நமக்கு மட்டும் முடியே வளரலையேன்னு கவலையா இருக்கா, அப்ப இனி தலைக்கு குளிக்கும் போது இத மட்டும் ட்ரை பண்ணுங்க, அப்புறம் நமக்கா இவ்ளோ முடின்னு ஆச்சர்யப்படுவீங்க.

hair1
- Advertisement -

நம் உடம்பில் ஒவ்வொரு பாகமும் மிக மிக முக்கியமானது. அதை நாம் எப்படி சரியான முறையில் பராமரித்து பாதுகாக்கிறோமோ அந்த அளவிற்கு நாம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும் . அந்த வகையில் முடியை கொஞ்சம் சிரத்தையுடன் பராமரித்து வந்தால், முடி கொட்டும் என்ற பிரச்சனையே இல்லாமல், நல்ல கருகருவென்று நீண்டு அடர்த்தியாக வளரும். இந்த அழகு குறிப்பு பதிவில் முடி வளர்ச்சிக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

முடி நன்றாக வளர வேண்டும் என்றால் முதலில் முடியில் அழுக்கு, சிக்கு இவையெல்லாம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் மூன்று நாட்களாக கட்டாயமாக தலைக்கு குளித்து விட வேண்டும். அது மட்டுமின்றி தலைக்கு பயன்படுத்தும் எண்ணையிலிருந்து ஷாம்பு வரை எதுவாக இருந்தாலும் அதிக கெமிக்கல் இல்லாமல் பார்த்து கொண்டு, இத்துடன் இயற்கையான உணவு முறையையும் பழகிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

முதலில் அரை மூடி தேங்காய் எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சமாக பால் சேர்த்து (பசும் பாலாக இருந்தால் மிகவும் நல்லது) அரைத்து அதில் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் திக்கான பாலை நல்ல மெலிதான துணியில் போட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பாலை ஒரு பவுலில் ஊற்றி அப்படியே வைத்து விடுங்கள்.

அடுத்ததாக ஒரு பெரிய கற்றாழை மடலை எடுத்து அதை சிறிது நேரம் வைத்தால் மடலின் அடியில் அழுக்கு போல தங்கி விடும், அதை எடுத்து விட்டு நன்றாக அலசிய பிறகு அதன் மேல் தோலை சீவி விட்டு, ஜெல்லை மட்டும் எடுத்து அதையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள். இதையும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது கடைசியாக தேங்காய் பால், காற்றாலை ஜெல் இரண்டுடன் ஒரு நாட்டுக் கோழி முட்டையை உடைத்து ஊற்றி மூன்றையும் சேர்த்து ஒரு விஸ்க் வைத்து நன்றாக அடித்தால் ஒரு பேஸ்ட் போல வந்து விடும். இதை மிக்ஸியில் சேர்த்து அரைக்கலாம் நிறைய பேருக்கு மிக்ஸியில் முட்டை சேர்த்து அரைக்க பிடிக்காது. உங்களுக்கு அந்த பிரச்சனை இல்லை என்றால் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் கூட ஒரு முறை அடித்து விடுங்கள். ஆனால் மிக்ஸியில் சேர்க்கும் போது தண்ணீர் பதம் அதிகமாக இருப்பதால் தெறித்து விடாமல் கவனமாக அரைக்க வேண்டும்.

நீங்கள் தலைக்கு குளிக்க அரை மணி நேரத்திற்கு முன்பாக இந்த பேஸ்ட்டை முடியின் ஒவ்வொரு பாகமாக பிரித்து வேர் கால்களில் படும்படி நன்றாக தேய்த்து பத்து நிமிடம் வரை மசாஜ் செய்ய வேண்டும். இத தேய்த்து ஐந்து நிமிடம் உங்கள் தலையில் இருந்தாலே போதும். அதன் பிறகு நீங்கள் எப்போதும் போல தலைக்கு குளித்து விடலாம். தலைக்கு குளிக்கும் போது ஷாம்பூவை விட சீயக்காய் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே: 2 நாளில் முடி வளரும் அதிசயம் நடக்க வேண்டுமா?அப்படியானால் கடுகு எண்ணெயை இப்படி பயன்படுத்தி பாருங்கள். முடியின் அசுர வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

இந்த முறையை வாரத்திற்கு மூன்று முறை கட்டாயமாக செய்து வந்தால் முடி உதிர்வு, இளநரை, பொடுகு இப்படி எந்த பிரச்சினையும் இருக்காது. தேங்காய் பால் முடிக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்தை கொடுத்து முடி எப்போதும் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும். முட்டை முடியை மிருதுவாக ஆகும். கற்றாழை ஜெல் இறந்த செல்களை எல்லாம் நீக்கும். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து போடும் போது உங்கள் முடிவின் வளர்ச்சி கட்டாயமாக நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் வீட்டில் இதை முயற்சி செய்து பாருங்கள். கட்டாயம் உங்கள் முடி வளர்ச்சி அதி

- Advertisement -