நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல உணவுப் பொருட்கள் நம்முடைய அழகிற்கும் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றேதான் கூற வேண்டும். உடலுக்குள் எடுத்துக் கொள்ளக்கூடிய எந்த ஒரு ஆரோக்கியமான பொருளாக இருந்தாலும் அதை நம்முடைய சருமத்திற்கும் நாம் பயன்படுத்தும் பொழுது அது மிகவும் நல்ல பலனையே தருகிறது. அந்த வகையில் நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களில் ஒன்றாக திகழக்கூடிய பீட்ரூட்டை வைத்து எப்படி முகப்பொலிவை அதிகரிப்பது என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
முகப்பொலிவைப் பெற பீட்ரூட் கிரீம்
பொதுவாக பீட்ரூட்டை சமையலில் சேர்க்கும் பொழுது பலரும் அதை விருப்பப்பட்டு சாப்பிட மாட்டார்கள். ஏன் ஒரு சில இல்லங்களில் பீட்ரூட் செய்யலாம் என்று வாங்குவார்கள் ஆனால் அதை செய்யாமல் அப்படியே அதை வீணாக்கி விடுவார்கள். இனிமேல் அந்த பிரச்சினை இல்லை. பீட்ரூட்டில் இந்த ஒரு கிரீமை தயார் செய்து தினமும் இரவு படுக்க செல்வதற்கு முன் முகத்தில் தடவி கொடுக்க முகம் பொலிவுடன் ரோஜா பூ போல் தோற்றத்தையும் தரும்.
இதற்கு முதலில் ஒரு பீட்ரூட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் தோலை நீக்க கூடாது. அதை நாம் கேரட் உரசுவது போல் உரசி அதிலிருந்து சாரை மட்டும் தனியாக பிரிந்து எடுக்க வேண்டும். 2 டீஸ்பூன் அளவிற்கு இருப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தயிர், ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு இவை இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இது இப்பொழுது ஒரு பேஸ்ட் பதத்திற்கு வந்திருக்கும் இதை ஒரு ஏர்டைட் கண்டைனரில் மாற்றி வைத்துக் கொள்ளலாம்.
தினமும் இரவு படுக்கச் செல்வதற்கு முன் முகத்தை நன்றாக கழுவிவிட்டு ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த கிரீமை எடுத்து முகத்தில் நன்றாக தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள். பத்து நிமிடம் அப்படியே விட்டுவிட்டு முகத்தை சாதாரண தண்ணீரை ஊற்றி கழுவ வேண்டும். பிறகு எப்பொழுதும் போல் உறங்கச் செல்லலாம். இந்த முறையில் தினமும் நாம் செய்து வருவதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், கருந்துட்டுகள், சூரிய ஒளி கதிர்களால் ஏற்பட்ட கருமை போன்றவை அனைத்தும் நீங்குவதோடு முகம் பொலிவுடன் இளமையாகவும் அதேசமயம் நல்ல நிறத்தையும் தரும்.
இதையும் படிக்கலாமே:இழந்த நிறத்தையும் முகப்பொலிவையும் மீட்க உதவும் ஃபேஸ் பேக்
சமையலுக்கு உபயோகப்படுத்தக்கூடிய பீட்ரூட்டை இந்த முறையில் தினமும் உபயோகப்படுத்தினோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய முக அழகும் மிகவும் சிறப்பாக திகழும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.