முடி உதிர்வு, இளநரை, பொடுகு, இப்படி முடி சம்பந்தமான அனைத்து பிரச்சனைககளுக்கும் ஒரே தீர்வு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இப்படி யோசித்துக் கொண்டே இருக்காமல், வாங்க அதுக்கு என்ன தீர்வுன்னு பார்த்துடலாம்.

- Advertisement -

பெண்கள் என்றாலே அழகு தான். அதிலும் அவர்கள் தலை முடியானது தரையைத் தொடும் அளவிற்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் இருந்தால் பார்ப்பதற்கு மேலும் அழகாக இருக்கும். நமக்கும் இப்படி முடி வளர்க்க வேண்டும் என்று ஆசை எல்லாம் இருக்கத் தான் செய்யும். ஆனால் முடி வளர என்ன செய்வது என்று தெரியாமல் கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த பொருட்களை தலைக்கு தேய்த்து முடி வளர்வதற்கு பதிலாக முடி உதிரத் தொடங்கி விடும். இந்தப் பிரச்சனையை சரி செய்ய நாம் வீட்டிலேயே முடி வளர தேவையான எண்ணெயை தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். அதை எப்படி செய்வது என்பதை இந்த அழகு குறிப்பு பதிவு தெரிந்து கொள்ளலாம்.

இந்த எண்ணெய் தயாரிக்க நல்ல சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் தேவை. மற்றபடி கடைகளில் இருக்கும் சாதாரண எண்ணெயை பயன்படுத்தினால் உங்களுக்கு நல்ல பலனை கொடுக்காது. எனவே செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முடி வளர எண்ணெய் தயாரிக்கும் முறை:
இந்த தேங்காய் எண்ணெய் 500 கிராம் எடுத்துக் கொள்ளுங்கள். 20 செம்பருத்தி பூ இதை பறித்து காம்பு நீக்கி நல்ல நிழலில் இரண்டு நாட்கள் வரை காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து கரிசலாங்கண்ணி இதையும் ஒரு கைப்பிடி அளவுக்கு எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதை காய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. கடைசியாக இரண்டு கற்றாழை மடலை தோல் சீவி அலசி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் அதில் ஊற்றி லேசாக சூடு படுத்துங்கள். இதையெல்லாம் செய்யும் போது அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்தவுடன் அதில் கற்றாழை மடல், கரிசலாங்கண்ணி, செம்பருத்தி மூன்றையும் சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருங்கள். 10 நிமிடம் வரை இந்த பொருட்களை சேர்த்து எண்ணெய்யில் காய வேண்டும் கொதிக்க கூடாது.

- Advertisement -

பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு, எண்ணெய் சூடாறும் வரை அப்படியே விட்டு விடுங்கள். இதில் இருக்கும் சாறு மொத்தமும் எண்ணெயில் இறங்கி இருக்கும். அதன் பிறகு எண்ணையை வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். முடி வளர தேவையான எண்ணெய் தயாராகி விட்டது.

தேங்காய் எண்ணெய் முடி நன்றாக வளர பயன்படும். கற்றாழை தலையில் பொடுகு, புண் இருந்தால் அதை நீக்கி விடும். கரிசலாங்கண்ணி தலையின் உஷ்ணத்தை குறைத்து முடி வளர உதவி செய்யும். கரிசலாங்கண்ணி இலை மிகவும் குளுமையானது இதை தினமும் தலையில் தேய்ப்பதால் பிரச்சனை வருமா? என்று யோசிக்க வேண்டாம் எண்ணெயில் போட்டு காய்ச்சி விட்டதால் எந்த பிரச்சனையும் வராது. செம்பருத்தி பூவும் முடி நன்றாக வளர உதவி செய்யும்.

இதையும் படிக்கலாமே: சீயக்காய் போட்டு தலைக்கு குளிப்பீங்களா? இந்த 4 பொருளையும் சேர்த்து அலசி பாருங்க ஒரு முடி கூட இனி உங்க தலையில் இருந்து உதிராது!

இந்த எண்ணையை காய்த்து தொடர்ந்து 15 நாட்கள் வரை தொடர்ந்து தேய்த்து வந்தாலே போதும். உங்களின் முடி உதிர்வு பிரச்சனை நீங்கி, முடி நன்றாக வளர தொடங்கி விடும். அது மட்டும் இன்றி இதில் சேர்த்து இருக்கும் கரிசலாங்கண்ணி இளநரையை போக்கி நரை முடியும் வர விடாமல் தடுத்து விடும். நீங்களும் இந்த எண்ணையை பயன்படுத்தி பாருங்கள். முடி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் இது ஒரு நல்ல தீர்வு.

- Advertisement -