ஆரோக்கியம் நிறைந்துள்ள ‘முளைக்கட்டிய கோதுமை தோசை’! ஒரு வாரம் இதை சாப்பிட்டா குண்டா இருக்கிறவங்க ஒல்லி ஆகிடலாம்!

wheat-dosai-recipe
- Advertisement -

எந்த ஒரு தானியமாக இருந்தாலும் அதை அப்படியே பயன்படுத்துவதை விட சிறிது முளை கட்டிய பிறகு பயன்படுத்தினால் அதிக சத்துக்கள் நமக்கு கிடைக்கும். சாதாரணமாகவே கோதுமை தோசை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கணிசமாகக் குறைந்து விடும். அப்படியிருக்க முளைகட்டிய கோதுமை தோசை எவ்வளவு சத்துக்களை நமக்கு கொடுக்கும்? சத்துள்ள முளைகட்டிய கோதுமை தோசை எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முளைக்கட்டிய கோதுமை தோசை செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை – 100 கிராம், உளுந்து – 50 கிராம், வெந்தயம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

முளைகட்டிய கோதுமை தோசை செய்முறை விளக்கம்:
நீங்கள் ஒருமுறை கோதுமையை முளைகட்ட செய்து ப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் போதும். ஒரு வாரம் வரை அது கெட்டுப் போகாது அப்படியே ப்ரஷ்ஷாக இருக்கும். தேவையான பொழுது எடுத்து சட்டுனு தோசை செய்து சாப்பிடலாம். முதலில் ஒரு டம்ளர் அளவிற்கு கோதுமையை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதை தண்ணீர் ஊற்றி ஒரு முறை அல்லது இரு முறை கழுவி விட்டு பின்னர் மீண்டும் கோதுமை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் இரவே ஊற வைக்க வேண்டும். அப்பொழுது தான் மறுநாள் காலை வரை நன்கு ஊறி இருக்கும்.

காலையில் எழுந்து கோதுமையில் இருக்கும் தண்ணீரை வடிகட்டிவிட்டு கோதுமையை மட்டும் ஒரு காட்டன் வெள்ளை துணியில் போட்டு கட்டி வைத்து விடுங்கள். எட்டு மணி நேரத்திற்கு அது அப்படியே இருக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் எடுத்து பார்த்தால் அது முளை கட்டி இருக்கும். கோதுமையை முளை கட்டிய பிறகு எடுத்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். அல்லது தேவையான பொழுது செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இப்போது அரை டம்ளர் அளவிற்கு உளுந்து மற்றும் அரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஓரிரு முறை நன்கு கழுவி சுத்தம் செய்த பின்பு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். உளுந்து நன்கு ஊறினால் தான் உபரியாக நமக்கு மாவு கிடைக்கும். மூன்று மணி நேரத்திற்கு பிறகு தண்ணீரை வடிகட்டி உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். இதனுடன் நீங்கள் முளை கட்டி வைத்துள்ள கோதுமையை சேர்க்க வேண்டும். தேவையான அளவிற்கு தண்ணீர் கொஞ்சமாக சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கெட்டியாக மிக்ஸியை இயக்கி அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த இந்த மாவுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். கையால் கலந்தால் சீக்கிரம் மாவு புளிக்கும். குறைந்தபட்சம் 5 மணி நேரம் ஊற வைத்தால் சரியாக இருக்கும். முளைகட்டிய கோதுமை தோசை மாவு இப்பொழுது தயாராகி விட்டிருக்கும். அடுப்பை பற்ற வைத்து அதில் தோசைக்கல்லை காய விட்டு தோசை வார்த்தால் பேப்பர் தோசை போல சாஃப்டாக சூப்பராக தோசை வரும். சத்துள்ள இந்த முளைகட்டிய கோதுமை தோசை தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் எவ்வளவு குண்டாக இருப்பவர்களும், சற்று ஒல்லியாக விடுவார்கள். அதன் பிறகு நீங்கள் டயட் மெயின்டெயின் செய்து கொள்ளலாம்.

- Advertisement -