- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஆயிரக்கணக்கில் காசு கொடுத்து காஸ்லியான ஃபேசியல் செய்தால் கூட இப்படி ஒரு கலர் வராதுப்பா. வெறும்...

ஆயிரக்கணக்கில் காசு கொடுத்து காஸ்லியான ஃபேசியல் செய்தால் கூட இப்படி ஒரு கலர் வராதுப்பா. வெறும் 10 ரூபாய் செலவில் இருக்கும் இந்த ஐடியாவை இத்தனை நாள் தெரிஞ்சுக்காம போயிட்டோமே.

- Advertisement -

வெள்ளையாக மாற வேண்டும் என்பது நிறைய பேரின் கனவாக இருக்கிறது. இதற்காக எத்தனையோ முயற்சிகளை எடுக்கிறார்கள். இப்போது வைரலாக நிறைய ஃபேசியல் கூட இருக்கிறது. ஆனால் அது எல்லாம் லேசர் ட்ரீட்மென்டில் செய்யக்கூடிய பேசியல். எதிர்காலத்தில் என்ன பக்க விளைவுகள் வரும் என்பது யாருக்கும் தெரியாது. சரிதான், பெரிய பெரிய பிரபலங்கள் இதை செய்து கொள்கிறார்கள்.

அவர்களுக்கு பக்க விளைவுகள் வந்தால், அதை சரி செய்து கொள்ள வசதியும் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் நமக்கு ஃபேசியல் செய்து கொள்ள காசு சேர்ப்பதே ரொம்ப ரொம்ப கஷ்டம். செய்த பேசியலுக்கு பக்க வளைவுகளை சமாளிக்க வேற காசு செலவு செய்ய வேண்டுமா. அது எல்லாம் வேண்டாம். அந்த பக்கம் போகாதீங்க. இதோ இந்த மாதிரி எளிமையான இயற்கையான அழகு குறிப்புகளை பின்பற்றி பாருங்கள். இதுவே உங்களுக்கு இயற்கையான அழகை சீக்கிரம் கொடுத்து விடும். ஒரே நாளில் உங்கள் நிறத்தை அதிகப்படுத்த ஒரு சூப்பரான அழகு குறிப்பு இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பை படித்து பாருங்கள். பிடித்தவர்கள் முயற்சி செய்தும் பார்க்கலாம்.

- Advertisement -

வெள்ளையாக மாற செலவில்லாத அழகு குறிப்பு:
இந்த குறிப்புக்கு நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை தான் பயன்படுத்த போறோம். நம் சமையலறையில் இருக்கக்கூடிய பொருட்களை தான் பயன்படுத்த போகின்றோம். உளுந்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன், பச்சரிசி 1 டேபிள் ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் சமமாக எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடியாக அரைக்க வேண்டும். கொரகொரப்பாக இருக்கக் கூடாது. அரைத்த பொடியை சலித்து மாவை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த மாவில் இருந்து தேவையான அளவு பவுடரை ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு இதில் 1 ஸ்பூன் கோதுமை மாவு போட்டு பால் மற்றும் தயிர் இரண்டையும் சம அளவுகளில் ஊற்றி இதை கலக்க வேண்டும். ஒரு பேஸ்ட் உங்களுக்கு கிடைத்திருக்கும். இந்த பேஸ்டை முகத்தில் அப்ளை செய்ய வேண்டியதுதான். கொஞ்சம் திக்காக முகம் முழுவதும் இந்த பேக் போட்டுக்கோங்க. கழுத்து பகுதியிலும் போட்டுக்கோங்க. இதே பேக்கை தேவை என்றால் கைப்பகுதிகளுக்கும் நாம் தாராளமாக பயன்படுத்தலாம்.

- Advertisement -

பேக்கை போட்டுவிட்டு 20 நிமிடங்கள் அப்படியே காய விட்டு விடுங்கள். பிறகு கொஞ்சமாக தண்ணீரை தொட்டு நனைத்து, நன்றாக இரண்டு நிமிடம் மசாஜ் செய்தபடி பிறகு முகத்தை கழுவி விடுங்கள். உங்களுக்கே சருமத்தில் நல்ல வித்தியாசம் தெரியும். தயார் செய்த இந்த பேக்கை இரண்டு நாட்கள் மட்டும் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். இதை வாரத்தில் மூன்று நாட்கள் பேக்காக தொடர்ந்து பயன்படுத்தி வர உங்கள் சருமம் நிரந்தரமாக வெள்ளையாக மாறிவிடும்.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு பொருளை முகத்தில் தடவினாலே போதும். முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து முக துவாரங்களும் சரியாகி, பளிங்கு போன்ற சருமத்தை பெற முடியும்.

முகம் கை கால் தவிர உங்கள் உடம்பு முழுவதும் கலராக வேண்டும் என்றால் இதை குளிக்கும்போது உடம்பில் நன்றாக தேய்த்து 5 நிமிடம் ஊறவைத்து குளித்தாலும் உடலில் இருக்கும் சருமம் முழுவதும் நிரந்தரமாக வெள்ளையாக மாறத் தொடங்கிடும். சன் டேனை கூட நீக்கக்கூடிய சக்தி இந்த பேக்குக்கு உண்டு. நிச்சயமாக இது நீங்கள் நம்ப முடியாத நல்ல ரிசல்ட்டை கொடுக்கும் ஒருமுறை பயன்படுத்தும் போதே. அழகு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

சற்று முன்