உடல் கருமை நீங்க எளிய வழி

even skin tone
- Advertisement -

நம்முடைய உடலில் வெயில் படும் இடங்களில் நிறம் கருத்துப் போய் இருக்கும். வெயில் படாத இடங்களோடு சேர்த்து பார்க்கும் பொழுது பிளாக் அண்ட் ஒயிட் என்ற ரேஞ்சிற்கு இருக்கும். இந்த நிற ஏற்றத்தாழ்வை சரி செய்வதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

வெயிலில் அதிக நேரம் அலைபவர்களும் வேலை செய்பவர்களும் விளையாடும் குழந்தைகளும் கருத்துப் போய் வருவார்கள். அதற்கு காரணம் வெயில் தான் என்றாலும் அவர்களுடைய பழைய நிறத்தைக் கொண்டு வருவதற்கு நாம் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். என்னதான் வீட்டிற்குள்ளேயே இருந்தாலும் அந்த பழைய நிறம் வருவது என்பது மிகவும் சிரமமாக தான் இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் செய்யக்கூடிய ஒரு எளிமையான பேக்கை பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த பேக்கிற்கு நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய நான்கு பொருட்கள் தேவைப்படுகிறது. தக்காளி, எலுமிச்சை, தேன், பேக்கிங் சோடா. பொதுவாக தக்காளி நம்முடைய தோலிற்க்கு தேவையான அனைத்து விட்டமின்களையும் கொண்டிருப்பதால் தோலில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் நீக்குவதற்கு உதவும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதேபோல் எலுமிச்சம் பழத்தை கிருமிநாசினி என்று கூறப்படுவதால் நம் முகத்தில் ஏற்பட்டிருக்கும் கிருமிகளை நீக்குவதற்கு உதவுகிறது.

தேன் இயற்கையிலேயே அற்புதமாக கிடைக்கக்கூடிய ஒரு பொக்கிஷம் என்றுதான் கூற வேண்டும். தேனை நாம் நம்முடைய தோலிற்கு உபயோகப்படுத்தும் பொழுது அது நம்முடைய தோலுக்கு தேவையான ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது என்று கூறலாம். பேக்கிங் சோடா நம் முகத்தில் இருக்கக்கூடிய கருமையை உடனடியாக நீக்குவதற்கு மிகவும் அற்புதமாக உதவக்கூடிய ஒரு பொருளாகவே திகழ்கிறது.

- Advertisement -

இப்பொழுது ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை தக்காளியை எடுத்து நன்றாக சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அரை எலுமிச்சம் பழத்தை எடுத்து அதையும் நன்றாக பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் அளவிற்கு தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அரை ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடாவை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பேக்கிங் சோடாவை சேர்த்தவுடன் நுரை பொங்குவது போல் தெரியும். அந்த நுரை அடங்கும் வரை அதை நன்றாக கிளற வேண்டும்.

பிறகு அதை எடுத்து முதலில் உங்கள் கழுத்தில் தடவி எந்தவித எரிச்சலும் சேதமும் இல்லாத பட்சத்தில் உங்களுடைய முகத்தில் நீங்கள் தடவலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உடலில் எந்தெந்த இடங்களில் கருமை இருக்கிறதோ அந்த கருமைகள் அனைத்தையும் நீக்கக்கூடிய அற்புத ஆற்றல் இந்த பேக்கிற்கு இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: முகத்தை பளபளப்பாக மாற்ற மாம்பழ ஃபேஸ் பேக்

இந்த பேக்கை அனைவரும் உபயோகப்படுத்தி உடலில் இருக்கக்கூடிய நிற ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சீரான நிறத்தை பெற முடியும்.

- Advertisement -