ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள நாள்பட்ட மங்கும் மாயமாய் மறைய வைக்கும் அதிசய பொருள்.

- Advertisement -

இந்த மங்கு முகத்தில் கருப்பாக ஆங்காங்கே திட்டு திட்டாகவும் சிலருக்கு மூக்கின் மீது அதிகமாகவும் கருப்பு திட்டு படிந்து இருக்கும். இந்த மங்கு வந்து விட்டால் அவ்வளவு எளிதில் சரி செய்ய முடியாது. முகப்பரு போன்ற மற்ற சரும பிரச்சனைகளை நாம் சரி செய்து கொள்ள முடியும். ஆனால் இந்த மங்கு ஒரு முறை தோன்றி விட்டால் மறைய வைப்பது கொஞ்சம் சிரமமான காரியம் தான்.பெரும்பாலும் இந்த மங்கு அதிகம் வெயிலில் வேலை பார்ப்பவர்களுக்கு வரும். அது மட்டும் இன்றி இது ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் வரும் அதற்கான காரணம் பெண்களின் ஹார்மோன் பிரச்சனைகள் தான். சரியான மாதவிடாய் வராதவர்கள், நாற்பது வயதுக்கு மேல் மாதவிடாய் நின்ற பெண்கள் போன்றவர்களுக்கு இந்த மங்கு பிரச்சனை அதிகமாக இருக்கும். இந்த மங்கு பிரச்சனையை ஒரே ஒரு பொருள் கொண்டு சரி செய்து விடும் பதிவு தான் இது.

இந்த மறையாத மங்கையும் மறைய செய்யும் அந்த ஒரு பொருள் ஜாதிக்காய் தான். எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் இந்த ஜாதிக்காய் கிடைக்கும். இதை பவுடர் செய்து எடுத்து வைத்துக் கொள்ள முடிந்தால் நல்லது. இல்லை என்றால் ஜாதிக்காய் பொடியாக கடைகளில் கிடைக்கும் அதையும் வாங்கி இந்த பேக்கிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த ஜாதிக்காய் வாங்கி வந்து வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் காய்ந்தால் போதும். காய வைத்து பிறகு அதை நன்றாக சிறு சிறு துண்டுகளாக உடைத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். மிக சிறு துண்டுகளாக உடைக்க வேண்டும் இல்லை என்றால் மிக்ஸி ஜார் பிளேட் உடைந்து விடும் வாய்ப்புள்ளது.

இப்போது நீங்கள் வாங்கி வந்த ஜாதிக்காய் பொடியையோ, அல்லது உங்கள் வீட்டில் அரைத்த பொடியோ இரண்டு ஸ்பூன் அளவிற்கு ஒரு கிண்ணத்தில் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் ஆலுவேரா ஜெல், இதில் கலக்க சுத்தமான காய்ச்சாத பசும்பால் தான் வேண்டும். மற்ற பாக்கெட் பால் எதுவும் சேர்க்கக்கூடாது. இந்த நான்கு பொருளையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல குழைத்து மங்கு இருக்கும் இடத்தில் தேய்த்து விடுங்கள். இது குறைந்தது ஒரு மணி நேரமாவது அப்படியே இருக்கட்டும். அதன் பிறகு உங்கள் முகத்தில் மங்கு இருக்கும் இடத்தில் ரவுண்டு ஷேப்பில் மசாஜ் செய்து முகத்தை அலம்பி விடுங்கள்.

- Advertisement -

இப்படி உங்களுக்கு தேன் ஆலுவேரா போன்ற இந்த பொருட்களை உங்கள் முகத்தில் தேய்க்க விருப்பமில்லாதவர்கள் வெறும் ஜாதிக்காய் வாங்கி சந்தனம் இழைக்கும் கட்டை இல்லை உங்கள் வீட்டில் மஞ்சள் இழைக்கும் கல் இருந்தாலும் அதில் பசும்பால் சேர்த்து குழைத்து தேய்க்கலாம். ஆலுவேரா ஜெல் முகத்தில் இருக்கும் ஈரத்தன்மையை தக்க வைக்க உதவும். தேன் முகத்தை இளமையுடன் இருக்க உதவும்.இதையும் சேர்த்து தேய்த்து வந்தால் நல்லது.

அதிக மங்கு உள்ளவர்கள் தொடர்ந்து ஒரு வாரம் தொடர்ந்து போட வேண்டும் அப்போது தான் உங்கள் முகத்தில் இருக்கும் நாள் பட்ட மங்கு சீக்கிரம் மறைய தொடங்கும். விட்டு விட்டு போட்டால் இதற்கான பலன் உங்களுக்கு முழுமையாக கிடைக்காது. இப்போது தான் மங்கு வர தொடங்கி இருந்தால் வாரம் இரண்டு முறை தேய்த்தால் போதும்.

இதையும் படிக்கலாமே: கண்ணை மூடி திறக்கும் நேரத்தில், முகத்தில் இருக்கும் கருமை நிறம் நீங்க 1 தக்காளி பழம் இருந்தால் போதும்.

இது மிகவும் எளிமையான முறை தான் ஜாதிக்காய் ஒரு பொருள் இருந்தால் போதும் மற்றவை எல்லாம் உங்களுக்கு பெரும்பாலும் உங்கள் வீட்டிலே இருக்கும். இந்த பேக்கை போட தொடங்கிய ஒரு வாரத்திலே மங்கு மறைய தொடங்கி இருக்கும் அதிசயத்தை நீங்கள் நிச்சயமாக உணர்வீர்கள்.

- Advertisement -