்கு மேலே நம்முடைய கைரேகைகள், குழந்தைகள் தொட்டு விளையாடிய ரேகைகள், எண்ணெயங பிசுபிசுப்புகள் என்று பார்ப்பதற்கே ரொம்பவும் அசிங்கமாக இருக்கும். இந்த பால்கவரை, உள்பக்கம் திருப்பி விட்டு அந்த ஃப்ரிட்ஜை ஒரு முறை துடைத்து பாருங்களேன். புதுசா வாங்கிய பிரிட்ஜ் போல அப்படியே மின்னும்.

- Advertisement -

குறிப்பு 6

உங்க வீட்டு சமையல் அறையில் பெயிண்ட் பண்ணி வச்சிருக்கும், கபோர்டு, அலமாரி, இப்படி எல்லா இடங்களையும் இந்த பால் கவரிங் உள்பக்கத்தை வைத்து துடைத்து பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். அது மட்டுமல்லாமல் உங்கள் வீட்டில் டிவி வைத்திருக்கும் கப்போர்ட், உட்டன் பர்னிச்சர், ஏதாவது இருந்தால் அந்த பொருட்களை இனிமேல் ஈரத்துணி போட்டு துடைத்து, மீண்டும் காய்ந்த துணி போட்டு துடைக்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது. இந்த பால் கவரை உள்பக்கமாக திருப்பி விட்டு, இந்த பொருட்களை எல்லாம் துடைத்து எடுத்தாலே பாலிஷ் போட்டது போல பளபளக்கும்.

குறிப்பு 7

உங்க வீட்ல வார்னிஷ் அடிச்சு வைத்திருக்கும், பெயிண்ட் அடிச்சு வச்சிருக்கோம் கதவை கூட இதே மெத்தட ட்ரை பண்ணி சுத்தம் செஞ்சு பாருங்க. பால் கவரை வெட்டி உள்பக்கமாக திருப்பி, கைக்குள் கிளவுஸ் போல நுழைத்துக் கொள்ளுங்கள். அப்படியே அழுக்கு தூசி படிந்து இருக்கும் பொருட்களை சுத்தம் செய்யுங்கள். வேலை நிமிடத்தில் முடிந்துவிடும்.

குறிப்பு 8

பால் கவருக்கு உள்ள எப்போதுமே ஒரு வழுவழுப்பும், ஒரு ஈரத்தன்மையும் இருக்கும். உள்ளே இருக்கும் பாலை சுத்தமாக ஊற்றிவிட்டு, உள்ளே கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அலசி கீழே கொட்டிவிட்டு, பால் கவரை வெட்டி திருப்பிக் கொண்டால் போதும்.

இதையும் படிக்கலாமே: பாத்ரூமை சுத்தம் செய்ய புத்தம் புது வீட்டு குறிப்பு

மேலே சொன்ன குறிப்புகள் எல்லாம் சாத்தியம். இதெல்லாம் ஒர்க்கவுட் ஆகுமா. ஒரு முறை முயற்சி செய்துதான் பாருங்களேன் குப்பையில் தூக்கி போடும் பால் கவர் வைத்து இல்லத்தரசிகளுக்கு சுத்தம் செய்யும் வேலை இவ்வளவு ஈசியாக முடிந்தால் யாருக்குத்தான் இந்த குறிப்புகள் பிடிக்காது.

- Advertisement -