இந்த 7 விஷயங்கள் இருந்தும் பிரயோஜனம் இல்லாத விஷயங்களாக பழம்பெரும் தமிழ் நூல் ஒன்று கூறுகிறது! என்ன நூல் அது? அந்த ஏழு விஷயங்கள் என்னனு நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

food-olai-suvadi
- Advertisement -

பழம்பெரும் தமிழ் நூல்களில் விவேக சிந்தாமணியும் ஒன்றாகும். இந்நூல் பல்வேறு செய்யுள் தொகுப்புகளை கொண்டுள்ளது. அனுபவத்தில் எளிய நடையில் எழுதப்பட்ட இந்நூல் யாரால்? எப்போது எழுதப்பட்டது? என்பது தெரியவில்லை. பொருள் நிறைந்த வார்த்தைகளால் நிரம்பி உள்ள இந்நூல் நாயக்கர் காலத்தில் எழுதப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்நூலில் இருக்கும் ஒரு பாடல் ஏழு விஷயங்கள் இருந்தும் பயனில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இருந்தும் பயனில்லாத அந்த ஏழு விஷயங்கள் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

vviveka-sinthamani

விவேக சிந்தாமணி பாடல் வரிகள்:
ஆபத்துக்குதவாப் பிள்ளை
அரும்பசிக்குதவா அன்னம்
தாகத்தைத் தீரா தீர்த்தம்
தரித்திரமறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன்
குருமொழி கேளாச் சீடன்
பாவத்தைத் தீரா தீரத்தம்
பயனில ஏழும் தானே!

- Advertisement -

1. ஆபத்துக்குதவாப் பிள்ளை:
பெற்றோர்களுக்கு பிள்ளைகள் தான் உலகமாக இருக்கிறது. குழந்தை பிறக்கும் வரை பெற்றோர்களுக்கு தங்களுடைய வாழ்க்கை தான் முக்கியம். ஆனால் ஒரு குழந்தை பிறந்து விட்டால் அந்த குழந்தைக்காகவே தங்களுடைய மீதி உள்ள மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்து வாழ்பவர்கள் தான் பெற்றோர்கள். அந்த பெற்றவர்களுக்கு பிள்ளைகள் வாழும் காலத்தில் உதவி செய்யாமல் விட்டாலும், கடைசி காலத்தில் உதவி செய்யாமல் போய்விட்டால் அந்தப் பிள்ளை இருந்தும் பயனில்லாமல் இருப்பதற்கு சமமாகும்.

eating-food

2. அரும்பசிக்குதவா அன்னம்:
பசியில் இருக்கும் பொழுது உதவாத சாப்பாடு அதாவது அன்னம் இருந்தும் வீண் என்கிறார் இந்த நூலின் ஆசிரியர். நல்ல பசி இருக்கும் பொழுது ஒருவருக்குக் கொடுக்கும் சாப்பாடு தான் உண்மையில் புண்ணியத்தை சேர்க்கும். முன்பெல்லாம் விருந்தோம்பலுக்காகவே திண்ணை கட்டி வைத்திருந்தனர் தமிழர்கள். ஆனால் இப்போதெல்லாம் வீட்டிற்கு வந்த விருந்தாளிகளுக்கு கூட மனமில்லாமல் தான் சாப்பாடு போட்டு அனுப்புகிறார்கள். அப்படி ஆகிவிட்டது நிலைமை. கடும் பசியில் அவர்கள் வந்தாலும் நம் முகம் பார்த்து, ‘நான் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன்’ என்று கூறுவார்கள். அங்கு அவர்களுக்கு உதவாத அந்த சாப்பாடு இருந்தும் வீண் தான்.

- Advertisement -

3. தாகத்தைத் தீரா தீர்த்தம்:
இந்த பிரபஞ்சம் முழுவதும் கடல் என்கிற நீரால் நிரம்பி இருந்தாலும் தாகத்தை தீர்க்காத தண்ணீர் இருந்தும் வீண் தான். ஆறு, கடல், குளம், குட்டை என்று எங்கு தண்ணீர் மண்டிக் கிடந்தாலும், அந்த தண்ணீர் ஒருவருடைய தாகத்தை தீர்க்க முடியாமல் இருந்தால் அது இருந்தும் பயனற்றது ஆகும்.

marraige-couple

4. தரித்திரமறியாப் பெண்டிர்:
வறுமையை அறியாத பெண்களை தான் தரித்திரம் அறியாப் பெண்டிர் என்று கூறியுள்ளனர். எந்த ஒரு கணவனுக்கும், தன்னுடைய வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்யத் தெரியாமல், ஆடம்பரமாக செலவு செய்யும் மனைவி அமைந்து விட்டால் தீராத துன்பம் தான் வரும். இத்தகைய மனைவியர் இருந்தும் பயன் இல்லை என்கிறது இந்த நூல். கணவனின் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்பவளே நல்ல மனைவியாக இருக்க முடியும்.

- Advertisement -

5. கோபத்தை அடக்கா வேந்தன்:
சாதாரண மனிதனுக்கு கோபம் வருவது நியாயம் தான். ஆனால் வேந்தனாக அதாவது அரசனாக இருக்கும் ஒருவனுக்கு கோபம் வருவது அவனை மட்டுமல்ல, அவனை நம்பி இருக்கும் மக்களையும் பாதிக்கிறது. இத்தகைய அரசன் இருந்தும் பயன் இல்லாதது என்கிறார் ஆசிரியர். இப்போது இருக்கும் சூழ்நிலையில் இது போன்றவர்கள் தான் அரசால்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

sabam

6. குருமொழி கேளாச் சீடன்:
ஒருவருக்கு குருவாக இருக்கக் கூடிய இடத்தில் இருப்பவர்கள் தெய்வத்தை விட உயர்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். மாதா, பிதா, குரு, தெய்வம். இதில் குருவிற்கு பிறகு தான் தெய்வம் என்பது இதன் பொருளாகும். அத்தகைய குரு சொல்லுவதை கேட்காத சீடன் அதாவது மாணவன் இருந்தும் பயனற்றவன் ஆகிறான். கல்வி, கலைகளை விற்கும் இந்த உலகத்தில் இந்த வரியே வீண் தான் என்று தோன்றுகிறது அல்லவா?

surya-namaskar1

7. பாவத்தைத் தீரா தீரத்தம்:
தீர்த்தம் என்றாலே அது பாவத்தை தீர்க்க வேண்டியது அவசியமாகும். பாவத்தை தீர்க்கா விட்டால் அதற்கு பெயர் தீர்த்தம் அல்ல தண்ணீர் என்று தான் கூற வேண்டும். தெரிந்தே பாவம் செய்பவர்கள் எந்த தீர்த்தத்தில் நீராடினாலும் பாவங்கள் தீர போவதில்லை. தெரியாமல் செய்த பாவங்களுக்கு அமைக்கப்பட்டது தான் தீர்த்தக் குளங்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இதையும் படிக்கலாமே
ஒரே ஒரு வெள்ளைப்பூண்டு இருந்தால் உங்களுக்கு இருக்கும் செய்வினை, திருஷ்டிக் கோளாறுகள் ஒரே நாளில் நீங்கிவிடும் எப்படி?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -