உங்க வீட்டு மிக்ஸி ஜார் எப்போவும் அழுக்கு பிடித்து தான் இருக்குமா? ஒருமுறை இப்படி சுத்தம் செஞ்சு பாருங்க! 5 நிமிடத்தில் புதுசு போல பளபளக்கும்.

- Advertisement -

நம்முடைய வீட்டில் அன்றாடம், அடிக்கடி பயன்படுத்தக் கூடிய பொருளில் இந்த மிக்ஸியும் ஒன்று.  மிக்ஸியை நாம் துடைத்து சுத்தமாக வைத்திருப்போம். ஆனால் யாரும் மிக்ஸி ஜாரை அக்கறையோடு சுத்தம் செய்வது கிடையாது. உங்கள் வீட்டு மிக்ஸி ஜாருக்கு உள்ளேயும், ஜாருக்கு அடியிலும், எவ்வளவு அழுக்கு இருக்கிறது என்பதை இந்த முறையில் சுத்தம் செய்து பார்த்தால், உங்களால், அந்த அசுத்தத்தை கண்டுபிடிக்க முடியும். மிக்ஸி ஜாரை எப்படி சுத்தம் செய்வது? என்பதை பற்றிய சுலபமான குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mixie

Step 1:
முதலில் உங்களது மிக்ஸி ஜாரை உள்பக்கம் எப்படி சுத்தம் செய்வது என்று பார்த்துவிடலாம். மிக்ஸி ஜார் உள்ளே வெறும் தண்ணீரை ஊற்றிக் கொள்ளவேண்டும். அந்தத் தண்ணீரில் கல் உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் அளவு போட வேண்டும். அடுத்தபடியாக பாத்திரம் தேய்க்கும் லிக்விட் அல்லது சோப்பை இந்த தண்ணீரில் கரைத்துவிட வேண்டும். அதன் பின்பு மிக்ஸி ஜாரை மிக்ஸியில் வைத்து 2 ஓட்டு ஓட்டினால் போதும். உங்களது மிக்ஸி பளபளப்பாகவும் மாறும் உங்கள் மிக்ஸியின் பிளேடின் இடுக்குகளில் உள்ள அழுக்கு மொத்தமாக வெளியேறி இருக்கும். அதேசமயம் மிக்ஸி பிளேடும் ஷார்ப் ஆகும். அதன் பின்பு உள்ளே இருக்கும் அழுக்கு தண்ணீரை கீழே ஊற்றி விட்டு சாதாரணமாக பாத்திரம் தேய்க்கும் சோப்பு போட்டு தேய்த்து சுத்தம் செய்து விடுங்கள்.

- Advertisement -

Step 2:
மிக்ஸி ஜாரை சிலர் அசைவ உணவு சமைப்பதற்கு, சில அசைவ பொருட்களை ஜாரில் உள்ளே போட்டு அரைப்பார்கள். அப்போது மிக்ஸியில் பிடித்திருக்கும் அசைவ வாடை எளிதில் நீங்காது. இதற்கு ஒரு சூப்பர் டிப்ஸ் உள்ளது. மிக்ஸி ஜாருக்கு உள்ளே 1 டேபிள்ஸ்பூன் அளவு பேக்கிங் சோடாவை போட வேண்டும். அதன் பின்பு 1/4 கப் அளவு தண்ணீரை விட்டு மிக்ஸியை ஒருமுறை ஓட விட்டீர்கள் என்றால், அசைவ வாடை முழுவதும் நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சில பேர் இதை நீச்ச வாடை என்று கூட சொல்வார்கள்.

mixie1

Step 3:
அடுத்தபடியாக மிக்சி ஜாருக்கு அடி பக்கமும் நாம் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அதாவது மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது மிக்ஸியின் அடிப்பாகத்தை சுத்தம் செய்வது மிகவும் நல்லது. ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சை பழச்சாறுடன், பேக்கிங் சோடாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் ஆப்ப சோடா மாவு தான் இது.

- Advertisement -

மிக்ஸியை கவிழ்த்து வைத்துவிட்டு இந்த கலவையை மிக்ஸியில் அடிப்பக்கத்தில் முழுவதிலும் நன்றாகத் தடவி விட வேண்டும். பழைய பல் தேய்க்கும் பிரஷை வைத்து இடுக்குகளிலும் தடவிக் கொள்ளுங்கள். அதன் பின்பு இது 10 நிமிடங்கள் நன்றாக ஊறிய பின்பு அந்த பிரஷ் வைத்து நன்றாக தேய்த்துக் கழுவி எடுத்தால் உள்ளே இருக்கும் பிசுபிசுப்புக்கள் வெளி வரத்தொடங்கும்.

mixie2

அடுத்தபடியாக உங்கள் வீட்டில் இருக்கும் பல் துலக்கும் பேஸ்டையும், பாத்திரம் தேய்க்கும் லிக்விடையும் ஒன்றாக கலந்து, இதனுள்ளே தடவி நன்றாகத் தேய்த்து, சுத்தம் செய்துவிடுங்கள். மிச்சம் மீதி இருக்கும் அழுக்கும் பிசுபிசுப்பும் திரண்டு வெளியேறிவிடும். இப்போது மிக்ஸி ஜாரை மொத்தமாக கழுவித் துடைத்து வெயிலில் உலர வைத்தால் போதும். உங்கள் வீட்டு மிக்ஸி ஜார் பளபளப்பாகிவிடும். இந்த பொங்கலுக்கு உங்க மிக்ஸி ஜாரை இப்படி சுத்தம் செய்து தான் பாருங்களேன்.

இதையும் படிக்கலாமே
2021 போகி பண்டிகை அன்று எரியும் நெருப்பில் தவறியும் இதை போட்டு விடாதீர்கள்! போகியில் கட்டாயம் போட வேண்டிய பொருட்கள் என்னென்ன? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -