முகம் எப்போதும் இளமையாகவும் மினுமினுப்பாகவும் இருக்க ஒரு முட்டையை வச்சு இந்த பேக்கை ட்ரை பண்ணுங்க. அப்புறம் உங்க வயசா சொன்னா யாரும் நம்பவே மாட்டாங்க. அந்த அளவுக்கு ஸ்மார்ட்டா இருப்பீங்க

Egg Face pack
- Advertisement -

முகம் போதும் பளிச்சென்று பார்க்க அழகாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களை விட, முகத்தில் வயதான தோற்றம் தெரிந்து விடக் கூடாது என நினைப்பவர்கள் தான் அதிகம். முகத்தில் இந்த வயதான தோற்றமானது தெரிய ஆரம்பித்தால் மனம் தானாகவே சோர்வு நிலைக்கு சென்று விடும். இந்த அழகு குறிப்பு பதிவில் உள்ள பேக்கை தொடர்ந்து பயன்படுத்தும் போது உங்களுக்கு எத்தனை வயதானாலும் முகத்தில் தெரியவே தெரியாது. அப்படி ஒரு அருமையான பேக்கை எப்படி போடுவது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

முகம் எப்போதும் இளமையாக இருக்க பேக்
இந்த பேக்கை போடுவதற்கு ஒரே ஒரு முட்டையை முதலில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் வெள்ளை கருவை தனியாகவும், மஞ்சள் கருவை தனியாகவும் பௌலில் சேர்த்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது முதலில் மஞ்சள் கருவை மட்டும் எடுத்து முகத்தில் தேய்த்து பேக் போல அப்படியே போட்டு விடுங்கள். இதை போடும் போது கொஞ்சம் ஸ்மெல் வரத் தான் செய்யும். ஆனால் இதை போடுவதன் மூலம் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தையும் விரைவில் சரி ஆகிவிடும். இது பத்து நிமிடம் வரை உங்கள் முகத்தில் இருந்தால் போதும். அதன் பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை கழுவி விடுங்கள் சோப்பு எதையும் பயன்படுத்த வேண்டாம்.

அடுத்ததாக எடுத்து வைத்திருக்கும் வெள்ளை கருவில் ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு இரண்டையும் நன்றாக கலந்து குழைத்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளுங்கள். இதை உங்கள் முகத்தில் பேக் போல போட்டு பத்து நிமிடம் வரை அப்படியே விடுங்கள். இது கொஞ்சமாக காய்ந்து உங்கள் முகத்தை இழுக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் முகத்தை சுத்தமாக துடைத்து விடுங்கள் இப்போதும் சோப்பை பயன்படுத்தும் கூடாது.

- Advertisement -

முட்டையில் உள்ள புரோட்டின் சத்து ஆனது முகத்திற்கு மிக மிக நல்லது இது முகத்தில் ஏற்படும் முகச்சுருக்கங்களை நீக்கி தோள்களை இறுக செய்து முகம் எப்போதும் இளமையுடன் இருக்க உதவி செய்யும். அத்துடன் தேனிர்க்கும் முகத்தை இளமையாகவும் அதே நேரத்தில் நல்ல அழகையும் வசிகரரத்தையும் கொடுக்கக் கூடிய தன்மை உண்டு. இதில் எலுமிச்சை சாறையும் சேர்த்து செய்திருப்பதால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் எல்லாம் நீங்கி, முகத்தில் இருக்கும் கருத்திட்டுகள் போன்ற வை கூட நீங்கி பார்க்க பிரகாசமாக இருக்கும்.

இந்த பேக்கிற்கு பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் மிக மிக எளிமையானவை தான். அதே நேரத்தில் அதிக செலவும் இல்லாதது சாதாரணமாக இப்போதெல்லாம் எல்லோர் வீட்டிலும் இருக்கக் கூடிய இந்த பொருளை வைத்து எளிமையான முறையில் இந்த பேக்கை பயன்படுத்தி வரும் போதும் உங்கள் வயதை நீங்களே மதிப்பிட முடியாது. அந்த அளவிற்கு உங்கள் முகம் இளமையாக இருக்கும். இந்த பேக்கை வாரம் இரு முறை மட்டும் போட்டால் போதும். அதிகமாகவும் பயன்படுத்த வேண்டாம்.

இதையும் படிக்கலாமே: தலை முடி வளர்ச்சி தாறுமாறாக இருக்க வேண்டுமா? யோசிக்காமல் இந்த ஒரு பேக்கை ரெடி பண்ணிடுங்க.

முட்டையை பயன்படுத்தி முக அழகை கூட்டு கூடிய இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், இந்த முறையை நீங்களும் பின்பற்றி உங்களுடைய முகத்தை எப்போதும் இளமையாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -