ஒரே நிமிடத்தில் உங்களுடைய முகத்தை தங்கம் போல ஜொலிக்க வைக்க 1 டம்ளர் தண்ணீர் போதும்.

face4
- Advertisement -

நம்முடைய முகத்தை பொலிவாக மாற்றி தங்கம் போல ஜொலிக்க வைக்க வீட்டில் இருந்தபடியே ஒரு சீரம் எப்படி தயார் செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கடையில் விலை அதிகமாக நிறைய சீரம் கிடைக்கிறது‌. ஆனால் அதில் நிச்சயமாக ஏதாவது ஒரு கெமிக்கல் கலந்து இருக்கத்தான் செய்யும். அதை பயன்படுத்தும் போது நமக்கு ரிசல்ட் சீக்கிரமாக கிடைப்பது போல தெரிந்தாலும், பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஆனால் வீட்டிலேயே நம் கையால் இயற்கையான பொருட்களை வைத்து இப்படி சீரம் தயாரித்து பயன்படுத்தி வந்தால் பக்கவிளைவுகளும் ஏற்படாது. முகம் ஒரு சில நாட்களில் அழகாக மாறிவிடும். வாங்க நேரத்தைக் கடத்தாமல் வீட்டில் இருந்தபடியே சூப்பர் சீரம் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

- Advertisement -

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொள்ளுங்கள். அதில் 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளவேண்டும். தண்ணீர் கொதி வரும்போது சோம்பு – 1 ஸ்பூன், ஏலக்காய் இடித்தது – 5, இந்த இரண்டு பொருட்களையும் போட்டு தண்ணீரை நன்றாகன கொதிக்க வைக்கவேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து விட்டு கொதிக்க வையுங்கள். 15 நிமிடங்கள் தண்ணீர் கொதிக்கட்டும்.

1 டம்ளர் தண்ணீர், 1/2 டம்ளராக வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த தண்ணீரை நன்றாக ஆற வைத்து விட்டு, இதில் 1 ஸ்பூன் அலோ வேரா ஜெல், 1 ஸ்பூன் பாதாம் ஆயிலை ஊற்றி நன்றாக அடித்து கலக்கி இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தால் ஏழு நாட்கள் வரை கெட்டுப் போகாது.

- Advertisement -

தினமும் இரவு தூங்கும் போது இந்த தண்ணீரை முகத்தில் ஸ்பிரே செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான். உங்களுடைய முகம் இந்த தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும். இரவு அப்படியே தூங்கச் செல்லலாம். மறுநாள் காலை எழுந்து முகத்தை கழுவிக் கொள்ளலாம். 30 நாட்கள் தொடர்ந்து இந்த சீரமை பயன்படுத்தி வந்தால் முகத்தில் உங்களுக்கு ஒரு நல்ல வித்தியாசம் தெரியும். பயன்படுத்தத் தொடங்கிய 7 நாட்களில் நல்ல ரிசல்ட் தெரியும். முப்பது நாட்களை கடக்கும் போது மற்றவர்கள் உங்களைப் பார்த்து கேட்பார்கள், முகத்தில் ஏதோ ஒரு பொலிவு தெரிகிறதே என்று.

ட்ரை பண்ணிப் பார்த்தால் இந்த சிம்பிள் சீரம்முடைய பவர் என்னன்னு உங்களுக்கு தெரியும். ஆனால் இந்த சீரமை முகத்தில் அடித்துக் கொண்டு வெயிலில் செல்லக்கூடாது. பகலில் நீங்கள் வீட்டில் இருப்பவர்களாக இருந்தால் பகலில் கூட இந்த சீரமை இரண்டு முறை முகத்தில் ஸ்பிரே செய்து கொள்ளலாம்‌ தவறில்லை. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ஏழுநாள் ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமாக கிடைக்கக்கூடிய ரிசல்ட் உங்களை திரும்ப திரும்ப இந்த சீரமை பயன்படுத்த சொல்லும்.

- Advertisement -