உங்கள் மணிபர்சில் இந்த பொருட்கள் மட்டும் தவறியும் இருந்தால் இதெல்லாம் நிச்சயம் நடக்கும்!

purse-om

ஒருவருடைய மணிபர்ஸ் என்பது பணத்துடன் தனிப்பட்ட விருப்பமான பொருட்களை உள்ளடக்கியது ஆகும். அவரவர்களுக்கு என்ன விருப்பமோ அதனை அதில் வைத்துக் கொள்வது உண்டு. அந்த பொருட்களுடன் பணத்தை வைக்கும் பொழுது தான் பிரச்சினையும் ஏற்படுகிறது. நீங்கள் மணி பர்சில் வைக்கப்படும் பணத்துடன் இருக்க வேண்டிய பொருட்கள் என்ன? மற்றும் இருக்கவே கூடாத பொருட்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

purse-medicine

நீங்கள் வைத்திருக்கும் மணிபர்சில் பணத்துடன் மருந்து பொருட்களை வைத்திருக்கிறீர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கு எதிர்மறை ஆற்றல் ஏற்படும். மருந்து மாத்திரை, மருந்து மாத்திரை பற்றிய சீட்டுகள் போன்றவை ஒருபோதும் மணிபர்ஸில் வைக்கக் கூடாது. இதனால் நாம் நோயாளி என்கிற உணர்வு அடிக்கடி ஏற்படும். அதிக முக்கியத்துவம் உள்ள மாத்திரைகளைத் வைத்துக் கொள்ளலாம், வேறு வழி இல்லை.

உங்கள் மணிபர்சில் பணத்துடன் வாசனை மிகுந்த பணத்தை ஈர்க்கக் கூடிய பொருட்கள் இருந்தால் நிச்சயம் பணமானது மென்மேலும் பெருக கூடிய வாய்ப்புகள் அதிகம் உருவாகும். பத்து ரூபாய் இருந்தால் 100 ரூபாயாக மாறும். பணத்தை ஈர்க்கக் கூடிய பொருட்களில் பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, பட்டை, சோம்பு, கொம்பு மஞ்சள், கடுக்காய் ஆகியவை அடங்கும். இந்த பொருட்களை மணிபர்சில் வைத்துக் கொள்வதால் மகாலட்சுமியின் அருட்பார்வை உங்களுக்கு கிடைக்கும்.

Swastik

மேலும் அதிர்ஷ்டம் பெருக மணிபர்ஸில் சங்கு, ஸ்வஸ்திக், ஓம், வேல், சூலம் ஆகிய தெய்வீக சின்னங்கள் பதிக்கப்பட்ட பொருட்கள் அல்லது படங்கள் வைத்திருப்பதால் நிறைய நன்மைகள் உண்டாகும். பணம் வைத்திருக்கும் இடத்தில் இது போன்ற சின்னங்கள் இருப்பது பணத்தை அதிகமாக ஈர்த்துக் கொண்டு வந்து தரும் என்பது ஜோதிட நம்பிக்கை. அதுபோல செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமியின் படம், குபேரனுடைய படம், சொர்ண பைரவர் உடைய படம், பெருமாள் படம் ஆகியவற்றை வைத்திருப்பதால் பணமானது பெருகும் என்கிற நம்பிக்கையும் உண்டு.

பணத்துடன் எந்த பொருளும் சேர்த்து இல்லாமல் இருந்தால் நிச்சயம் பணம் கரைந்து கொண்டே போகும். ஏதாவது ஒரு பொருள் கூடுதலாக இருப்பது அவசியமாகும். அதுபோல மணிபர்சில் கூர்மையான எந்த ஒரு பொருளையும் வைத்திருக்கக் கூடாது. இது எதிர்மறை ஆற்றல் வெளியிடும். இதனால் பணமானது பெருக செய்யாது. வீண் விரையம் ஏற்படும். ஆணி, ஊக்கு, கத்தி, ஹேர் பின் போன்ற கூர்மையான ஆயுதங்களை ஒருபொழுதும் பணம் வைக்கும் இடத்தில் வைத்திருக்கவே கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

viboothi

ஒரு சிலர் மணிபர்சில் கோவிலில் கொடுக்கும் விபூதி, குங்குமம், எலுமிச்சை போன்ற பொருட்களை எல்லாம் வைத்திருப்பார்கள். இது நல்ல ஒரு அதிர்ஷ்டத்தை உண்டு பண்ணும். தெய்வம் இருக்கும் இடங்களில் செல்வமும் இருக்கும். அதுபோல தெய்வீக பொருட்கள் பணத்துடன் சேர்த்து வைக்கும் பொழுது பணம் தடையில்லாமல் சேரும். பெண்கள் முக அழகிற்கு பயன்படும் முக அழகு சாதனங்கள் தங்களுடைய மணி பர்சில் வைத்துக் கொள்வது உண்டு. இவைகள் கூடுமானவரை நீங்கள் பணம் வைத்திருக்கும் பகுதியில் வைக்காமல் அதற்கு அடுத்த பகுதியில் வைத்துக் கொள்வது நல்லது. மேற்கூறிய பொருட்களை தவிர பணத்துடன் எந்த பொருட்களையும் சேர்த்து வைக்கக் கூடாது அது நிச்சயம் விரயத்தை உண்டு பண்ணிவிடும்.