உடல் எடையை குறைக்க, கை கால் மூட்டு வலி வராமல் இருக்க, தினமும் 1 டம்ளர் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும். 7 நாட்களில் உங்களுக்கு வித்தியாசம் தெரியும்.

thoppai
- Advertisement -

உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு கை கால் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகு வலி, என்ற தொந்தரவு அதிகமாக இருக்கும். உடல் எடையை குறைத்து எலும்புகளில் இருக்கும் வலியை குறைக்க, இந்த கசாயத்தை குடிக்கலாம். அதுமட்டுமல்லாமல் சிறுநீரகத்தில் இருக்கும் கல்லை வெளியேற்ற, மலச்சிக்கலை சரிசெய்ய, உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புக்களை கரைக்கவும் இந்த கசாயம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இந்த கசாயத்தை குடிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமையலறையில் இருக்கும் 3 பொருட்களை வைத்தே மிக மிக சுலபமான முறையில் இந்த கசாயத்தை செய்வது எப்படி தெரிந்து கொள்வோமா.

1 டம்ளர் அளவு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள். அந்த தண்ணீரில் பிரியாணி இலை – 2, சோம்பு – 1 ஸ்பூன், வெந்தயம் பொடி – 1/2 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிரியாணி இலைகளை இரண்டு மூன்றாக கிழித்து அந்த தண்ணீரில் போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

1 டம்ளர் அளவு தண்ணீரானது, 3/4 டம்ளர் அளவு தண்ணீராக சுண்டி வந்தவுடன் இறுதியாக இதில் 1/2 ஸ்பூன் அளவு வெல்லம் சேர்த்து கலந்து வடிகட்டி குடிக்க வேண்டியதுதான். நீங்கள் சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் வெல்லம் சேர்த்துக் கொள்ள வேண்டாம். இந்த கசாயத்தை வெதுவெதுப்பாக இருக்கும்போது குடிக்கவேண்டும். காலை உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு குடிக்கலாம். அப்படி இல்லை என்றால் காலை உணவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து குளிக்கலாம்.

காலை நேரம் இதை குடிக்க நேரமில்லை என்பவர்கள் மாலை நேரத்தில் ஐந்து மணி போல இந்த பானத்தை குடிப்பதும் நன்மையே. தொடர்ந்து பத்து நாட்கள் இந்த கசாயத்தை குடித்தாலே உங்களுடைய உடல் நிலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை உணர முடியும்.

- Advertisement -

பொதுவாகவே கை கால் மூட்டு வலி இடுப்பு வலி உள்ளவர்கள் அதிகப்படியான வேலையை செய்யக் கூடாது என்று சொல்லுவார்கள். அதாவது அதிக எடையுள்ள பொருட்களை தூக்கக்கூடாது. தரையில் அமர கூடாது. குனிந்து நிமிர கூடாது என்று சொல்லுவது வழக்கம் தான். மூட்டு வலி உள்ளவர்கள் குறிப்பாக கடினமான உடற்பயிற்சிகளை செய்யவே கூடாது.

இந்த கஷாயத்தை நீங்கள் குடிக்கத் தொடங்கிய பின்பு கடினமான வேலை செய்வதையும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுடைய உடல்நிலையில் நல்ல மாற்றம் தெரியும். தினமும் இந்த கசாயத்தை குடிக்க முடியாதவர்கள் இரண்டு நாளைக்கு ஒருமுறை குடித்தாலும் பரவாயில்லை. நீங்கள் தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிடுபவர்களாக இருந்தால், உங்களுடைய உடல் நிலையில் ஏதாவது ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் இருந்தால், இந்த கசாயத்தை குடிப்பதற்கு முன்பு உங்களுடைய மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

- Advertisement -